ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 22, 2020

ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?


இந்த மனித வாழ்க்கையில் எத்தகைய இன்னல்கள் வந்தாலும்...
1.இந்த வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகள்  நமக்குள் “அது பெரிது... இது பெரிது என்ற நிலையை உதறித் தள்ளிவிட்டு
2.நாம் பெறும் மெய் வழியே பெரிது…! என்றும்
3.நாம் செயல்படுத்தும் செயல்களினால் பிறர் மகிழ...
3.அவர்களின் மகிழ்ச்சியை நாம் பார்ப்பதே நமக்குப் பெரிது...! என்றும்
4.அந்த மகிழ்வான உணர்வால் நமக்குள் விளையும் அந்த ஒளியின் தன்மையே நமக்குப் பெரிது...! என்றும்
5.இந்த மகிழ்ச்சியின் ஓட்டத்தையே நாம் ஒவ்வொரு நிமிடமும் பெற வேண்டுமென்றும்
6.இந்த எண்ணத்துடனேயே நம் வாழ்க்கையை வழி நடத்திட வேண்டும்,

ஏனென்றால் இப்படி எந்த உயர்ந்த நோக்குடன் இந்தக் கருத்துக்களை உற்று நோக்குகின்றீர்களோ அந்த மெய் ஞானிகள் சென்ற மெய் வழியை நீங்கள் எளிதில் பெற முடியும்.

இங்கே உபதேசிக்கும் மெய் ஞானிகளின் எண்ண ஒளிகள் உங்களுக்குள் பதிய வேண்டுமென்றால் அதைப் பெற வேண்டும் என்று எந்த அளவுக்கு நீங்கள் ஏங்கிச் சுவாசிக்கின்றீர்களோ அது எல்லாம் உங்களுக்குள் அருள் ஞான வித்துக்களாகின்றது.
1.உங்கள் உயிருக்குள் இது பட்டு...
2.அந்த மெய் ஞானியின் உணர்வின் அலைகளை உங்களுக்குள் ஓங்கச் செய்யும்.

ஆகவே இங்கே கொடுக்கும் உபதேசங்களை நீங்கள் வரிசைப்படுத்தி எண்ணிப் பாருங்கள். உங்களை நீங்கள் நம்புங்கள்... எளிதில் நீங்கள் அதைப் பெற முடியும். உங்களுக்குள் ஒளியான உணர்வை வளர்க்க முடியும் ஏனென்றால் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவர்கள் தான் நாம்.

ஒரு பலகாரம் செய்யும்போது அதைப் பக்குவப்படுத்திச் சுவை கொண்டதாக ஆக்குவது போன்று
1.நமக்கு முன்னாடி படர்ந்திருக்கும் மெய் ஞானியின் அருள் சக்திகளை
2.தியானத்தால் எடுத்து அதைச் சுவாசித்து அதை வலுவாக்கிக் கொண்டால்
3.நம் சொல்லுக்குள் இனிமையும் செயலில் புனிதமும் பெறும்
4.அந்த ஆற்றலின் தன்மை நாம் பெற்று. நாம் மகிழலாம்
5.நம் மூச்சு பிறரை மகிழச் செய்யும்... நலம் பெறச் செய்யும்... இன்புறச் செய்யும்.

இதைப் போல நாம் ஒவ்வொன்றும் பெறுவோம்...! என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.