ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 7, 2015

நம்மைக் காக்கும் ஆறாவது அறிவின் சக்தியை நாம் நேசிக்க வேண்டும் (காதலிக்க வேண்டும்)

நாம் மனிதனாக உருவான நிலைகள் கொண்டு மனிதனின் உருவின் தன்மையைத் தெளிவாக்குவதற்காக இந்த ஆறாவது அறிவின் தன்மையை முருகன், வள்ளி தெய்வ ஆணை என்று தெளிவாகக் காட்டினார்கள் ஞானிகள்.

பல கோடிச் சரீரங்களில் வேட்டையாடி வேட்டையாடித் தன்னை தன்னுடைய வாழ்க்கையை வளர்த்துக் கொண்டு வந்த அந்த சக்தி, அதனால்தான் வேடுவனின் மகள் வள்ளி என்ற காரணப்பெயரை வைத்து சுட்டிக் காட்டுகின்றார்.

“வள்ளி திணைக் காட்டிலே காவல் இருக்கின்றாள்” அந்த வலிமை மிக்க சக்தியாக எதனை விளைய வைத்தாரோ அதனைப் பாதுகாப்பாக வைத்துள்ளான்.

மனிதனின் உடலில் ஆறாவது அறிவு வலிமை மிக்க சக்தியாக நமக்குள் பல கோடிச் சரீரங்களில் வேட்டையாடி இந்த மனதை உருவாக்கி இதைக் காத்திடும் சக்தியாக இந்த ஆறாவது அறிவு இருக்கின்றது.

இந்த சக்தியைத்தான் தெளிவாகக் காட்டுகின்றார்கள் வள்ளி என்று. ஆக நம் உடலான திணைக்காட்டை காவல் இருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக்குகின்றனர்.

இந்தக் காவல் காக்கும் உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்து
உயிருடன் இணைக்கப்படும்போது
இந்த உணர்வு நம் உடலுக்குள் சென்றபின்
தெய்வ ஆணையாக இந்த உணர்வின் இயக்கமாக
அந்த எண்ணங்கள் நம்மை இயக்கி
தீமைகள் புகாத நிலைகளை உருவாக்கும்
இதுதான் வள்ளி தெய்வ ஆணை

ஆறாவது அறிவின் தன்மையாக இந்த உடலைக் காத்திடும் உணர்வை நாம் நுகர்ந்து இந்த உயிருடன் இணைக்கப்படும்போது அதன் செயலாக இந்த உடலை இயக்கும் அதனைக் காக்கும்

இதைத்தான் இச்சாசக்தி கிரியாசக்தி, ஞானசக்தி நாம் எதை இச்சைப்படுகின்றோமோ நம் உயிரிலே இணைக்கப்பட்டு உடலில் கிரியையாகிச் சுழன்று அதன் ஞானமாக இந்த உடலை இயக்கும்.

மூலத்தை நாம் அறிவதற்கு ஞானிகள் இவ்வாறு காட்டுகின்றார்கள்.

ஆனால், இன்று என்ன சொல்கிறார்கள்? முருகனுக்கு இரண்டு மனைவி என்றால் ஆசைக்கு ஒரு மனைவி அன்புக்கொரு மனைவி என்றுதான் இப்படி திரிபு பண்ணி உண்மையின் உணர்வை நாம் உணராது செய்துவிட்டனர்.

முருகனுக்குப் பால் அபிஷேகம், தேன் அபிஷேகம் செய்தால் முருகன் அதற்காக மெச்சி, என்னைக் காப்பான் என்றும் என் கடையில் வரும் வியாபாரத்தின் நிலையில் வியாபாரத்தைப் பெருக்குவான் என்றும்
தன் கஷ்டங்களையெல்லாம் சொல்லி
கோவிலில் சரணாகதி தத்துவம் என்று
இந்த அபிஷேகத்தைச் செய்தால் அவன் இங்கே செய்வான்
என்ற சாங்கிய சாஸ்திரங்களைச் சொல்லி
உண்மையின் உணர்வை நாம் பெறாத நிலைகளில்
காலத்தால் தடைபடுத்தி விட்டார்கள்.

ஆனால், மெய் ஒளியின் உணர்வுகளை நாம் பெற்று அதன்மேல் இச்சைப்பட்டு அது உணர்வின் தன்மை தனக்குள் சேர்க்கப்படும்போதுதான் அது கிரியையாகி நமக்குள் தீமைகளை நீக்கும்.

பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்ற நிலைகள் அருள் மகரிஷியின் உணர்வை தனக்குள் உயிருடன் இணைக்கப்படும்போது  தீமைகளை வென்றிடும் உணர்வின் அணுவாக விளைகின்றது.

அதன் தன்மை கொண்டுதான் நமக்கு தீமையை அகற்றிடும் இந்த உணர்வுகள் விளைகின்றது. அதுதான் நம்மைக் காக்கின்றான்.

சரஹணபவா... குகா... கந்தா... கடம்பா... கார்த்திகேயா... என்று தீமைகளை அகற்றும் சக்தியாக ஆறாவது அறிவான இந்த உடலான குகைக்குள் நின்று வருவதை அனைத்தும் அறிந்து அது தீமைகள் அகற்றி உருவாக்கத் தெரிந்து கொண்டவன் கார்த்திகேயா என்று காவியத்தொகுப்புகளிலும் தெளிவாக்க் கூறியுள்ளார்கள்
.
ஆனால், அபிஷேகத்தை செய்தால் முருகன் என்னைக் காப்பான் என்றால் அங்கே இருக்கும் சிலை நம்மைக் காப்பதில்லை.

காவியத்தொகுப்பிலே காட்டிய உணர்வை நுகர்ந்து
அதன் உணர்வை நம் உயிருடன் இணைத்தால்
அந்த உணர்வுகள் விளைந்து நம்மைக் காக்குமே தவிர
அந்த சிலைக்கு அபிஷேகம் செய்து உனக்குச் செய்தேன் என்னை நீ காத்தருள் என்றால் அது செய்யாது செயல்படுத்த முடியாது.

ஆகவே, அன்று ஞானிகள் காட்டிய பேருண்மைப்படி நாம் செயல்படுத்தி நமக்குள் இந்த நிலைகளைச் செய்ய வேண்டும்.