ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 29, 2015

உடலுடன் சொர்க்கம் அடைய விசுவாமித்திரரும் முயற்சித்தார்... முடியவில்லை...!

நாராயணன் திரேதா யுகத்தில் சீதாராமனாகத் தோன்றினான். எதன் சுவையோ அந்த எண்ணங்களாக இந்த உடலுக்குள் எப்படி உருவாக்குகின்றான் என்று சொன்னானே, அந்த வான்மீகி மகரிஷி உடலுடன் இருக்கின்றானா?

அவன் எண்ணத்தால் கவர்ந்தான். உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக அந்த ஒளியின் வட்டமாக இருக்கின்றான்.

ஏனென்றால் அகஸ்தியன் துருவ நட்சத்திரமானபின் அதன் உணர்வின் தன்மையைக் கவர்ந்து பின் வந்தவன் வான்மீகி.

வானின் உணர்வைத் தான் அறிந்து தான் கண்டறிந்த உணர்வின் தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்தியவன் இன்றும் அந்த சப்தரிஷி மண்டலத்தின் உணர்வு ஆறாவது அறிவை ஏழாவது நிலை பெற்று சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றான், வான்மீகி.மகரிஷி

இதைப்போல மீனவனாக இருந்த அந்த வியாசகன், வானை நோக்கி துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுத்தான்.

மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து  பாற்கடலைக் கடைந்தான். விழுங்கியது எதுவோ அதற்குத்தக்க உடல் பெற்றார்கள் என்று கூறினானே அந்த வியாசகன்.

உண்மையில் இந்த பூமியின் நிலைகள் அது கடைந்தவற்றில் எதெது விளைந்ததோ, தாவர இனங்கள் விளைகின்றது. அது விழுங்கிய உணர்வுக்கொப்ப உணர்ச்சிகளும் எண்ணங்களும் நம் உடலில் எப்படிப் பெற்றது என்று வியாசகன் தெளிவாகக் கூறியுள்ளான்.

அப்படி உண்மையின் உணர்வை உணர்த்திய வியாசகன் உடலுடன் இருக்கின்றானா?

இருக்கின்றான்.

ஒளியின் உடலாக இருக்கின்றான். ஆனால் இந்தப்புற உடலில் இல்லை. சப்தரிஷி மண்டலத்துடன் ஒளியின் உடலாக இருக்கின்றான். ஆகவே நாமும் இந்த உடலுடன் யாரும் எங்கேயும் சொர்க்கம் செல்ல முடியாது.

இதற்குத்தான் அன்று இதன் உணர்வின் தன்மை கொண்டு பல யாகங்களைச் செய்து சொர்க்கலோகத்தை நான் அடைய முடியுமென்று  எண்ணுகின்றார்கள்.

ஆக இந்த உடலுடன் சொர்க்கம் செல்ல முடியாது. ஆனால், இந்த உடலிலே சொர்க்க உணர்வை வளர்க்க முடியும்  என்று இராமாயணத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர்.

இங்கே விசுவாமித்திரர், அவருக்குள் ஆத்திரமும் அறிவும் எதையும் பெறவேண்டும் என்ற ஆத்திர உணர்வுடன் செயல்படக் கூடியவர். அவரும் அந்த நிலையச் செய்ய முடியவில்லை.
வீரிய உணர்வு கொண்டு பல யாகங்கள் செய்து
உடலுடன் நாம் சொர்க்கம் போக வேண்டுமென்றால் முடியாது.

உணர்வின் தன்மை இந்த உயிருடன் ஒன்றி என்று நம் உணர்வுகளை ஒன்று சேர்க்கின்றோமோ அதுவே உடலான சொர்க்கம் (ஒளியின் சரீரம்) அடைகின்றது.

“எதனை எடுத்தோமோ அந்த சொர்க்கலோகத்திற்கு அழைத்துச் செல்கின்றது” என்பதை இராமாயணத்தில் தெளிவாகக் காட்டப்படுகின்றது.

ஆக இதைப்போல நம் எண்ணங்களால் உருவாக்கப்பட்ட உணர்வுகளைத் தெளிவாகக் கூறுகின்றது, நமது சாஸ்திரவிதிகள்.