ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 30, 2015

மனிதர்களுக்கு மரியாதையும் கௌரவமும் முக்கியம் - மகரிஷிகளுக்கோ காரியம் தான் முக்கியம்...!

திரும்பத் திரும்பச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம்.

தெளிந்த நிலைகள் கொண்டு நமக்குள் பதிவாக்கிக் கொண்டால் தான் இந்த நிலையை நாமும் உணர முடியும். "நாம் யார்?" என்ற நிலைகளில் சிந்திக்கவும் முடியும். 

நாம் நமது இயக்கமல்ல.

நமதாக இருக்கும் உயிரின் தன்மை நம் உடலில் அது ஒன்று சேர்க்கும் பொழுது "நமது".
"தான்" என்பதும் இதே தான்.
எதை எண்ணுகின்றோமோ "தான்" ஆகின்றது.

இந்த உடலாக இருக்கும் பொழுது உயிரோடு ஒன்றி “நான்” ஆகின்றது.

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று உற்றுப்பார்த்தால் "ஓம் நமச்சிவாய" நம் உடலாக ஆகின்றது. அவன் உடலிலிருந்து வரும் வேதனைப்படும் உணர்வுகளை நாம் எடுக்கும் பொழுது "தான்" ஆகின்றது.

உயிர் - தான் ஆகித் தன்னுடைய நிலைகளாகும் பொழுது அந்த உணர்வின் இயக்கமாக நமக்குள் அது வேதனையாக உருவானால் "நான்" ஆகின்றது. எனக்குள் அந்த வேதனை வருகின்றது.
"நான்" என்ற நிலைகளில்,
என்னால் வேதனை தாங்க முடியவில்லை
என்று எண்ணுகின்றோம்.

அதே போல ஒருவருக்கு நாம் ஏதாவது உதவி செய்யவேண்டும் என்றால் - தான் ஆகி - நான் ஆகித் தான் செயல்படுகின்றோம்.

ஆக இதைப் போல காரணங்களுக்காக காரியங்களை எவ்வாறு இயக்குகின்றது? உணர்வின் செயல்கள் எவ்வாறு இயக்குகின்றது என்ற நிலையை,
ஆதியில் அகஸ்திய மாமகரிஷி
அவனில் கண்டுணர்ந்த உணர்வின் தன்மைதான் அது.

"அவன்" என்றால் பேசுவது நான் அல்ல. அவன் என்று நான் சொல்லலாம். அவனுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அவன் என்ற நிலைகள் சமப்படுத்தும் நிலையாக மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட இந்த நிலைகள் தான்.
ஆகவே இதை நான் அவன் என்று சொன்னால் நான் தான்,
நான் தான் என்றால் அவன் தான் என்ற நிலைகள்.

இப்படிச் சமப்படுத்திப் பேசும் உணர்வுகள் அந்த மகரிஷிகளுக்குத் தான் உண்டு.

இந்தச் சரீரம் (ஞானகுரு) மகரிஷிகளின் உணர்வுக்குள் அடைப்பட்டு இருப்பதனால், அதனின் உணர்வின் துணைகொண்டு அவன் என்ற நிலைகள் கொண்டு இந்த உணர்வுகளின் இயக்கமாகத்தான் இப்பொழுது யாம் உபதேசிப்து.

ஆகவே பேசுவது நானல்ல.

அதாவது, உயிரின் உணர்வின் இயக்கத்தில் கவர்ந்து கொண்ட உணர்வின் சத்து
உடலில் இணைந்தபின்
அந்த உணர்வின் செயலே
அதன் உணர்வின் நினைவாகப் பேசுகின்றது.