மனிதன்
தன்
ஆசைகளில் வரப்போகும் பொழுது
நாம் போகும் பாதைகள்
எத்தனை?
எத்தனையோ
பேர் இந்தச் சாமியார்
கொள்ளையடிக்கின்றார், மற்ற
மந்திரவாதி சாமியார்கள் சொன்ன மாதிரி இருக்கின்றார்
என்று என்னை ஏசுகின்றனர், பழிக்கின்றனர், எத்தனையோ தொல்லைகளும்
கொடுக்கின்றனர்.
ஆனால்,
அதை நான் காதில்
வாங்கிக் கொள்வதில்லை.
அப்பொழுது
மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும்.
அவர்கள் உண்மையின் உணர்வை அறியும் தன்மை பெறவேண்டும் என்று
தான் நான் சொல்கின்றேன்.
ஆனால்,
அவர் ஏசுகின்ற உணர்வுகளை எனக்குள் விட்டால், நான் இப்படி விரலை
நீட்டினாலே அவரைத் தூக்கி
எறியக்கூடிய சக்தி உண்டு.
இருந்தாலும் அதைப் பயன்படுத்தினால் உண்மையின் இயக்கத்தைக்
காண முடியாது.
இந்த
உணர்வின் தன்மை கொண்டு
அவரை அடக்க முடியும்.
ஆனால்,
அதே வெறியின் தன்மை எனக்குள் உருவாகும்.
இதை
இரண்டையும் சந்தர்ப்பத்தால் உருவாக்கப்பட்டு
"நீ எப்படி வாழ வேண்டும்?"
இந்த
மனிதனின் உடலுக்குப் பின்
பெறவேண்டிய வீரிய சக்தி
எது?
தீமைகள் தாக்கிடாது பாதுகாக்கும் உணர்வு
எங்கு இருக்கின்றது?
துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெறப்படும் பொழுதுதான் இதையெல்லாம் நீ பெறமுடியும்
என்று
உணர்த்துகிறார் குருநாதர்.
ஒருவன்
எனக்கு எதிரியாக இருக்கின்றான்
என்று உணர்வைப் பாய்ச்சி
அவனைத் தூக்கியெறிந்து அவனைத்
துன்புறுத்தும் நிலை வந்தால்
அதே உணர்வு
உனக்குள்
நல்ல அணுக்களைத் தூக்கி
எறிந்துவிடும்.
துன்புறுத்தும் உணர்வே உனக்குள் விளையும்.
சக்தி
எதுவாக இருந்தாலும் நுகர்ந்த உணர்வு உடலுக்குள் இருந்து இயக்கப்படும்பொழுது உன் உடலிலே
அது தான் இயக்கும்.
ஆகையினால், நீ இதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அனுபவப்பூர்வமாகக் கொடுக்கின்றார் குருநாதர்.
இவ்வளவு
சக்தியையும் இதற்குத்தான் உன்னைப்
பயன்படுத்தச் சொன்னேனே தவிர உனக்குள்
வலுவான சக்தி கொண்டு
அந்த வலுவான உணர்வைப் பெற்று
தீமைகளைத் தூக்கி எறிந்துவிட்டு
அருள்
உணர்வை உனக்குள் பெருக்கி
பிறவியில்லா நிலை அடைவதே உனது கடைசி நிலை
என்று தெளிவாக்கினார்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.