ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 12, 2015

ரிக் சாம அதர்வண யஜூர் வேதங்களைப் பற்றியும் துவைதம் அத்வைதம் விசிஷ்டாத்வைதம் பற்றியும் எளிமையான விளக்கம்

இன்று பள்ளியிலே ஒன்றாம் வகுப்பில் இது குதிரை இது கழுதை இது ஒட்டகம் இது யானை என்று காட்டப்பட்டு அதனுடைய குணங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லுகின்றார்கள்.

இதைப்போன்றுதான் சக்தி சிவமான நிலைகளைக் காட்டுவதற்காக முதன் முதலில் சூரியனின் தன்மை முழுமை அடைந்து அதனின் செயலாக்கங்களைக் காட்டுவதற்கு சர்வேஸ்வரன் என்ற நிலையும் அதை சிவமாகவும் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

சர்வத்தையும் உருவாக்கும் நிலையைக் காட்டுகின்றார்கள்.

இவ்வாறு தனது நிலையில் உருவாக்கிய இந்த உணர்வின் தன்மையை மனிதனை உருவாக்கி ஜடாமுடி மேல் ஒரு மனைவி அதாவது தன் சிரசின் மேல் வைத்திருக்கிறார் என்று காட்டியுள்ளார்கள்.

அதே சமயத்தில் தான் நுகர்ந்த அணுவுக்குள் இந்த வெப்பம் கலந்து அதனின் இணையும் நிலைகளை தன் உடலிலே சரி பாதி பராசக்தி என்று தனக்குள் இணைத்துள்ளான்.

ஆக, கங்கையை ஒரு மனைவியாக தனக்குள் வைத்திருக்கிறான் என்று நீரும் நெருப்பும் கலந்து எப்பொருளின் தன்மை இதனுடன் இணைக்கின்றதோ இது நிலமாக மாறுகின்றது என்ற இந்தப் பேருண்மையை உணர்ந்துவதற்கு இதைக் காட்டுகின்றார்கள்.

அதே போன்று, சிவன் கையில் திரிசூலம் நீர் நிலம் நெருப்பு என்ற இந்த மூன்று நிலைகளில் அதிலே உடுக்கையைக் கட்டிக் காட்டுகின்றார்கள்.

ஒரு பொருளின் தன்மை
ஒன்றிலே மோதப்படும் போது
அந்த மோதலின் நாதங்கள் மாறி
உணர்வின் தன்மை எப்படி மாற்றமாகின்றது?
உலகை ஆட்டிப் படைக்கின்றான் சிவன் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

சூரியன் சுழற்சியின் தன்மையில் அது உமிழ்த்தும் நிலைகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றின் சக்தியைத் தனக்குள் ஆக்கி உருவத்தின் தன்மை எவ்வாறு மாற்றுகிறதென்ற நிலையை சிவதத்துவத்திலே இதைத் தெளிவாகக் காட்டுகின்றனர்.

சிவன் கையிலே பாம்பும், கழுத்தில் விஷம் கொண்ட பாம்பும் உள்ளது. உணர்வின் சத்து எல்லாவற்றிலும் இந்த விஷத்தின் ஆற்றல் இயக்குவதை ஆதியிலிருந்து இதை ஆதிசக்தி என்றும், விஷத்தின் தன்மையை மற்ற துகள்களுக்குள் கண்ட பின் எதனின் உணர்வை நுகர்ந்ததோ அதன் இயக்கமாக இயக்குகின்றது என்ற பேருண்மையைக் காட்டுகின்றனர்.

இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு என்று தன்னைத் தான் அறிந்து கொள்ளும் நிலையும் நாம் எவ்வாறு மனிதனாக உருவாக்கப்பட்டோம் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

சிவன் உடலிலே மான் தோல், யானை தோல், புலித்தோல் போட்டுக் காட்டியிருப்பார்கள். புலியும் சிவமே, யானையும் சிவமே, மானும் சிவமே, இதைப் போன்ற ல கோடி உணர்வின் தன்மை கொண்டு உடல்கள் மாற்றமாகி இந்த உணர்வின் தன்மை கொண்டு மனிதனாக உருவாகினோம் என்ற பேருண்மையை உணர்த்துகின்றார்கள்.

சிவனும் சக்தியும் அர்த்தநாரி என்றும் காட்டியுள்ளார்கள்.
சிவன் பாதி சக்தி பாதி என்று
ஒன்றுடன் ஒன்று இணைந்துதான் அனைத்துமே உருவாகியது என்று காட்டுகிறார்கள்.

அதே சமயத்தில் ஜடாமுடி, பல அணுக்கள் சேர்ந்து நீரான இந்த நிலையை உணர்த்துகின்றனர்.

இதிலே பிறைச் சந்திரனையும் காட்டுகின்றனர். ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணைக்கப்படும்போது அதனதன் செயல்களில் சமபகுதி இழந்து விடுகின்றது,

ஆக அதனின் நிலைகள் குறைந்து விடுகின்றது என்ற நிலையில் இந்த உலகம் உருவான இந்த நிலையினை நாம் (தன் இன மக்கள்) தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு ஞானிகள் ஒரு உருவத்தைக் காட்டி சிவதத்துவத்தில் இதைக் காட்டுகின்றார்கள்.

பேரண்டம் உருவான உணர்வுகளில் இது எவ்வாறு உருபெற்றது என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுவதற்குத்தான் உருவம். அது ரிக்
ஒரு பொருளிலிருந்து மணங்கள் வரும்போது சாம.
ஒரு பொருளுடன் இணைந்து அதை மாற்று நிலைகள் உருமாற்றும்போது இரண்டு செயலும் தன் உணர்வின் சத்தை மாற்றுகின்றது அதர்வண.
இரண்டும் மாறி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும்போது யஜூர்.

இவ்வாறு உணர்வின் ஆற்றல்கள் உலகில் எங்கிலும் பேரண்டத்தில் எவ்வாறு இந்த மாற்றங்கள் உருவானது என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றது நமது வேதங்கள் நூல்கள் சாஸ்திரங்கள் இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே உருவமாக்கிக் காட்டப்படும்போது இது துவைதம் என்றும் அதன் சேர்க்கையின் உணர்வுகளை எண்ணத்தால் நாம் உணர்ந்து நுகர்ந்தால் அத்வைதம் என்றும் நாம் நுகர்ந்து நம் உயிர் அணுக்கள் நுகரப்படும்போது அந்த உண்மையை நாம் நுகரப்படும் போது விசிஷ்டாத்வைதம்.

உணர்ச்சிகளை இயக்கி இந்த உயிரின் இயக்கத்துடன் அணுவாக மாற்றி உடலாக இது இணைத்துவிடும் என்ற நிலையை துவைதம் என்று ஞானிகள் உணர்த்தியுள்ளனர்.

உயர்ந்த குணங்களை தன் உடலாக எவ்வாறு ஆக்க வேண்டும் என்று தத்துவ ஞானிகள் இவ்வாறு நாம் அறிவதற்காக. காவியப் படைப்பில் தெளிவாக்கி உள்ளார்கள்

ஆனால், நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்? சிவனைப் பார்த்தால் அவன்தான் அனைத்தையும் உருவாக்கினான் என்று  சிலையை பார்த்து நாம் கடவுளாக வணங்கிக் கொண்டிருக்கிறோம்.

இன்று சாங்கிய வேதங்கள் படி அதற்கு நைவேத்யம் ஆராதனைகள் செய்தால் வன் நமக்குச் செய்வான் என்ற எண்ணங்களைத் தான் நமக்குள் உருவாக்கிவிட்டார்கள்.

பேருண்மையின் உணர்வை உணர்ந்து நமக்குள் தீமைகள் அகற்ற வேண்டும், ந்தத் தீமைகளை அகற்றும் சக்திகளை நமக்குள் பெறவேண்டும் என்று
அன்று ஞானிகள் உபதேசித்து வெளிப்படுத்திய அந்த உணர்வுகளை
நாம் நுகரும் தன்மையை இழந்தே உள்ளோம்.

நமது குருநாதர் காட்டிய அருள்வழியில் இப்பொழுது அதையெல்லாம் உங்களைப் பெறச் செய்து கொண்டிருக்கிறோம்.

ஞானிகள் கண்ட பேருண்மைகளை நீங்கள் அனைவரும் பெறவேண்டும். தீமைகளிலிருந்து விடுபட்டு பிறவியில்லா நிலை அடையவேண்டும்.
அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும் என்பதற்குத்தான்
இதை உபதேசிக்கின்றோம். எமது அருளாசிகள்.