ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 2, 2020

ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த காவியங்களில் உள்ள மூலப் பொருள்களை (இரகசியங்களை) அறிந்து கொண்டால் நல்லது


நம் கண்ணில் உள்ள கரு விழியில் அந்த மகரிஷிகளின் நினைவாற்றலைக் கொண்டு வந்து தனக்குள் பதிவு செய்யும்போது அந்தக் கரு விழி... ருக்மணியாக மாறுகின்றது - கண்மணி.

அதாவது... கண்ணுக்குள் இருக்கும் மணி நமக்குள் பதிவு செய்யும் நிலைகளாக மாறுகின்றது. அது தான் ருக்மணி....!
1.கண்மணி ருக்மணியாக மாறுகின்றது.
2.பின் அந்த உணர்வின் தன்மையைக் கவரப்படும்போது உண்மையைச் சொல்லும் சத்தியபாமாவாக மாறுகின்றது.

உதாரணமாக ஒரு தீமை செய்பவனை உற்றுப் பார்க்கும்போது “தீமை செய்கின்றான்...” என்ற உண்மையை உணர்த்துகின்றது சத்தியபாமா.

ஆனால் அந்தச் சமயத்தில் தீமையை அகற்றிய உணர்வின் தன்மையை கண்மணியில் பதிவு செய்து புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டப்படும்போது
1.அந்த மகரிஷிகளின் அருள்சக்தி தனக்குள் வலுப் பெறும் நிலையாக உணர்த்தி
2.சத்தியபாமாவாக தீமையை அகற்றும் உண்மையின் நிலைகள் நமக்குள் வளருகின்றது.

அந்த மூலப் பொருளை நாம் அறிகின்றோம்.

மகாபாரதப் போரை குருக்ஷேத்திரப் போரை நடத்தியது யார்...? இந்தக் கண் தான்.

இந்தப் பாரதமான நிலைகள் படர்ந்திருப்பதை... நம் உடலுக்குள் அணுக்களாகப் பதிந்திருப்பதை வழி நடத்திக் கொண்டே இருக்கின்றான் கண்ணன். ஆனால் உயிரான ஈசனோ அதை உருவாக்கிக் கொண்டுள்ளான்.

இதைப் போன்றுதான் நமக்குள் அர்ஜுனன் இருக்கின்றான் நகுலன் இருக்கின்றான் சகாதேவன் இருக்கின்றான். சகாயம் செய்பவனும் இருக்கின்றான். வலிமை பெற்ற குணமும் நமக்குள் இருக்கின்றது.

அது தான் மகாபாரதப் போரில் ஒவ்வொரு குணங்களின் இயக்கங்களை அதனதன் தன்மை கொண்டு ஒருக்கிணைந்து தன் நிலைகளில் வலுப் பெறச் செய்வது. எப்படி..?

1.மிகச் சக்தி வாய்ந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்தோமென்றால்
2.இது அனைத்தையும் அது ஒன்று சேர்த்து
3.நமக்குள் ஒவ்வொரு நிலையும் சகாயமாக
4.வலுவின் தன்மையாக அரவணைத்துச் செல்லும்...!

தர்மர் தன் நிலைகளை இரக்கத்துடன் செய்தாலும் சூழ்ச்சியால் அங்கே அடக்கப்படுகின்றது. அதாவது நல்ல குணங்கள் கொண்டு இருப்பினும் ஏமாற்றுவோர் கையில் தான் நாம் சிக்க முடிகின்றது...! என்று காட்டுகின்றார்கள்.

அவன் சூழ்ச்சிக்குள் சிக்கப்பட்டுத் தன் குடும்பத்தையே அடமானம் வைத்து சூதாடுகின்றான் என்றால்... தன் நிலைகள் அறியாது செயல்படுகின்றது நம் உணர்வலைகள்...!

இது போன்ற நிலைகளில் கோடிக்கணக்கான உணர்வுகள் நமக்குள் உண்டு. அந்த உணர்வுகளில் வலுப் பெற்ற நிலைகளை
1.நூறு பேர் சகோதரர்களாக இருப்பதன் வலிமையும்
2.ஐந்து பேர் சகோதரர்களாக இருப்பதன் வலிமையையும்
3.ஒரு தந்தைக்குப் பின் ஒரு தாய்க்கு வளர்ந்த நிலைகள் இவ்வாறு என்று பிரித்துக் காட்டுகின்றான்.

அதன் வழியில் ஒவ்வொரு நிலைகளிலும் இந்தப் பூமியில் உருவான உணர்வின் தன்மை நமக்குள் எப்படிப் போராக நடக்கின்றது...? என்ற நிலையை அது தெளிவாக்கப்படுகின்றது மகாபாரதப்போராக...!

ஆனாலும் இது அனைத்தையும் வழி நடத்திச் செல்வதே கண்ணன்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்து அதை வைத்துக் குருக்ஷேத்திரப் போராக நடத்தி அந்த தீமைகளை அடக்க வேண்டும். அருள் ஞானியின் உணர்வினை நமக்குள் முன்னணியில் கொண்டு வர வேண்டும்.

1.ஆக... அந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வினைக்கு நாயகனாக்க வேண்டும்.
2.இந்த உடலில் உள்ள அனைத்தையும் அடக்கிடும் அரசனாகக் கணங்களுக்கு அதிபதியாக மாற்றிடல் வேண்டும்.
3.அப்படி மாற்றினால் தான் தீமையின் உணர்வு தனக்குள் வராது
4.எத்தகைய தீமையையும் நீக்க முடியும்...! என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

நாம் அந்த விநாயகரை நாம் எண்ணும்போது துவைதம். அங்கே பார்க்கும் போது ஞானிகள் காட்டிய அருள் சக்தியை நாம் நினைவில் கொண்டு இந்த உணர்வின் தன்மை விண்ணை நோக்கி ஏகி அந்த உணர்வின் வலுவை நமக்குள் சேர்ப்பிக்க வேண்டும்.

சேர்த்து... நம் உடலுக்குள் உள் புகுந்து எதிரியாக இருக்கும் வலிமை மிக்க வாலியை வீழ்த்திட வேண்டும். மகரிஷிகளின் பால் நம் எண்ணம் செல்லும் போது அந்த உணர்வின் சக்தி நமக்குள் வந்து வாலி என்ற எதிரியை... (தீமை செய்யும் உணர்வை) வீழ்த்துகின்றது.

நமது காவியத் தொகுப்புகள் எதுவும் தப்பில்லை. ஆனால் தனித்துப் பிரித்து பார்த்தால் உண்மையைப் பார்க்க முடியாது...!

ஒரு இயந்திரத்தைக் காண்பித்த பின் இது இன்ன வேலை செய்யும் என்று அதை வைத்து விட்டால்... அது தான் முக்கியம்...! என்று அதனை மட்டும் பார்த்தால் என்ன ஆகும்..?

அதனுடன் இணை சேர்க்கும் நிலைகளைக் கவனிக்காமல் இருந்தால் அந்த இயந்திரம் சரியாக இயங்காது.
1.இதிலேதான் தப்பு... இல்லை இல்லை... அதிலே தான் தப்பு...! இருக்க வேண்டும் என்று
2.சரியாகக் கவனிக்காமல் அதை விட்டால் அந்த இயந்திரம் அப்படியே தான் இருக்கும்
3.அதனுடைய முழுப் பலன் கிடைக்காது...!

இதைப் போன்ற போர் முறைகள் வருவது போல் நமக்குள் வரும் தீமையின் செயல்கள் எவ்வாறு இயக்குகிறது..? என்ற நிலையில் அந்த இயந்திரத்தை எப்படி நாம் கண் கொண்டு பார்க்கின்றோமோ... இந்த உணர்வின் இயக்கங்களே நம்மை இயக்குகின்றது... என்ற நிலையில் நம்மை இயக்கும் உணர்வின் இயக்கங்களை அறிய வேண்டும்.

1.ஏனென்றால் ஒவ்வொரு உணர்வுமே வலிமை பெற்றது தான்...
2.இருந்தாலும் அந்த அருள் ஞானியின் உணர்வுகள் அதைக் காட்டிலும் வலிமை பெற்றது.

ஆகவே அத்தகைய சக்தியை மகரிஷிகள் காட்டிய அருள் வழியை நாம் பெறுதல் வேண்டும். அந்தச் சக்தியை நமக்குள் வளர்த்தல் வேண்டும்.

சண்டை போடுபவர்களை எல்லாம் பார்க்கின்றீர்கள்.. சண்டை போடுகின்ற சக்திகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்துள்ளது. சண்டை போடுபவர்களை எல்லாம் உங்களிடம் பதிவு செய்து வைத்துள்ளீர்கள். எண்ணினால் மீண்டும் அந்தச் சக்திகள் அந்து உங்களையும் சண்டை போட வைக்கும்.

இதைப் போல் தான் தீமைகளை நீக்கிய அருள் ஞானியின் உணர்வுகளை உங்களிடம் சொல்கின்றேன்... இது காற்றிலே படர்கின்றது... அதே சமயத்தில் உங்களிடமும் பதிவாகின்றது.

1.உங்கள் எண்ணங்களைக் கிளரச் செய்து ஞானியின் உணர்வை இணைக்கின்றோம்
2.ஒவ்வொரு நிமிடத்திலும் இப்பொழுது நீங்கள் சுவாசிக்கும்போது
3.அந்த ஞானியின் உணர்வை நுகரச் செய்து தீமைகளை அடக்கும் சக்தியை
4.உங்களுக்குக் கிடைக்கப் பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசம்.

நினைவு கொண்டு இதை நீங்கள் பருகுவீர்கள் என்றால் இந்த உணர்வின் வலிமை கூடி உங்களுக்குள் தீமை வராது அதை அடக்கும். சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா...?