இன்று விஞ்ஞான அறிவுப்படி எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக்
(ELECTRIC, ELECTRONIC) என்று பதிவாக்குகிறார்கள்.
நமது உயிர் எலெக்ட்ரிக்கை உருவாக்குகின்றது
சூரியனும் எலெக்ட்ரிக்கை உருவாக்குகின்றது.
அதன் இயக்கச் சக்தியினுடைய நிலைகள் அது பூமியில்
படரப்படும்போது அதை இந்தப் பூமியில் விளைந்தை உணர்வின் சத்தை அது எதைக் கவர்ந்ததோ
அதை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
ஆகவே, இன்று மனிதனாக இருக்கும் நாம் நம் மனித உடலிலிருந்து
வெளிப்படும் உணர்வினை இதே சூரியனின் காந்தச்சக்தி கவர்ந்தால்
இந்த மனித உடலில் உருவான
அந்த உணர்வின் உணர்ச்சிகளை இயக்கும்
இந்தச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால்
அதை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
அதன் உணர்வின் இயக்கமாக மாற்றுகின்றது.
இப்பொழுது நான் பேசுகின்றேன் (ஞானகுரு) என்றால் நான் பேசிய உணர்வுகளை சூரியனின்
காந்தப் புலனறிவு கவர்ந்தால் எலக்ட்ரானிக்காக மாற்றுகிறது.
படிக்காதவன் நான் சொல்கிறேன். நான் சொல்வது புரியவில்லை என்று
விட்டுவிடாதீர்கள்.
பதிவின்
நினைவுகள் எதுவோ
அது
நினைவின் நிலையைக் கவர்கின்றது.
இசையை சிறு குழந்தைகள் கேட்டால் அது பதிவான பின் தன்னையறியாமலே
அந்தக் குழந்தைகள் ஆடத் தொடங்கும், பாடத் தொடங்கும்.
அந்தக் குழந்தைகள் படிக்கவில்லை.
ஆனால், ரேடியோவையோ டி.வி.யையோ உற்றுப் பார்க்கின்றது. அந்த உணர்வின் இசையைக்
கவர்ந்து கொண்டபின் அந்த உணர்வுகொப்ப குழந்தைகள் ஆட்டங்கள் ஆடுகிறது.
குழந்தைக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும் பாட நிலை இல்லையென்றாலும் சிறிதளவே பதிவானபின் அந்தக் குழந்தை
பேசத் தொடங்கியவுடன் இந்தப் பாடலை எளிதாகப் பாடுகிறது.
இது குழந்தைப் பருவம்.
ஆனால் ,
பெரியவர்களான நாம் பலவிதமான உணர்வுகளை மாற்றிக் கொள்கிறோம். பல உணர்வுகள் நமக்குள்
கலக்கும்போது சிந்திக்கும் தன்மைகள் இழக்கப்படுகிறது.
குழந்தைப் பருவத்தில் அத்தகையை நிலைகள் இல்லை.
குறுகிய உணர்வுகளும்
பார்க்கின்ற உணர்வுகளையும்
பதிவாக்கிக்
கொள்ளும்போது
அதனுடைய சிந்தனனை அதன் வழிகளிலே செல்லப்படும்போது
அதை இயக்கும் சக்தி பெறுகின்றது.
ஆனால், பெரியவர்களாக இருக்கும் நாம் அதைக் காண முடிவதில்லை.
“சாமி எதை எதையோ சொல்கிறார்…, நமக்கெல்லாம் இது எங்கே
புரிகிறது”. இன்றைய வாழ்க்கைக்கு இது தேவையா? நம்மால் இவ்வாறெல்லாம் செய்ய முடியுமா?
கடைப்பிடிக்க முடியுமா? என்று எண்ணிணீர்கள் என்றால் யாம் பதிவாக்கக்கூடிய அருள் ஞானிகளின்
உணர்வுகளை நீங்கள் தள்ளி விடுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
அதற்குப் பதில், சாமி சொல்வதெல்லாம் நமக்குள் ஆழமாகப் பதிவாக வேண்டும் என்ற நிலையில்
உற்று நோக்கினீர்கள் என்றால் விண்ணின் ஆற்றலைப் பெற\முடியும்.
ஒளியின் சரீரமாக வாழ்ந்து
வளர்ந்து கொண்டிருக்கும் அருள் உணர்வுகளை உங்களுக்குள் எளிதில் பெற முடியும்.
அதன் துணை கொண்டு இந்த
வாழ்க்கையில் வரும் எத்தகையை தீமைகளிலிருந்தும் இன்னல்களிலிருந்தும் நீங்கள் விடுபட
முடியும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
எமக்குக் கொடுத்தது அனுபவப் பாடம் தான். அவர் எனக்கு எதையுமே பாட நிலைகளில் கொடுக்கவில்லை.
உங்களைப் போல நான் பாடங்களையும் புத்தகங்களையும் படிக்கவில்லை.
எல்லாமே இந்தக் காற்று
மண்டலத்தில் அலைகளாகப் படர்ந்துள்ளது அருள் மகரிஷிகளின் உணர்வலைகளும் இந்தக் காற்றிலேதான்
படர்ந்துள்ளது என்று உணர்த்தி குரு எமக்குள் பதிவாக்கினார்.
எனக்குள் அவர் பதிவாக்கிய
நிலைகளை நினைவுக்குக் கொண்டு வந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து எனக்குள்
விளைய வைத்தேன். குருநாதர் உபதேசித்த நிலைகளை என்னால் உணர முடிந்தது. தீமைகளை அகற்ற
முடிந்தது. ஒளியாகவும் மாற்ற முடிந்தது
அதே வழியில் தான் உங்களுக்குள்ளும்
இப்பொழுது பதிவாக்குகிறோம். ஆஅகவே, யாம் பதிவாக்கும் அருள் உணர்வின் தன்மைகளை
நீங்கள் நினைவுக்குக் கொண்டு
வந்தால்,
அதைப் பெறவேண்டும் என்று
நீங்கள் இச்சைப்பட்டால்,
அதை உங்களுக்குள் வளர்க்க
வேண்டும் என்று இச்சைப்பட்டால்
உங்கள் உயிர் அதை உங்களுக்குள் உருவாக்கும்.
சிறிது காலம் பழகிக் கொண்டால்
உங்களுக்குள் உருவான அந்த அணுக்கள் தன்னாலே இயங்கி அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க நிலைகளை
உங்களுக்குள் பெறச் செய்யும். இதில் சிரமம் ஒன்றுமில்லை.
உங்களுக்குள்
பதிவு எதுவோ
அது இயங்கி நினைவாகி
அந்த எல்லைக்கே அழைத்துச் சென்று
அந்த அருள் சக்திகளைப் பெறச் செய்யும்.
ஒவ்வொரு நாளும் இதை வளர்க்க
வளர்க்க, நீங்கள் செல்லும் பாதை உங்களுக்கே புலப்படும்.
அருள் மகரிஷிகளின் அருள்
வட்டத்தில் நீங்கள் வாழ்வீர்கள். பேரின்ப பெருவாழ்வு பெற்று பேரானந்த நிலையாக அழியா
ஒளியின் சரீரம் நீங்கள் பெறுவீர்கள்.
இதன் வழி கொண்டு அருள்ஞானிகளின் அருள் சக்திகளைப் பதிவாக்கிக் கொள்ளும்
அனைவருக்கும் எமது அருளாசிகள்.