ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 18, 2015

நம் எண்ணங்களை ஒன்று சேர்த்தால் என்றுமே சந்தோஷமாக இருக்கும்

நாம் காலையிலிருந்து இரவு படுக்கப்போகும் வரை எத்தனையோ பேர்களைப் பார்க்கின்றோம். எத்தனையோ விதமான வேதனைப்படுபவர்களையும், சங்கடப்படுபவர்களையும், கோபப்படுபவர்களையும், ஏமாற்றுபவர்களையும் நாம் பார்க்க நேர்கிறது.

இந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் ஓம்.., நம சிவாய, ஓம்.., நம சிவாய என்று சதா சிவமாக நம் உடலாக மாறிக் கொண்டேயிருக்கிறது. நம் உயிர் உடலுக்குள் அவைகளை உருவாக்கிக் கொண்டேயுள்ளது.

ஆனால், நாம் எதைச் சிவமாக்க (உடலாக்க) வேண்டும்?

நாம் தீமைகளை மறந்து பேரருளின் உணர்வை நமக்குள் சேர்த்து சிவமாக்கி எல்லோருக்கும் அந்த நல்ல நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வை உடலாக்கினால் நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் அதுதான் கலயாணராமா..
நம் எண்ணங்கள் ஒன்று சேர்த்தால்
என்றைக்குமே சந்தோஷமாக இருக்கும்.

இராமாயணத்தில் ஜனக சக்கரவர்த்தி சீதாவை திருமணம் செய்ய சுயம் வரத்தை ஏற்படுத்துகிறார்.

எல்லோரும் வருகிறார்கள். அவரவர்கள் திறமையைக் காட்டுகிறார்கள். திறமையைக் காட்டினால் சீதாவைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று காட்டுகிறார்கள்.

அப்பொழுது இராமன் என்ன செய்கிறான்? தீமை செய்யும் அந்தக் காண்டீபத்தையே ஒடித்துவிடுகின்றான்.

ஏனென்றால், காண்டீபம் என்பது நம் உடலில் கெட்டதை ஒடிப்பது என்றால் அவ்வளவு சாமானியமானதல்ல.

இராமாயணத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

தீமை செய்யும் காண்டீபத்தை இராமன் ஒடித்துவிடுகிறான். அப்பொழுது சீதாவை அரவணைத்துக் கொள்கிறான்.

சீதாவை அரவணைக்கும்போது “கல்யாணராமா”. பிறர் மேல் உள்ள வெறுப்பான குணத்தை நாம் நீக்கிவிட்டால் அந்த வெறுப்பான உணர்வுகள் நீக்கியபின் இரண்டு எண்ணங்களும் ஒன்றாகி விட்டால் கல்யாணராமா.

நம் உடலிலிருக்கும் தீமையை நீக்கி பிறர் மேல் இருக்கும் வெறுப்பான உணர்வை நீக்கிவிட்டு பிறர் நல்லாக வேண்டும் என்று எண்ணிவிட்டால் நம் உடலுக்குள் ஒன்று சேர்த்து வாழும்.

நமக்குள் இருக்கும் எண்ணங்களை எப்படி ஒன்று சேர்க்க வேண்டும்?
பகைமை உணர்வு வளராதபடி எப்படித் தடுக்க வேண்டும்?
என்று தான் கோவில்களிலே உருவம் அமைத்து அருவ நிலையைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஞானிகள் காட்டிய நிலைகளை நாம் இப்படி நினைக்கிறோமா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.