அந்த மகரிஷிகளின்
அருள் சக்தியை எவ்வாறு பெறவேண்டும்…? என்று யாம் (ஞானகுரு) தொடர்ந்து உணர்த்தினாலும்…
பக்தி கொண்டவர்கள் சிலர்… முனித் தன்மை கொண்ட பாடல்களைப் பாடிப் பழகிக் கொண்டால் அந்தப்
பாடலின் உணர்வுகளே அவர்களுக்கு முன்னாடி வரும்.
1.அது முன்
வரப்படும் பொழுது
2.இங்கே கொடுக்கப்படும்
அருள் ஞான இணைப்பை அது இணைக்க விடாது தடுக்கும்.
முனித் தன்மை
கொண்ட பக்தி மார்க்கங்களிலும்… மதத்தின் அடிப்படையால் அவர்கள் கவிப் புலமையால் எடுத்துக்
கொண்ட உணர்வின் நிலைகளையும் மற்ற பாடலுடன் பதிவு செய்து கொண்டால் அந்தப் புலமைகள் கொண்ட
புலவர்கள் பால் எடுத்துக் கொண்ட உணர்வே முன் நிற்கும்.
இங்கே உபதேசிக்கும்
பொழுது அது முன் எழுந்து நின்று விடும்.
இந்தப் புவியின்
பற்றை அற்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைக்கத் தொடங்கினாலும் அவர்களுக்கெல்லாம்
இணைப்பது மிகவும் கடினம்.
அந்த வகையில்…
பக்தியின் புலமையில் அதிகமாக எடுத்துக் கொண்டோரின் நிலைகளிலும் ஒரு சிலரே மீள்வர்.
நூற்றுக்கு ஒரு பத்துப் பேர் தேறுவதே மிகக் கடினம்.
காரணம்… அவர்கள்
மதத்தின் நிலைகள் கொண்டு ஞானிகள் என்ற நிலைகளும் புலமைகள் பாடியும்… பரிணாம வளர்ச்சியில்
வளர்ந்த உயிரினங்களின் உணர்ச்சியைப் பற்றிப் புலமைகள் பேசினாலும் “அந்தப் புலமைகளே
முன் வந்து எழும்…”
ஆனால் மூலத்தை
இவர்கள் அறியார். மூலமற்ற நிலைகள் கொண்டு வாதிக்கும் நிலையே தான் அவர்களுக்குள் அதிகமாக
விளையும்.
1.வாதிடும்
திறமைகள் உண்டு.
2.ஆனால் மெய்
ஒளி பெறும் உணர்வினை ஏற்றுக் கொள்ளும் மனப் பண்பு வராது.
வாதிடும் திறமைகள்
ஆகப் படும் பொழுது அந்த முனித் தன்மை என்ற நிலையே இங்கே அடையும். இதைப் போன்ற நிலையிலிருந்து
நாம் அனைவரும் விடுபட வேண்டும்.
ஏனென்றால் இந்த
முனித் தன்மை கொண்டோரிடம் வாக்குவாதத் தன்மை அதிகமாகி விட்டால்… “சாமி நமக்குன் இவ்வளவு
சொல்லி இருக்கின்றாரே…!” என்ற நிலைகளைக் கலந்து…
1.எதிர் மறையான
பொறிகள் - ஒரு கல்லுடன் உராயப்படும் பொழுது பொறிகள் எழும்புவது போல்
2.நமக்குள்
வெறுப்பும் வேதனையும் அதிகமாகத் தொடர்ந்து விடும்.
இதனால் நமக்குள்
உறைந்திடும் உணர்வு கொண்டு கலவைகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்துவது போல் நம் உயர்ந்த
குணத்திலேயும் மாற்றம் ஏற்படும் நிலையே வந்துவிடுகின்றது.
ஏனென்றால் பல
நிறங்கள் தனித் தன்மையாக அவை இருப்பினும் அதனுடன் மற்ற நிறத்தை இணைக்கப்படும் பொழுது…
நீங்கள் என்ன தான் வாயிலே சொன்னாலும்… சொல்லச் சொல்ல… அவர்கள் வெறுக்க வெறுக்க… அந்த
மாற்றுப் பொருளாகச் சொல்வார்கள்.
அப்பொழுது உங்கள்
உணர்வுகளும் அதைப் போல மாறுபட்டு நாம் போகும் பாதைக்கே ஒரு தடை விதிக்கும் நிலையாக
வந்துவிடும்.
“இதிலே மிகவும்
கவனம் தேவை…!”
காரணம் அதைப்
போன்ற நிலைகள் வந்தாலும் உங்களுக்குக் காட்டிய அருள் வழி கொண்டு யாம் கொடுத்த…
1.அந்தச் சப்தரிஷிகளின்
அருள் சக்தியைப் பெறவேண்டும்…! என்று எண்ணத்தால் எண்ணி
2.அதைப் பல
முறை எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.அவர்கள் அறியாத
இருள்கள் நீங்க வேண்டும்
4.அவர்கள் மெய்ப்
பொருள் காணும் நிலைகள் பெறுதல் வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
அவர்கள் உண்மையை
உணர வேண்டும்.. நிச்சயம் உணர்வார்கள்…! என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும்.