“பல நூறு டன்
எடையுள்ள மணலிலிருந்து” விஞ்ஞானத்தின் செயலில் ஒரு அவுன்ஸ்க்கும் குறைவான சில ரசாயன
சக்தியை (URANIUM) மனிதன் பிரித்தெடுத்து இவ்வுலகத்தையே அழிக்கவல்ல வெடி குண்டுகளைச்
செய்விக்கின்றான்.
மனிதனின் எண்ணமும்
செயலும் எப்படித் தன் ஞானத்தைச் செயல்படுத்திச் சில சக்தி வாய்ந்த அழிவு நிலைக்கு உட்படுத்தும்
குண்டுகளை உருவாக்குவது போல்
1.எண்ணத்தின்
உணர்வை மாற்றியமைக்கும் உயர் ஞானத்தைக் கொண்டு
2.இவ் உடலின்
ஒவ்வொரு அணுவையுமே வீரியத் தன்மைக்கு
3.சம உணர்வு
கொண்டு பரிமளிக்கும் செயலினால்
4.மனிதன் தெய்வ
நிலை கொண்டு வளர் சக்திகளை உருவாக்க முடியும்.
விஞ்ஞானத்தில்
மனிதக் கருவையே உருவாக்கக் கூடிய ஞானமும் செல்கின்றது. தாய் தந்தை இல்லாமல் அமிலச்
சேர்க்கையின் உயிரணு வளர்ச்சி கொண்டு, ஜெட பிம்ப வளர்ப்பிற்கு விஞ்ஞானம் செல்கின்றது.
ஆனால் செயலின்
பலன் எதிர் நிலையான உணர்விற்குச் சென்று விடும். அப்படி உருவாகும் சிசுக்கள் மனிதனைக்
காட்டிலும் வீரிய விஷச் சக்தி கொண்ட பிம்பமாய்த்தான் செயல்படுத்த முடியும்.
இந்தப் பூமியில்…
விஞ்ஞானத்தில் தன் ஞானத்தை இக்கலி கடைசியில் இன்றெப்படி மனிதன் செயல்படுத்துகின்றானோ
அதற்கு மேல் வீரிய சக்தி கொண்டு வியாழனில் இருந்த மனிதர்கள் அன்று செய்தார்கள்,
1.நம் பூமியில்
இப்பொழுது வளர்ந்துள்ள விஞ்ஞானத்தைக் காட்டிலும்
2.பல மடங்கு
வீரியத் தன்மை கொண்ட விஞ்ஞானச் செயல்
3.பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே செயல்பட்டதுண்டு.
4.அந்தச் செயலின்
தொடர் இன்றளவும் சில நிலைகளில் தொடர் கொண்டுதான் உள்ளது.
தன் ஞானத்தின்
உயர் ரிஷி சக்தியை… மனித உணர்வு வளரும் செயலுக்கு
1.தியானத்தில்
சம உணர்வு கொண்டு எடுக்கப்படும் உயர் காந்த மின் சக்தியைக் கொண்டு
2.இஜ்ஜீவகாந்த
சரீரத்தின் உயிர் ஆத்மா பெறும் உயர்வுதான்
3.ஒளியின் ஒளியாய்
எதையும் வளர்க்கும் பிம்பச் செயலுக்குச் செயல்படுத்த முடியும்.
பரப்பிரம்மமாய்..
பிம்பமாய்… பரப்பிரம்மமாகச் செயல் தொடர் பெற.. எண்ணத்தின் உணர்வைக் கொண்டு இஜ்ஜீவகாந்தம்
உயர் காந்த மின் ஒளியாய் ஒளி பெறும் தன்மை கொண்டுதான் ரிஷி சக்திக்குச் செல்ல முடியும்.
எண்ணத்தின்
உணர்வை இச்சரீர கர்ம காரியத்தில் பொருளீட்டி… உண்டு… உறங்கி… கழித்து… வாழும் வாழ்க்கையில்
இச்சரீர ஆசையை வைக்காமல்… எண்ணத்தின் உணர்வை உயர் ஞானத்தில் உய்யும் வழியை உணர்ந்தே…
ஒளி பெறல் வேண்டும்.
வாழ்க்கையில்
எவ் அலை சுவையை இவ்வெண்ண உணர்வு பெற்றதோ அதன் உந்தலுக்குகந்த இச்சையில்தான் நாம் வாழுகின்றோம்…
வாழவும் முடியும்.
ஆனால் மனிதனின்
உயர்ந்த தத்துவ சக்தியைக் கொண்டு ஞான ஒளி பெறும் வளர்ச்சிதானப்பா உயர்ந்த வளர்ச்சி…!
1.எல்லா உயிரனங்களிலும்
உயர்ந்த நிலை கொண்ட இம்மனிதக் கரு வளர
2.சமமான எண்ணம்
கொண்ட சாந்த உணர்வுடன் கூடிய ஜெபத்தால் பெறும்
3.உயர் காந்த
மின் சக்தியின் அணுக்களைக் கொண்டு
4.இவ்வுயிர்
அணுக்கள் ஒவ்வொன்றையுமே உயர்வு நிலை பெறச் செய்ய முடியும்.