ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 11, 2015

பார்த்தது சாரதியாக... பார்த்தசாரதியாகக் கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்தான்...!

உதாரணமாக, ஒரு ஆமையின் எதிரிலே நரி வருகிறது என்று வைத்துக்கொள்வோம் 

நரியின் கண்களோ ஆமையைக் கூர்மையாகப் பார்க்கின்றது அந்த உணர்வை நுகர்ந்தால் “பார்த்தசாரதி”.
ஆமையை நரி பார்த்த அந்த உணர்வின் தன்மை கொண்டு
அந்த உணர்வுகள் சாரதியாக அமைந்து
ஆமையைக் கொன்று புசிக்கும் உணர்வுகள் தோன்றுகின்றது.

ஆமையோ அந்த நரியைக் கூர்மையாக கவனிக்கின்றது அதன் உணர்வின் வலிமையை தனக்குள் பதிவாக்குகின்றது, ஆகவே அந்த உணர்வின் படத்தை தனக்குள் உருவாக்கி அந்த நரியின் உடலிலிருந்து வரும் உணர்வை அது நுகர்ந்தறிகின்றது “பார்த்தசாரதி”.

அந்த நரியைப் பார்த்தபின் ஆமை நகர்ந்து செல்லுகின்றது தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளுகின்றது.

நரியோ நகர்ந்து வந்து உணவை எடுத்துக் கொள்ள வருகின்றது ஆனால் ஆமையோ தன் ஓட்டுக்குள் தன் உணர்வைப் பதிவு செய்து கொள்கின்றது. ஆனால் ஆமை ஓட்டிற்குள் இருப்பதால் நரி இதைக் கொன்று புசிக்கும் தன்மை இழக்கின்றது.

பின், மறுபடியும் ஆமை நரி போய்விட்டதா இல்லையா என்ற இந்த நிலை கொண்டே அது உணர்வுக்குள்
அது தலையை வெளி நீட்டுவதும்
நரியைப் பார்ப்பதும்
நரியின் உணர்வை நுகர்வதும்
இந்த உணர்வின் தன்மைகள் ஆமைக்குள் வலுப்பெறுகின்றது.

இதைத்தான் கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்தான் என்று சொல்வது. ஏனென்றால், எந்த நரியின் உணர்வுகள் ஆமைக்குள் பட்டதோ அதனின் உணர்வுகள் ஆமையின் உடலுக்குள் வலுவாகின்றது.

அதுதான் நரியின் வலிமையாக ஆமைக்குள் இந்தக் கண்கள் அதனுடன் தப்பிக்கும் உபாயத்தையும் தனது நிலைகளை திருப்பிக்கொண்டு வருவதும் அந்த வலிமையைத் தனக்குள் கூட்டுகின்றது

இருப்பினும் இந்த நரியின் நினைவாகவே ஆமை வாழ்கிறது. அந்த நரி ஆமையைக் கொல்லவில்லையென்றாலும் எதைக் கூர்மையாக பார்த்ததோ அந்த உணர்வின் தன்மை ஆமைக்குள் உருவாகிறது.

உயிரின் தன்மை விஷ்ணு. அது உருவாக்கி அந்த உணர்வின் தன்மையைப் பிரம்மமாக்கி அந்த அணுவின் தன்மையைத் தனக்குள் உருவாக்கும் திறன் கொண்டு அது உருவாக்குகின்றது.

இதைத்தான் வேதங்கள் கூறுகின்றது.

நரியும் ரிக் இந்த ஆமையும் ரிக்.

நரியின் வேகத்துடிப்புகள் அதிலிருந்து வரக்கூடிய வேகத்தை ஆமை நுகருமேயென்றால் அந்த வாசனை சாம.

ஆமை நரியின் உணர்வின் வேகங்களை நுகர்ந்தபின் அது ஆமையின் உணர்வை அடக்குகின்றது அதர்வண.

ஆமையின் உணர்வுக்குள் நரியின் உணர்வுகள் அதிகரித்து ஒரு வித்தாகின்றது யஜூர்.

இப்படி நரியின் உணர்வின் நினைவலைகள் ஆமைக்குள் வரப்படும்போதுதான் கண்ணன் கூறுகிறான் என்று காட்டப்பட்டது. ஆக, எதைக் கூர்மையாக எடுத்ததோ அந்த உணர்வின் எண்ணங்கள் வருகின்றது.

ஆனால் அது வலிமை மிக்க நிலைகள் வாலி. நரியின் உணர்வுகள் வலிமை மிக்கது. அதை நுகர்ந்தபின் ஆமையின் உணர்வுகள் இங்கே வாலியைக் கண்டபின் தனக்குள் தன் எதிரிலே எவர் படுகின்றனரோ அவர்களின் வலுவை இழக்கச் செய்கின்றது.

சூரியன் அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் நுகரப்படும்போது சீதாலட்சுமியாக மாறினாலும் அதன் உணர்வுகளை ஆமை நுகரப்படும்போது அந்த வலுவின் எண்ணங்களை அங்கே தோற்றுவிக்கின்றது.

ஆக, இதைப்போல சாஸ்திரங்கள் கூறிய பேருண்மைகளை நாம் அறிந்து கொண்டால் தெளிவாகும்.

இவ்வாறு ஆமை அதை நுகர்ந்தபின் எதனைக் கூர்மையாகப் பார்த்ததோ அதன் நினைவு கொண்டு இது தன் உணவுக்கு வெளியிலே செல்லாதபடி நரியின் நினைவு கொண்டு இது வரப்படும்போது இந்த ஆமையின் உயிரான்மா அந்த நரியின் உணர்வாக மாறிவிடுகின்றது.

பின் இந்த உடலை விட்டுச்செல்லும்போது இந்தக் கண்கள்தான் கூறுகின்றது. எதனின் உணர்வு வலுப்பெற்றதோ அதுதான்
அதனின் வலுவைப்பெற்று
அதன் வியூகத்தைத் தகர்த்து
அதனுள் சென்று நீ அதுவாகு
என்று இந்த கண்கள் கூறுவதாகச் சொல்கின்றார்கள்.
கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் சென்று இவ்வாறு அவன் உபதேசித்தான்.

ஆமை தான் நுகர்ந்த உணர்வுகளால் அந்த எண்ணங்கள் தோன்றி நரியின் உணர்வுகள் இங்கே உருபெற்றபின் நரியின் ஈர்ப்பு வட்டத்துக்குள் அங்கே செல்லுகின்றது.

ஓர் செடியில் விளைந்த வித்து ஒரு நிலத்தில் ஊன்றப்படும்போது புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு அந்த செடியின் சத்தைக் கவர்ந்து அதே செடியாக உருவாகி அதன் வித்தை உருவாக்குகின்றது.

இதைப்போலத்தான் நரியின் உணர்வை இந்த ஆமை நுகர்ந்து இந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி இந்த உணர்வின் துணை கொண்டு நரியாக மாறுகிறது.

இந்த ஆமை கூர்மையாகப் பார்த்து இந்த உணர்வின் தன்மை அதனின் வலுவின் தன்மை கொண்டு ரூபங்கள் மாறுகின்றது இதுதான் கூர்மை அவதாரம் என்பது,

நரியோ வலிமை பெற்றது ஆமையோ வலிமை குறைந்தது, நரியின் வலிமையான உணர்வுகளை ஆமை நுகரப்படும்போது அந்த எண்ணத்தின் தன்மை வாலியாகி இந்த சாந்த குணத்தை அடக்கி அந்த வலுவை ஆமை பெற்றுக்கொள்கிறது

இப்படித்தான் பல கோடிச் சரீரங்களில் தன்னைக் காட்டிலும் வலிமை கொண்டதை அனைத்தும் வாலி என்றும் அதனின் எண்ணங்களை  நுகரப்படும்போது இந்த உடலில் உள்ள சம வலிமைகள் இங்கே குறைகின்றது.

ஆக, நாராயணன் சீதாராமனாகத் தோன்றி அந்த உணர்வுக்கொப்ப எண்ணங்களை இயக்கி அது எவ்வாறு இயக்குகிறான் என்ற நிலையை நமது காவியங்கள் தெளிவாக்குகின்றது.

இவையெல்லாம் அன்று அகஸ்தியனால் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை, பின் வந்த வியாசகர் இதைத் தெளிவாக இந்த எழுத்து வடிவில் அது எழுத்து ரூபங்களில் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

ரூபத்தை அமைத்து ரூபத்தின் நிலைகள் கொண்டு தன்னை அறிதல் என்ற நிலைகளை உருவாக்கி உள்ளார்கள். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

னென்றால் நான் இதைப் படித்துச் சொல்லவில்லை. குரு கொடுத்த ஆற்றலின் தன்மை கொண்டு நம் முன் படர்ந்திருக்கும் இந்த உணர்வினை குரு வழியில் உலகம் எவ்வாறு உருவானது என்று அறிகின்றேன்.

எதனுடன் எது இணைத்து எவ்வாறு இயக்குகிறதுன்ற நிலையை நீங்கள் தெரிந்துகொள்வதற்குத்தான் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றோம்.