வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் நம்மிடம் வாங்கிய ஒருவர் கடனைக் கொடுக்கவில்லை என்றால் நாம் என்ன செய்யவேண்டும்?
சரியான நேரத்தில் கொடுக்கவில்லை என்றால் நாம் அதட்டிக் கேட்கிறோம்.
அதற்கு அவர் என்ன சொல்கிறார்?
“உன்னால் முடிந்ததைப் பார்..,” என்கிறார்.
ஏனென்றால், அப்பொழுது
அங்கே பக்குவம் தவறும் போது இந்த மாதிரி ஆகிவிடுகிறது.
அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
அவருக்கு நல்ல வருமானம் வர வேண்டும், வாங்கிய பணத்தை அவர் நமக்குத் திருமபக் கொடுக்க வேண்டும் என்று நாம் தியானிக்க
வேண்டும்.
தியானித்துவிட்டு அவரிடம் “உனக்குப் பணம் வரும், எனக்குக் கொடுப்பாய்” என்று இப்படிப்பட்ட சொல்களைச் சொல்ல வேண்டும்.
அப்பொழுது அவருக்கும் தொழில் சீராகிறது.
நமக்குக் கொடுக்கும் நிலை வருகிறது.
மாறாக, சொன்னபடி அவர்
நமக்குப் பணம் கொடுக்கவில்லை. நம்மை ஏமாற்றுகிறார் என்று எண்ணி நாம் வேதனைப்பட்டால்
என்ன ஆகும்?
“இப்படிச் செய்கிறார்களே..,”
என்று இங்கே நாம்
வேதனைப்படுகிறோம். இந்த வேதனையான
உணர்வலைகள் அவரைப் போய்த் தாக்கும்.
நம்மிடம் பொருள் வாங்கியவரும்
பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்.
ஆனாம், நம் உணர்வுகள்
அங்கே இயக்கி அவரது தொழிலையும் கெடச் செய்யும். அப்பொழுது அவரும் பணத்தைத் திரும்பக்
கொடுக்க முடியவில்லையே என்று எண்ணி அதனால் வேதனைப்படுவார்.
ஆக மொத்தம் நம் தொழிலில் கெடுகிறது.
இந்த உணர்வுகள் நமக்குள்
அதிகரித்த பின் நோயாகிறது.
இதைப் போன்ற நிலைகள் நம்மையறியாமல் இயக்குகிறது.
நம்மையறியாம இயக்கும்
இத்தகையை தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும். பரிபக்குவ நிலையைப் பெற நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.
எங்களிடம் பொருள் வாங்குவோர்
அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சிப்
பழகுதல் வேண்டும்.
இதனால் பொருளைப் பயன்படுத்துவோர்
நன்மை அடைவார்கள். அந்த நன்மையினால் அவர்கள் தொழிலும் முன்னேற்றம் அடைவார்கள். நம்
பணமும் உரிய நேரத்தில் வந்து சேரும்.
இவையெல்லாம் உங்கள் வாழ்க்கையில் அருள் வழியில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்.