ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 26, 2020

இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கையிலிருந்து கொண்டே உயர் ஞான நிலையில் வளர்ச்சியைப் பெற முடியுமா...? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சகலத்தின் சக்தியையும் சகலமாக்கித் தன்னைத்தானே தான் உணரும் உயர் ஞான ஒளி சக்தியாய் உயரும் வழித் தொடருக்கு... எண்ணத்தின் உணர்வு பக்குவ முறை கொள்தல் வேண்டும்.

இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பின் சுழற்சியில் இருந்து விடுபட எண்ணத்தின் வலுவை முதலில் பக்குவ நிலைக்கு நாம் செயல் படுத்துதல் வேண்டும்.

வாழ்க்கையில் இருந்தே நம் தியான முறையை வழிப்படுத்தும் சமமான நற்குண செயல் வழியை எண்ணத்தின் உணர்வு செயல்படும் முறை பக்குவத்தில்
1.உடல் உணர்வில் உந்தப்படும் இல்லற உணர்வின் வழித் தொடர் உகந்ததா...?
2.அந்த உடல் உணர்வின் உந்தலைச் சமப்படுத்தும் பக்குவத்தில் அடக்கும் பக்குவம் உகந்தந்தா...?
3.உடல் இச்சையின் உணர்வின் உந்தலில் எப்படிச் செயல்படுவது...? என்ற வினா ஒவ்வொருவருக்கும் எழும்பலாம்.

அதாவது தாம்பத்ய வாழ்க்கை உகந்த நிலையா...? பிரம்மச்சர்ய நிலையில் உயர்வு நிலை பெற முடியுமா...? என்ற வினா எழும்பலாம்.

ஆரம்ப மனித உணர்வின் வழித்தொடரே தாவர நிலைக்கடுத்த வளர்ச்சி நிலை யாவையும் நீரிலிருந்து உயிர் ஆத்ம ஜீவன்கள் பிறப்பெடுத்து வந்தது.

அதன் பின் (கடல் வாழ்) தாவர இனங்களில் இருந்து வளரும் புழு பூச்சிகள் உடல் உணர்வின் ஆண் பெண் இனச் சேர்க்கையில் வளரும் நிலை இல்லாமல் தாவரங்களின் உஷ்ண அலை வெளிக் கக்கும் அமிலத்தின் பிசின் போன்ற வழுவழுப்பான அமிலத்தின் கெட்டித் தன்மையில் உயிர் அணுக்கள் சிறு புழு பூச்சிகள் உற்பத்தியாகும் நிலை இனச் சேர்க்கையின்றி வளரும் நிலை தான் உண்டு.

நீரிலிருந்து உயிரணு தோன்றும் வளர்ச்சியில் இனச் சேர்க்கையில் ஆண் பெண் என்ற நிலை அபூர்வமாகச் சில இனங்களுக்கு மட்டும்தான் உண்டு.

ஆனால் ஜீவப் பிராணிகள் பெரும்பகுதி இனச் சேர்க்கையின் தொடர்பு கொண்டுதான் இனப் பெருக்கம் செயல் கொள்கின்றது.

இவற்றின் தொடர்பில் மனித உணர்வில் பகுத்தறியும் ஞான வித்தின் முதல் நிலையில்
1.அன்பான உணர்வின் குணம் தான்
2.உந்தப் பெறும் மனித நிலையின் குணத்தின் “முதல் நிலை...”

தன் உணர்வில் உந்தும் இச்சையின் ஆசையில்... உதிரத்தில் பிறக்கும் உயிர் ஜீவனே அந்த அன்பின் உணர்வுத் தொடரில் பிறக்கும். அன்பின் ஆசை நிலை அதற்கடுத்த நிலை.

உதிரத்தில் அன்பின் உணர்வு கொண்டு பிறக்கும் சிசுத் தொடரில்
1.ஆசையும் பாசமும் தன் உணர்வின் இச்சையிலேயே பிறக்கா விட்டால்
2.எஜ்ஜீவ சக்தியையும் எந்த ரிஷிகளாலும்... ஆதிசக்தியாலுமே... வளர்க்க முடியாது.
3.அன்பின் எண்ண உணர்வில் ஆசையின் பாசமில்லை என்றால் மனிதன் என்ற நிலையே உருவாகாது.

உயர் ஞான நிலைக்கு மனித உணர்வின் எண்ணத்தைச் சம குணப்படுத்தக் கூடிய வழி முறைக்கு வயது முதிர்ந்தவர்கள் தான் செயல்படுத்த முடியுமா...? சிறுவர்களும் புதிதாக மணமான  தம்பதியர்களும் எப்படி அந்நிலை பெற முடியும்...? என்ற வினா எழும்பலாம்.

நாம் எடுக்கக்கூடிய தியான உணர்வின் ஆரம்ப உணர்வே... அன்பென்னும் ஆசையில்... பாசம் கொண்டு வளர வேண்டிய வழித் தொடரில் தான்... சத்திய நிலையின் ஜீவனை வளர்க்க முடியும்,

1.தம்பதியர்களின் உணர்வுகளில் உடல் உணர்வில் அன்பின் ஆசை கொண்டு பிறக்கும் சிசுவின் பாசம் எப்படி வளர்கின்றதோ
2.வாழ்க்கையில் உண்ண உறங்க உடுக்க எப்படி சம நிலை குணங்களைப் பக்குவப்படுத்தச் சொல்லிப் போதனைப்படுத்தினோமோ
3.மணமான சிறு வயது தம்பதியர்கள் அவர்களின் வம்சத்தின் கொழுந்து பிறக்கக்கூடிய காலத்திலேயே
4.எப்படி உடல் உணர்வில் சிசு பிறக்கின்றதோ அதைப் போல் ஆத்ம ஐக்கிய உணர்வு கொண்டு இரு எண்ணங்களும் ஒன்றுபோல் ஆகி
5.உயர்ந்த ஞானத்தின் உணர்வுடன் ரிஷிகளின் தொடர்பால் எடுக்கும் தியானத்தின் மூலம்
6.ஆத்ம ஐக்கிய உணர்வில் இரண்டு ஆத்மாக்களும் இணையக் கூடிய பக்குவ நிலை பெற்று
7.சாதாரண வாழ்க்கை நிலையில் ஆத்ம உயிருக்கு நம் அன்பின் ஆசையின் ஜீவன் தந்து பிறக்கும் குழந்தையைக் காட்டிலும்
8.ஆத்ம ஐக்கியம் கொண்டு ரிஷிகளின் தொடர்பில் எடுக்கும் ஜெபத் தொடர்பின் அலை ஈர்ப்பினால்
9.புது மணம் கொண்ட தம்பதியரின் ஈர்ப்பில் உயர்ந்த ஞான வித்தின் ஆத்ம உயிர்களுக்கு ஜீவன் தரும் பாக்கியத்தைப் பெற முடியும்.

இப்பூமியில் பிறப்பெடுத்து ஞானத்தின் வழியில் சித்து நிலையால் உயர்ந்த ரிஷிகளுக்குப் போக முடியாத பல நல்ல ஆத்மாக்கள் இன்றும் உள்ளன. அந்த உயர்ந்த ஆத்மாக்களுக்கு மீண்டும் ஜீவன் கிடைக்கச் செய்யலாம்.

நாமெடுக்கக்கூடிய (தாய் தந்தை) ஆத்ம ஐக்கியத்தால் எடுக்கும் உயர் குணத்தைக் கொண்டு அத்தகைய ஆத்மாக்களுக்கு... தான் பெற முடியாத ரிஷி சக்தியின் செயலைச் செயலாக்கி வழிதரக் கூடிய நிலையை...
1.ஒவ்வொரு தம்பதியரும் ஆத்ம ஐக்கியத்தில் நல்ல உணர்வின் செயல் வாழ்க்கையால்
2.இப்பூமியைப் பக்குவப்படுத்தக் கூடிய இல்லற உணர்வின் இச்சையின் ஆசைக்கு
3.உடல் உணர்வின் உந்தலைப் பக்குவப்படுத்தும் நிலை செயல்படுத்தலாம்.

வாழ்க்கை வழிமுறையில் துறவறம் என்ற பிரமச்சரிய முறையால் ஆண்டவனை அடைய முடியுமா...? உயர்ஞான வாழ்க்கைக்கு எம்முறை உகந்தது...? என்ற வினா எழும்பலாம்.

உணர்வின் எண்ண குணத்தைச் சமப்படுத்தும் பக்குவத்தால்... ஒவ்வொரு நாளும் இப்பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து ரிஷிகளின் எண்ணத்துடனும்... விண்ணின் ஆற்றலைப் பெறும் எண்ணத்துடனும்
1.எண்ணத்தின் உணர்வைத் தினசரி எடுக்கக்கூடிய தியான முறையில்
2.உணவின் இன்பம் அனைத்தும் ஏகாந்தத்தின் இன்பத்தை உணரும் பக்குவ இன்பத்தில்
3.இனிமை சுரக்கும் அன்பின் ஆசை உணர்வு கொண்டு பெறப்படும் பக்குவத்தில் ஆத்ம ஒளியே ஒளிரும் நிலை பெற்றுவிட்டால்
4.உடல் உணர்வின் இச்சை எச்சுவையையும் தனித்து எடுக்கக்கூடிய ஏக்கத்தின் உணவிற்கு
5.நம் எண்ணத்தின் உணர்வே செல்லாது (இதை அனுபவத்தில் பார்க்கலாம்).

ஏகாந்தத்தின் இன்பத்தை நுகரும் பக்குவத்தை... ஆத்ம ஐக்கியத் தொடர்பு கொண்டு... இரண்டு ஆத்மாக்களுக்கும் ஒரே எண்ணத்தின் வழிப்படுத்தும் வழி முறையில் கிடைக்கும் ஆத்ம ஐக்கிய ஒளியால்... எச்சிருஷ்டியையும் சிருஷ்டிக்கவல்ல தன்மையைப் பெறலாம்.

ஆனால் இரண்டு எண்ணங்களின் குண நிலை மாற்றப்பட்டு ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் ரிஷி சக்தியின் தொடர்பில் அதைச் சீர்படுத்தும் பக்குவ நிலையாக ஜெப ஈர்ப்பில்
1.ஒருவர் மேல் ஒருவர் எண்ணத்தைச் செலுத்தி
2.ஆத்ம ஐக்கிய உயர் ஞானம் பெற வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டே
3.இரு நிலையையும் ஒரு நிலையாகக்கூடிய தன்மைக்கு
4.நிச்சயம் செயல்படுத்திட முடியும்.