ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 5, 2015

ஆமைக்கு வலுவான ஓடு எப்படி உருவாகிறது? - கண்கள் - கூர்மை - நுகரும் ஆற்றல்

புழுவிற்குக் கண் தோன்றியபின் தன் உணர்வின் தன்மை கொண்டு அது சிறுகச் சிறுக விளைந்து தன் வலுவின் தன்மை பெறவேண்டும் என்ற
கூர்மையின் உணர்வைத் தனக்குள் நுகர்ந்தபின்
அதன் உணர்வின் தன்மை கொண்டு ஆமையாக உருபெறுகின்றது

உதாரணமாக ஒரு புழுவாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் அந்தப் புழு நகர்ந்து செல்லும்போது கண் இருக்கப்படும்போது தன் அருகிலே இருக்கும் தாவர இனத்தை உணவாக உட்கொள்ள ஒரு பாறை மீது நகர்ந்து செல்கின்றது

இதனுடைய வேகம் அதிகமாக இல்லாததனால் அதே சமயம் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் பட்டு பாறை வெப்பமாகின்றது.

வெப்பத்தின் தணல் கூடும்போது இதை அந்தப் புழு நுகர்ந்து அந்த உணர்வின் தன்மை அதற்குள் விளைகின்றது எந்தப் பாறை மேல் இதனுடைய வெப்பங்கள் தாக்கப்பட்டு இதைத் தாக்குகின்றதோ இந்த உணர்வின் தன்மையும் இதையும் சேர்த்து நுகர்கின்றது.

ஏனென்றால் பாறையிலிருந்து வரும் இந்த உணர்வின் அணுக்களை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இதனுடன் நுகரப்படும்போது இந்த உணர்வுகள் உறைந்து இந்த வெப்பமும் இந்தப் பாறையின் உணர்வும் கலந்து புழுவிற்குள் பெருகுகின்றது.

பின் இந்தப் புழு இந்த வெப்பத்தால் இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்துக் கொண்டபின் புழுவின் கண்கள் அந்தப் பாறையை கூர்மையாகக் கவனித்து இதனிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகள் உருவாகின்றது.

இந்த உணர்வின் தன்மை கூர்மை அதிகமாகி தப்பிக்க வேண்டுமென்ற உணர்வுகளை அதிகமாகச் சேர்த்தபின் இந்த உணர்வுகள் உருபெற்றபின் இந்தப் புழு மடிந்துவிடுகிறது.

மடிந்தபின் இதனின் தொகுப்பில் ஒரு வலு கொண்ட அந்தப் பாதுகாப்பான ஓடாக (ஆமையாக) வருகின்றது.

இன்றும் பார்க்கலாம் ஆமை அது சிறிது நேரம் நெருப்பைத் தாங்கும் சக்தி பெற்றது. நெருப்புக்குள் ஒரு ஆமையைப் பற்ற வைத்தால் அதைத் தாங்கும் இயல்பு அந்த ஆமைக்கு உண்டு,

காரணம், இந்த வெப்பத்தின் தணலால் இது உருவாக்கப்பட்டு இந்தப் பாறையின் உணர்வுகள் இரண்டற இணைக்கப்பட்டு அதனின் வலுவான ஓடுகள் உருவாக்கப்பட்டு அதன் வழிகளில் பாதுகாப்பான உடல்கள் உருவாக்கப்பட்டது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து
தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில்
அந்த அருள்ஞானியின் உணர்வுகளைப் பெறவேண்டும்
என்று நாம் இச்சைப்பட்டால்
அந்த அருள் உணர்வுகள் நமக்குள் விளையும்.

ஆக, நீ எதை எண்ணுகின்றோயோ அதுவாகின்றாய் என்ற இந்தப் பேருண்மைதான் கீதையிலே கூறப்பட்டுள்ளது.