ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2020

நம் மனதை மங்கச் செய்யாதபடி தங்கமாக்கச் செய்யும் அருள் சக்தி


அன்று மகரிஷிகள் எந்த அருள் வழியைக் காட்டினார்களோ அதன் வழியில் நம் உள்ளத்தைத் தங்கமாக்க வேண்டும்.

தங்கம் என்ன செய்கின்றது...? தங்கத்திற்கு என்ன குணம் இருக்கின்றது..?
1.தங்கம் எதிலையும் அது மாசுபடுவதில்லை.
2.அதாவது வெள்ளி செம்பு போன்று அதனுடைய நிறம் கருப்பதே இல்லை.

அதைப் போன்று தான் அந்தத் தங்கத்தைப் போன்று ஒவ்வொரு எண்ணத்தையும் உயர்ந்ததாக ஆக்கிக் கொண்டால்
1.ஒருவர் நம்மைத் திட்டினாலும் நம்மை
2.நல்ல எண்ணத்திலிருந்து மாசுப்பட்டு நம்மை அழிக்காது.

இதைத் தான் மனதைத் தங்கமாக்குவது என்று சொல்வது…! ஏனென்றால் தங்கத்தில் உள்ள அழுக்கு நிற்குமோ...? நிற்காது… அதனுடைய நிறத்தை மாற்றாது.

நம்முடைய உணர்வின் நிலைகளை பிறர் நம்மைச் சங்கடப்படுத்துகின்றார்கள்… நம்மைப் பழித்துப் பேசிவிட்டார்கள்..! என்ற இத்தகைய உணர்வுள் வந்து விட்டால் செம்பிலேயோ வெள்ளியிலேயோ அழுக்குப்பட்ட மாதிரி உள்ளே மறைந்து விடுகிறது.

அது பக்கு பக்காக நீங்கள் தேய்க்க தேய்க்கத் தேய்ந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்தத் தங்கத்தினுடைய நிலைகள் மாசில்லாத  நிலைகளாக இருக்கப்படும் போது பளிச்… என்று பளபளப்பாக… இருக்கும்.

நம் நல்ல எண்ணத்திற்குள் பிறர் சொல்லும் துன்பமான எண்ணங்கள்… இருள் சூழும் நிலைகள் வந்து விட்டால் உடனே இங்கே இந்த ஞானத்தை ஊட்டும் நிலைகள் மறையும். நாம் அறிந்து இந்த அந்த இருளை எப்படி மாற்றுவது…? என்ற அந்த எண்ணத்தை அகற்றிவிடும்.

அப்படி ஆகாமல் மாற்றுவதற்குத்தான் இப்பொழுது யாம் உபதேசிக்கும் ஞானிகளின் அருள் உணர்வு கொண்டு
1.மனதைச் சுத்தப்படுத்துவோருக்கு ஆத்ம சுத்தி என்ற நிலைகள் கொண்டு
2.ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துச் சுத்தப்படுத்தி
3.மாசுபடும் நிலைகளை மாற்றி நமக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு உணர்வின் எண்ணத்தையும் தங்கமாக மாற்ற வேண்டும்.

இது தான் கொங்கணவர் தன் மனதைத் தங்கமாக்கிய நிலைகள். ஆகையினால் அதே மாதிரி நீங்களும் செயல்படுத்துங்கள்.
1.உங்கள் வாழ்க்கையில் செல்வம் வரும்
2.உங்கள் மனதில் மகிழ்ச்சி வரும்
3.உங்கள் சொல்லிலும் செயலிலும் தெளிவும் வரும்.