1. பல கோடி தீமைகளிலிருந்து விடுபட்ட
“தீமைகளை
நீக்கிய அந்த எல்லா நினைவையும்” எனக்குத் தா ஈஸ்வரா
“நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில்
எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய்
ஈஸ்வரா”.
இந்த உடலில் உயிர் இல்லை என்றால்
நான் என்ற நிலை இல்லை.
விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்குள் வந்து புழுவாக
முதலில் உடல் பெறுகிறது. பின் தன் வாழ்க்கையின்
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீமைகளிலிருந்து
விடுபடவேண்டும் விடுபடவேண்டும் என்ற
உணர்வுகளை எடுத்து எடுத்து பரிணாம வளர்ச்சி அடைந்தது.
இப்படிப் பல கோடித் தீமைகளிலிருந்து விடுபட்டு இன்று நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது
நம் உயிர். ஆகவே, அப்படி உருவாக்கிய உயிரிடம் நாம் வேண்டுகிறோம்.
எதை?
முதலில் புழுவாக உடல் பெற்றதிலிருந்து இந்த மனித உடல் பெறும்
வரையிலும்
பல கோடித் தீமைகளிலிருந்து விடுபட்ட
“தீமைகளை நீக்கிய அந்த எல்லா நினைவும்”
எனக்கு வேண்டும் ஈஸ்வரா
என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டுகிறோம்.
இப்படிப் பல கோடித் தீமைகளிலிருந்து விடுபட்ட அந்த நினைவின் ஆற்றல்
கொண்டு எங்கள் வாழ்க்கையில் இனி வரும் எத்தகையை தீமைகளிலிருந்தும் நாங்கள் விடுபடவேண்டும்
ஈஸ்வரா.
2. டி.வி.யைத் திருப்புவது போல் - யாம் பதிவாக்கிய அருள்
உணர்வுகளை எண்ணினால் அது பல விதமான சுவைகளைக் கூட்டும்
டி.வி யைக் கண்டுபிடித்தவன் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்தான்
அந்த டி.வி. மூலமாக இருந்த இடத்திலிருந்து பல அலைவரிசையில் வைத்து நாம் அதைக் காணுகிறோம். ஒன்று பிடிக்கவில்லை என்றால் மற்றொன்றை மாற்றி அதை
நாம் ரசித்து மகிழ்கின்றோம்.
அதைப் போன்று யாம் சிரமப்பட்டு பல
காடு மேடெல்லாம் அலைந்தோம்.
நம் குருநாதர்
காட்டிய அருள் வழியில் தீமைகள் நமக்குள் எப்படி வருகிறது? நம்மை அது எப்படி
இயக்குகிறது? தீமைகளிலிருந்து எப்படி மீளவேண்டும்? என்று பல யாம் அனுபவங்களைப்
பெற்றோம்.
தீமைகளிலிருந்து
மீள ஞானிகளின் அருள் சக்திகளைப் பெற்றோம். அதை எமக்குள் வளர்த்தோம். அதை அருள்ஞான வித்துகளாக இந்த
உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் பதிவாக்குகிறோம்.
அப்பொழுது நீங்கள் டி.வி. யைத் திருப்பி வைப்பது போல் யாம் பதிவாக்கிய அருள் உணர்வை எண்ணினால் அது உங்களுக்குள் பல விதமான சுவையான அருள் சக்திகளைக் கூட்டும்.
தீமைகளைலிருந்து
விடுபடச் செய்யும் பல
உபாயங்களும் மார்க்கங்களும் உங்களுக்குள் “உதயம்” ஆகும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் சந்தர்ப்பத்திற்கொப்ப
அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் இணையும்.
பகைமை ஊட்டும் உணர்வுகளிலிருந்தும்,
தீமைகளிலிருந்தும் நோய்களிலிருந்தும் விடுபடும் ஆற்றல் உங்களுக்குள் பெருகும்.
மன பலம்
பெறுவீர்கள். மன நலம் பெறுவீர்கள்.
உங்கள் அனுபவத்தில்
நீங்கள் பார்க்கலாம்.