ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 19, 2015

“உயிருக்கு” மதமுமில்லை, இனமுமில்லை, எத்தகையை பேதமுமில்லை

இன்று ஒவ்வொரு செடிகளிலும் மற்ற மற்ற அணுக்களை இணைத்து புதுப் புதுச் செடிகளை மனிதன் உருவாக்குகின்றான். அதே போன்று, மற்ற மிருகங்களின் அணுக்களை இணைத்து மிருகங்களையும் உருமாற்றுகின்றார்கள் விஞ்ஞானிகள்.

அதே சமயத்தில் ஜோதிடம் ஜாதகம் என்று அதர்வண வேதத்தில் ஒன்றை அடிமைப்படுத்தும் நிலைகள் கொண்டு மதங்களை உருவாக்குவதற்காக மதங்களின் கீழ் உணர்வின் வேதங்களைக் கற்பித்து அந்த வேதத்தின் உணர்வுக்கு ஜீவனூட்டுகின்றார்கள்.

அதாவது அவர்கள் சொல்லும் செயலை நமக்குள் அந்த உணர்வில் பதியச் செய்து பதியச் செய்து அதனின் உணர்வுகள் “மதம்” என்ற இனத்தைப் பிரித்துக் கொள்கின்றனர்.

மாற்று மதத்தைக் ஊன்று குவிக்கும் உணர்வை ஊட்டுகின்றனர். இந்த உணர்வின் செயலாக்கமாகவே மாறுகின்றது.

ஓர் செடி ஒரு உணர்வின் சத்தைத் தனக்குள் இணைத்துக் கொண்டபின் வேறு ஒரு செடியின் தன்மையை தன் அருகிலே விடாது.

தனது சத்தின் தன்மை கொண்டு வலுவான வித்தை உருவாக்குவது போல மதத்தின் பெயரால் வேதங்களைச் சொல்லி வேதத்தின் நிலைகள் கொண்டு சாஸ்திரங்களை உருவாக்குகின்றனர்.

சாஸ்திரங்கள் என்பது இன்னது இன்னென்ன காலங்களில் இன்னென்னது செய்யவேண்டும் என்று விதிகளை அமைத்து விதியின் உணர்வு கொண்டு மதங்களில் பதியச் செய்துள்ளார்கள்.

அப்படிப் பதிவு செய்த வித்துதான் நமக்குள் மதங்களாக உருவாக்கப்பட்டு இதனின் நிலைகள் கொண்டுதான் நாம் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளோம்.

ஏனென்றால், ஒரு விஷச் செடி ஒரு செடியின் தன்மையை பல செடிகளாக உரு உருவாக்கப்படுவது போல பல உயிர் அணுக்களில் பல அணுக்களை இணைக்கப்படும் போது உடல்களை உருவாக்குவது போன்று இந்த உணர்வுகள் இயக்கி அந்த உணர்வின் தன்மையை வளர்க்கின்றார்கள்.

இவையெல்லாம் மதத்தால் உருவாக்கப்பட்ட உணர்வுகள்.

இதிலே நாம் எந்த நினைவினை நாம் பதிவு செய்கின்றோமோ அதன் வழி தன் மதத்தினை வளர்த்திட மற்ற மதத்தினை அழித்திட இங்கே கற்பிக்கும் உணர்வுகள் என் மதம் உயர்ந்தது என்ற நிலையே வருகிறது.

ஆக, தன் மதம் உயர்ந்தது என்ற நிலைகள் கொண்டு மற்றதைத் தாழ்த்தி இந்த உணர்வின் தன்மை தனக்குள் வளர்க்கப்படும்போது
எந்த மதத்தையும் காப்பதில்லை.
அதிலிருக்ககூடிய ஒழுக்கமும் அழிந்து விடுகின்றது.
ஆக, அழித்திடும் உணர்வே அங்கே விளைகின்றது.

இதைத்தான் நாம் இன்றைய சாதாரண வாழ்க்கையில் சிருஷ்டிக்கிறோம் என்பதை குருநாதர் தெளிவாக உணர்த்துகின்றார்.

இந்த மதங்களின் பிடிப்பிலிருந்து நாம் தப்புதல் வேண்டும். ஆகவே, நமக்கு எது மதம் வேண்டும்?

நம் உயிர் தான் நமக்குள் கடவுள் என்றும் அந்த உயிரின் தன்மைதான் ஒவ்வொரு உடலையும் உருவாக்குகிறது என்ற நிலையும் இந்த உணர்வின் தன்மையைத்தான் நமக்குள் இணைத்திடல் வேண்டும்.

ஒவ்வொரு மதத்திலும் அந்தத் தீமைகளின் நிலைகள் அறியாத நிலைகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். இந்த உண்மைகளை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெறவேண்டும் என்ற நினைவினை அங்கே இணைத்திடல் வேண்டும்.

இவ்வாறு இருந்தால்தான் இந்த மனித நிலைகளில் நாம் மதத்தில் சிக்காது தப்ப முடியும்.

உள் நின்று இயக்கிக் கொண்டிருக்கும், எண்ணியதை உருவாக்கிக் கொண்டிருக்கும்உயிருக்கு” மதமுமில்லை, இனமுமில்லை, எத்தகைய பேதமுமில்லை.

பல கோடிச் சரீரங்களிலிருந்து நம்மை மனிதனாக உருவாக்கிய உயிருக்கு மதத்தின் பெயராலேயோ, இனத்தின் பெயராலேயோ நாம் எத்தகைய தீமையையும் உருவாக்கிவிடக் கூடாது.