நான் தனித்துக்
காட்டிற்குச் சென்று தவமிருப்பேன் என்றால் நம் உடலே பெரும் காடு தான். புலி கரடி
எல்லாமே நமக்குள் உண்டு.
புலியாகப் பிறந்தோம், யானையாகப் பிறந்தோம், நரியாகப்
பிறந்தோம் தேளாகப் பிறந்தோம், பூச்சியாகவும் பிறந்தோம்.
இத்தனை உணர்வுகள் நமக்குள் காத்துக் கொள்ளும் உணர்வுகளாக
இந்தக் காட்டிலே விளையும் தாவர இனங்களை உணவாக உட்கொண்டு அதனதன் தசைகளை வளர்த்துக் கொண்டது.
இதைப் போல தன்னை வளர்த்துக் கொள்ளும் உணர்வுகள்
கொண்டு இணைந்து வாழ்ந்து இந்த உணர்வின் தன்மையை இணைந்து இன்று காட்டைப் போலத்தான் பல
உணர்வின் தன்மை கொண்டது.
தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மை
மனிதனாகப் பிறக்கச் செய்ததுதான்.
ஆகவே, இதற்குள் இந்தக் காட்டிற்குள் எங்கே தனித்து உட்கார்ந்தாலும் நீங்கள் தப்ப முடியாது. நமக்குள் புலியும் இருக்கின்றது,
கரடியும் இருகின்றது.
ஒரு மனிதன் கோபமாகப் பேசியிருந்தால் இந்த உணர்வு
வரும். அதற்கு சாப்பாடு வேண்டும். அப்பொழுது இந்தக் கோப உணர்வுகள் என்ன செய்யும்?
அமைதியாக ஜம் என்று உட்கார்ந்திருப்பார்கள். கொஞ்ச
நேரம் ஆன பிற்பாடு என்ன நடக்கும்? யாராவது நம்மைக் குறை கூறியிருந்தால் அந்த எண்ணம்
வரும்.
“நான் சிறிது நேரம் கோபமான உணர்வைச் சாப்பிட்டுக்
கொள்கிறேன்.., நீ இரு..,” என்ற நிலையில் அது வேலை செய்யும்.
பையன் மேல் பாசமாக இருப்போம். நாம் இவ்வளவு தூரம்
சொல்கிறேன், சம்பாரித்து வைத்துள்ளேன். ஆனால், இவன்
இப்படி செய்கிறானே என்று பையன் மேல் அந்தக் கோபம் வரும்.
நான் ஒருமித்த நிலையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
ஆனால் முடியவில்லை என்பார்கள். எந்தச் சாமியாராகப் போனாலும், குடும்பத்தைத் துறந்துவிட்டுச்
சென்றாலும் இந்தக் காட்டுக்குள் (நம் உடலான) இருந்து தப்பிக்கவே முடியாது.
அதனால் தான் “சீதா ராமா” என்ற நிலையில் சீதாவும், இராமனும் காட்டுக்குள் சென்றார்கள். ஆனால், இந்த எண்ணத்திற்குள்
எந்த சீதா ராமனாக இருக்கவேண்டும்?
சுவை மிக்க உணர்வுகள் சுவையாக
என்றும் சுவைத்திட்ட உணர்வு கொண்டு
சுவையான
அந்த மகரிஷியின் உணர்வை - “சீதா”
அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்து - இராமனாக
நம் சொல்லின்
நிலைகளும் நினைவின் ஆற்றலும் இருக்க வேண்டும்.
ஒருவன் தூய்மையற்றுப் பேசுகிறான் என்றால் அந்த மகரிஷியின்
அருள் சக்தி பெறவேண்டும் என்ற இந்தச் சுவையைக் கூட்டிக் கொண்டு இதைத் தூய்மைப்படுத்த
வேண்டும்.
ஆகவே, இதைச் சித்திரபுத்திரனாக்கி அதனின் உணர்வின்
பாசமாக அதை நாம் தொடர வேண்டும். அந்தக் கயிறின் தன்மை கொண்டு நாம் எமனுக்குத் தண்டனை
கொடுக்கும் நிலையாக
நீ அல்ல – சீவலிங்கம் உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
ஒரு உருவத்தை அமைத்து மார்க்கண்டேயனைக் காட்டினார்கள்
ஞானிகள்.
என்றும்
பதினாறு என்ற நிலை அடைவதற்கு மார்க்கண்டேயன் ஆவடையை உடலைப் பற்றிக் கொள்ளவில்லை. உயிரைப்
பற்றிக் கொண்டான்.
ஒரு சித்திரத்தை எழுதி படிப்பறிவில்லாத பாமர மகனுக்கும்
புரியும்படி இவ்வாறு உணர்த்தியுள்ளார்கள். இதை நாம் புரிந்து கொள்ளாது அபிஷேகம், ஆராதனை,
சாங்கியம் என்ற நிலைகளில் சீர் குலையச் செய்துவிட்டோம்.
இதிலிருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்குத்தான்
மீண்டும் இதை நினைவுபடுத்தி குரு கொடுத்த நிலைகளில் சித்திரபுத்ரனாக்கி அந்தக் கணக்கின்
பிரகாரம் நம் எண்ணம் அந்தச் சொல்லாக வெளிப்படுகிறது.
அந்தச் சொல்லின் நிலைகள்தான் சீதாராமா, உங்களுக்குள்
ஊடுருவி இந்த உணர்வின் நினைவாற்றலாக உந்தச் செய்வது.
ஒருவர் காரமான சொல்லைச் சொல்லும்போது உங்களுக்குள்
உணர்ச்சியாகி கோபம் வருகிறது.
அதே சமயத்தில் அந்த மெய்ஞானி உணர்வின் தன்மையை அந்தச்
சுவையை சீதாராமா - இப்பொழுது உபதேச வாயிலாக அந்தச் சொல்லாகச் சொல்லும்போது அருள்ஞானியின் உணர்வுடன் உங்களை ஒன்றச் செய்கிறோம்.
இந்த வாழ்க்கையில் நீங்கள் என்றுமே உங்கள் நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கி ஏகி அந்தச்
சித்திரபுத்ரனின் கணக்கின் பிரகாரம்
உயிருடன் ஒன்றிய நிலையாக
ஒளி பட்டபின் இருள் நீங்குவது போல
உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி
என்றும் நிலை கொண்டு வாழ்ந்திட வேண்டும் என்பதற்குத்தான்
உங்களுக்குள் இதைத் தெளிவாக்குகின்றோம்.