ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2015

தனித்த (ஒரு) சக்தி எங்குமே கிடையாது - கட + உள் = கடந்து உள்ளே பார்த்தால் எல்லாவற்றிலும் அது உண்டு

உலகம் எவ்வாறு உருவானது? சூரியன் எவ்வாறு உருவானது? உயிரணு எவ்வாறு உருவானது? தாவர இனங்கள் எவ்வாறு உருவானது? என்று நமது காவியங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

இவ்வாறுதான் உயிரணுக்குள் தோன்றி ஒரு உணர்வின் தன்மை ஆகி அது உணர்வின் எண்ணங்கள் வரப்படும்போது இங்கே திரேதாயுகத்தில் நாராயணன் சீதாராமனாகத் தோன்றுகிறான்.

அதாவது ஒரு தாவர இனத்தின் சத்தை சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றும்போது சீதாலட்சுமியாக மாறுகின்றது.

அந்த அலைகளை ஓர் உயிரணு நுகர்ந்து உணர்வின் அணுவாக மாறி தன் உடலாக மாற்றப்படும்போது திரேதா – சரீரம். சரீரயுகத்துக்குள் எண்ணங்கள் உருவாக்கி உணர்வின் செயலாக அது இயக்கப்படுகின்றது என்ற நிலையை திரேதாயுகத்தில் நாராயணன் சீதாராமனாகத் தோன்றுகின்றான் என்று தெளிவாக்குகின்றது நமது காவியங்கள்.

அடுத்து, அந்த உயிரணு தான் நுகர்ந்து கொண்ட உணர்வின் தன்மை கொண்டு எந்தத் தாவர இனச் சத்தை அது நுகர்ந்ததோ அதன் மணத்தை எண்ணத்தால் எண்ணி அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு நகர்ந்து சென்று தாவர இனத்தை அது புசிக்கின்றது

ஆனாலும் தான் கண் இல்லாதபோது மணத்தால் நுகரப்படும்போது மற்ற எதிர் நிலையான நிலைகளை நுகரப்படும்போது தீமையின் உணர்வுகளை நுகரப்படும்போது அதனால் வேதனைப்படுகின்றது.

இதில் இருந்துதான் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் அதற்குள் உதயமாகின்றது உருபெறுகின்றது உணர்ச்சிகள் தூண்டுகின்றது.

தான் எந்தத் தாவர இனத்தின் சத்தாக இது உருவாகியதோ அதனையே நல்ல எண்ணங்கள் கொண்டு அதனையே எடுத்துக்கொள்ளும்.

ஆகவே அதைத் தனக்குள் அறிய முடியவில்லை என்று எண்ணும்போது இரு நிலைகள் மோதும்போது இந்த உணர்ச்சிகள் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தூண்டுகின்றது.

ஆனாலும், தான் பார்க்க முடியாத நிலைகள் கொண்டு மற்ற தாவர இனங்களை அது நுகர்ந்து அந்த வேதனை உருவாக்கும் அணுக்களாக உருவாக்கிவிடுகிறது.
அவ்வாறு உருவாகும் இந்த அணுக்கள்
முதலே உருவான அணுக்களைக் கொன்றுவிடுகின்றது.

அப்பொழுது அந்த வேதனையான உணர்வின் எண்ணங்கள் உருவாகி அதன் நிலைகளில் அணுக்கள் உருவாகின்றது

எப்படி நெகட்டிவ் பாசிட்டிவ் என்று விஷத்தின் தன்மை கொண்டு சூரியன் இயக்குகின்றதோ, இதைப்போல
தனக்குள் எதிர்மறையான அணுக்கள் மோதலில்
இந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்ற
இந்த உணர்வின் ஏக்கமும் அங்கு புதியதாக உருவாகின்றது,

மோதலில் ஒளித்தன்மை ஆவது போல இந்த உணர்வின் தன்மை நினைவின் ஆற்றல் பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது அந்த உணர்ச்சியின் தன்மை பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள்
இந்த உடலிலே இரண்டும் எதிர் நிலையாகி
இந்த உணர்வின் தன்மை இந்த உடல் மடிந்து
உணர்வுகள் எண்ணத்தால் உருவாக்கப்பட்டு
இணைந்து கொண்ட நிலைகள் கொண்டு
மாற்று உருபெறுகின்றது பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

இவ்வாறு இந்த உயிரின் தன்மை தனக்குள் எடுத்துக்கொண்டபின் கலவையின் தன்மைகள் மாறுகின்றது

எப்படி கோளின் தன்மைகள் அது உருபெறப்பட்டு அதனுடைய வளர்ச்சியின் தன்மை கொண்டு நட்சத்திரமாகி, நட்சத்திரத்தின் தன்மை கொண்டு சூரியன் ஆகின்றதோ இதைப்போல இந்த எண்ணத்தின் தன்மை கொண்டு மோதலில் இந்த உணர்வின் ஒளி அலைகளைத் தனக்குள் எடுத்து பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் அங்கே இயற்கையில் உருபெறுகிறது.

ஆகவே, கடவுள் என்ற தனித் தன்மை இல்லை

சந்தர்ப்பத்தால் மோதும் உணர்வுகள் அந்த உணர்ச்சியைத் தூண்டும் நிலைகள் இவ்வாறு பல சரீரங்களில் உருபெற்ற உணர்வுகள் அணுக்கள் மாற்றமாகி மாற்றமாகி அதனின் தன்மை கொண்டு இந்த உணர்வின் ஒலியை ஒளியாக உருவாக்கும் கருவின் தன்மை உருவாகின்றது.

சூரியன் தனக்குள் எடுத்துக் கொண்ட ஒளிப்பிழம்புகளை அது வெளிப்படுத்தும்போது அதனால் இங்கே இருக்கக்கூடிய பொருள்களைக் காண்கின்றோம்.

அந்த உணர்வின் ஒளி அலைகளைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வு உந்தி உந்தி அதற்குத் தகுந்த உணர்வுகள் உணர்ச்சிகள் உருவாக்கப்பட்டு, இந்த உயிரின் இயக்கத்தால் வாசுதேவனுக்கும் (உயிர்) அந்த ஈர்ப்பின் தன்மை கொண்டே தேவைக்குத் (தேவகி) தான் பார்க்க வேண்டும் என்ற அந்த சக்தியின் துணை கொண்டு இந்த இரு உணர்வுகள் சேர்த்து துவாரகாயுகத்தில் நாராயணன் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் இரு சக்தியும் அது இணைந்து அந்த உணர்வின் தன்மை கொண்டு காக்கும் உணர்வின் கண்களாக உருவானது

இருள் சூழ்ந்த நிலைகளில் (இருளான உலகில்) இருந்து
தன்னை மீட்டிக் கொள்ள
தான் கண்டுணர்ந்து செயல்படும் தன்மையை
இந்த துவாரகா யுகத்தில் கம்சனை - இருளை மாய்க்க,
இருளிலிருந்து தன் தாய் தந்தையைக் காக்க
நாராயணன் கண்ணனாகத் தோன்றினான்.