தன் ஞானத்தின் வலுவை வலுப்படுத்தி… உயர் தியானத்தால் ஒளி சக்தியின் சக்தியை
வலுப்படுத்தியதின் உண்மைத் தன்மை யாது…? (எதற்கு) என்பதை அறிதல் வேண்டும்.
ஒவ்வொரு செயலிலும் ஒன்று வளர்ந்து… அது மாறிப் பிறிதொன்றாய் வளர்ந்து தொடர்
நிலை கொள்கின்ற வளர்ச்சி பெறும் உருவக அமிலத்தன்மையில்… பொருள் நிலை மாறினாலும் மூல
ஒளி நிலை பெற்ற உயிர் அணு எவையுமே மடிவதில்லை…!
உயிர்களுக்கு என்றுமே அழிவில்லை…! ஆகையினால்..
1.ஒளி நிலை பெற்ற அந்த உயிரணுக்களின் கூட்டுச் செயல் நிலை வளர்ந்தால் தான்
2.அத்தொடரின் வலுவில் வலுவாகக் கூடிய மண்டல வளர்ச்சி உருப் பெற உரம் தர
முடியும்.
அமிலமாய்… உருவாய்… ஆவியாய்… உருவாகும் உருத்தொடரின் உயிரணுக்களில்… வீரிய
நிலை பெற்ற வளர்ச்சி உரு முதிர்வு நிலை என்பது “மனித உணர்வின் எண்ண ஓட்டச் செயல் நிலைதான்…!”
இச்செயல் நிலையையும் ஜீவ சரீரத்தில் எண்ணத்தின் வளர்ப்பு கொண்டுதான்
வலுப்படுத்திக் கொள்ள முடியும்.
அத்தொடரின் அழியா நிலை பெற… அன்று மாமகரிஷியாக உயர்ந்த மனிதன் தன் வலுவைக்
கூட்டிக் கொள்ள மனித அறிவில் தன் உணர்வைச் செலுத்தி வளர்ச்சியுறத்தக்க நடைமுறை
செயலுக்கு அன்று உள்ள மனித ஜனத்தொகை மிக மிக சொற்பம்… மிருக
உணர்வின் தொடர்பில் உயர் ஞான எண்ணச் செயல் குறைவு,
அதன் தொடரில் தன் உயிராத்மாவிற்கு உயர் நிலை பெற தாவர இனத் தொடர்பில் தன்
சரீரத்தைப் பல பக்குவங்களுக்கு உட்படுத்திக் “காயகல்ப சித்தி” பெற்றார்கள்.
ஆனால் இக்கலியில் நாம் இன்று வாழக்கூடிய வாழ்க்கைத் தொடரிலேயே….
1.எச்சக்தியையும் பெறக்கூடிய வலுவிற்கு
2.அன்று பெற்ற ரிஷி சக்திகளின் எண்ணமுடன் நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி
3.அவர்களின் தொடர்பலையை நம் ஜீவகாந்த சரீரத்திற்குச் செலுத்தச் செலுத்த
4.உயிரின் பரிமாணமும் உயிரணுக்களின் பரிமாணமும் கூடக் கூட
5.இவ்வாத்மாவின் ஒளி வட்டம் தன் இயக்கச் செயலினால்
6.தனித்து இயங்கும் ஒளி சக்தியின் வலுவைச் சிறுகச் சிறுகப் பெருக்கிக்
கொள்ள முடியும்.