ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 14, 2015

5. ஞானகுரு உபதேசத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள நுண்ணிய உணர்வுகள்

பட்டுச் சேலை கட்டினால் வரும் வேதனையின் உணர்வுகள்
பட்டுப் புழு கூட்டைக் கட்டி உள்ளே சிக்கிக் கொண்டு காற்று புகாதபடி தன்னை அடைத்துக் கொள்கிறது.

பின் வெளி வராதபடி முடியாத நிலையில்
உடல் வெப்பத்தினால் ஒலி அலைகளை ஏங்கிச் சுவாசிக்கும்போது
உடல் சுருங்கி
பட்டுப் பூச்சியாக மாறுகிறது.

பட்டுப் பழுவின் கூட்டைச் சுடு தண்ணீரில் போட்டு அந்த நூலை எடுத்து பட்டுச் சேலையை நெய்கின்றார்கள். அந்தப் பட்டுச் சேலையைக் கட்டிப் பாருங்கள். உடலில் ஒரு வித காந்தலாக சூடு வரும்.

ஆனால், நூல் சேலையைக் கட்டினால் அந்தச் சூடு வராது.

ஏனென்றால், சுடு தண்ணீரில் போடும்போது அந்த பட்டுப் புழு அது எப்படி வேதனைப்பட்டதோ அந்த வேதனைகள் நமக்கு இங்கே வரும்.
ஆட்டைக் கொல்பவரின் நிலையும், அதைப் பார்த்து இரக்கப்படுவோரின் நிலையும், ஆட்டை ரசித்துச் சாப்பிடுவோரின் நிலையும்
உதாரணமாக வியாபாரத்திற்காக ஆட்டை அறுத்துக் கொண்டிருப்பார்கள்.

ஆட்டை அறுப்பவனோ வேதனைப்படுவதில்லை. எத்தனை ஆட்டை அவன் கொன்றானோ
ஆட்டின் உயிர்கள் அவனுக்குள் புகுந்து
மனிதராகப் பிறக்கும் தகுதி பெறுகிறது.

ஆனால், சிலர் மாமிசம் சாப்பிடுவதில்லை. ஆட்டை அறுப்பதை இவர்கள் பார்க்கும்போது இரக்கத்துடன் பார்க்கின்றார்கள்.

இரக்கத்துடன் பார்க்கும்போது ஆடு எப்படித் துடித்ததோ, வேதனைப்பட்டதோ அந்த உணர்வுகள் ஆட்டின் பாவ அலைகளாக அவன் உடலுக்குள் வந்துவிடுகிறது.

உயிர் இந்த வேதனைகளை இரக்கப்பட்டவன் உடலில் நோயாக மாற்றிவிடுகிறது.

அதே சமயத்தில், ஆட்டை ரசித்துச் சாப்பிடுபவர்களின் உடலில் ஆட்டின் வாசனை அதிகமாக இருப்பதால் உடலை விட்டுப் பிரியும் அந்த ஆன்மா ஆட்டின் ஈர்ப்புக்கு அழைத்துச் சென்று ஆடாக உருவாக்கிவிடுகிறது உயிர்.

இவை எல்லாம் இயற்கையின் சில நியதிகள்
விஞ்ஞான உலகில் மனிதன் சிந்தனை மிருக நிலையாகும் நிலை
சீனாவில் மனிதர்கள் இன்று கருச்சிதைவு செய்து அந்தச் சிசுவை உணவாக உட்கொள்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளிலும் இந்த நிலை வந்துவிட்டது.

ஆக, ஒரு பூனை குட்டி போட்டால் அதில் ஒரு குட்டியை உணவாக எடுத்துக் கொள்வது போல் மனிதனுடைய சிந்தனை அனைத்தும் மிருக நிலைகளாக மாறிடும் நிலை இந்த விஞ்ஞான உலகில் வந்துவிட்டது