தன்னைத்தான்... தான்...
தான் உணர்ந்து...
தன்னைத்தான்... தான் நம்பி
தன்னைத்தானே... தான் வளர்த்து...
தன் வழியின்... வழியறிந்து
தன் வழியை... தான் அமைத்து...
தன் உயர்வை... தான் வளர்க்க
தன்னில் தான்... இறை உணர்ந்து...
தன்னையே தான்... இறையாக்கி
தனதான இறை உயிரை...
தன்னில் தானே... இருள்
அகற்றி
தன்னில் தானே... ஒளியாகலாம்...!
மனிதன் தன்னைத்தான் தான்
உணர்ந்து... தன் வழியில் தன்னை நம்பி...
1.உண்மை நிலையை அறிந்து
2.தன் உயர்வை வளர்த்துக்
கொள்ள
3.இப்பூமியில் மனித உணர்வு
எண்ணம் செயல்பட்ட காலத்திலேயே
4.சித்தர்களும் சப்தரிஷிகளும்
பல உண்மையை உணர்த்தியும் செயல்படுத்தியும் காட்டினர்.
ஆதிசங்கரின் காலத்தில்
அத்வைதத் தத்துவப்படி... மனிதன் உணர்வின் எண்ணத்தை உயர் ஞானமாக்கி... உயரும் மார்க்கத்தை
அணுவுக்குள் அணுவாக உணரும் பக்குவத்தை மனிதனுக்கு உணர்த்தினார்.
அதன் தொடரில் மனிதன் தன்னைத்தான்
தான் நம்பி உயரும் பக்குவத்தை அவருக்கு அடுத்த நிலை நான்கு வகை வேதங்களாக்கி தன் வாழ்க்கை
நிலைக்கு ஒத்த சௌகரியப்படி காலப்போக்கில் மாற்றி விட்டனர்.
1.வேத மந்திர உச்சரிப்புகளும்
பலி பீட மந்திரங்களும் பல வழியில் பிரிக்கப்பட்டு
2.மகரிஷிகளினால் வழிப்படுத்தப்பட்ட
தன்மைகள் எல்லாம்
3.மத வழிகளிலும் அரசாட்சியின்
பிடிப்புக்கொப்ப மாற்றப்பட்ட தன்மையினால்
4.இன்று தெய்வத் தன்மையின்
உண்மை நிலையையே அறிய முடியாமல் போய்விட்டது.
இன்றைய காலப்போக்கில் “பூஜையும்...
பக்தியும்...” வழி தெரியாத முறையில்
மனிதனின் நாட்டங்கள் சென்று கொண்டிருக்கும் சிதறுண்ட இத்தன்மையை மாற்றி
1.மனிதன் முதலில் தன்னைத்தானே
தான் உணர்ந்து
2.தன்னை நம்பி... தன் வழியை
மெய் அறிந்து...
3.உயர வேண்டிய ஒளித் தன்மையின்
சத்தியத்தின் உண்மை நிலை அறிந்து செயல்பட வேண்டும்.