ஆதியிலே இருண்ட நிலையான விஷத்தின் தன்மைகள் விஷமற்ற நிலைகளைத் தாக்கி பல மாற்றங்களாகி பொருளாக கோளாக உருவாகி,
வளர்ச்சியில் நட்சத்திரமாகி பின் சூரியனாக உருபெறுகிறது.
சூரியனாக மாறப்படும் போது இதன் ஈர்ப்பு வட்டத்தில் இதன்
துணை கொண்டு வளரும் அந்தத் துகள்கள் அதனதன் நிலைகள் கொண்டு இதனுடன் சுழலத் தொடங்கினால்
அது கோள்களாக
மாறுகின்றது.
அதனின் வளர்ச்சி பெறும்போது அதன் தூர நிலையில்
இருப்பதெல்லாம் அது மற்ற நிலைகளை எடுத்து சிறுகச்சிறுக இந்த கோளின் தன்மை நட்சத்திரமாக மாறுகின்றது.
பிற மண்டலங்களிலிருந்து வருவதை அந்த நட்சத்திரங்கள் எடுத்து
பால் வெளி மண்டலங்களாக்கி அதன் எதனெதன் குணத்தின் தன்மை வளர்ச்சி பெற்றதோ அந்த
உணர்வின் தன்மையை துகள்களாக மாற்றி பின் தூசிகளாகின்றது.
ஆக முதல் தோன்றிய இந்த நட்சத்திரங்களின் விஷத்தன்மைகள் துகள்களாக
வருவதை இதனில் பாதரசத்தின் தன்மை கொண்டு பாய்ச்சப்படும் போது புறநிலைகள் வெப்பமாகிறது.
அதே சமயத்தில் சிதறுண்டு ஓடும் நிலைகளில் அது ஆவிகளாகச் செல்வதும் அந்த ஆவியின் நிலைகளை மீண்டும் அதிலிருந்து
வெளிப்படும் அணுக்கதிர்கள் எடுத்து இது வீசி அது நுகர்ந்து ஓடுவதும் அதே சமயத்தில்
தொடர்ச்சியில் தனக்குள் கவரும்
நஞ்சினைப் பிரித்துவிட்டு ஒளியின் சுடராக
தன் பாதரசங்களாக மாற்றிக் கொண்டே இருக்கும் சூரியன்.
இது இயற்கையின் சில நியதிகள் என்ற பேருண்மையை பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றும் அந்த அகஸ்தியன் தெளிவாகக் கூறியுள்ளான்.
அவன் கண்ட பிர்பஞ்சத்தின் இயக்கத்தின் தன்மைகளில் முதலில்
அந்த விஷத்தின் தன்மை பெற்றது கேது,
அதே சமயத்தில் அதன் உணர்வை தான் நுகரப்படும்போது ராகு.
எந்தப் பொருளின் தன்மை இணைந்தாலும் அதற்குள் விஷம் சேர்ந்து
விட்டால் இருள் சூழும் நிலையே வரும். கேது, இராகு விஷத்தின் தன்மை தனித்தன்மையாக
இருக்கும்போது அந்த உணர்ச்சியை ஊட்டும் நிலை பெறுகின்றது.
மற்ற கோள்கள் புதன் வியாழன் செவ்வாய் இதைப்போன்ற
நிலைகளெல்லாம் தனக்குள் மற்ற உணர்வின் தன்மையை அது வெளிப்படுத்துவதை
உலோகங்களாகவும் உயிரணுக்களுக்குச் சாதகமான நிலைகளும் உருபெரும் மாற்றங்களை
உருவாக்குகின்றது.
நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் அந்தத் தூசிகள் ஒன்றுடன்
ஒன்று மோதும்போது மின்னல்களாக ஒளிக்கற்றைகளாகப் பரவி வருவதை வெள்ளிக்கோள் கவர்ந்து
கொள்கிறது.
அதனின் நிலைகள் பரவி வரப்படும்போது இவை அனைத்தும் வியாழன் குருவாக இருந்து
இந்த உணர்வின் தன்மை அதனுடைய கதிரியக்கப்பொறிகளாக உருவாக்குகிறது.
அதாவது, எப்படி ஒரு மருந்திலே நாம் விஷத்தின் தன்மையைக் கலக்கின்றமோ
மருந்துடன் இந்த விஷத்தைக் கலக்கப்படும்போது அந்த மருந்திற்கே வீரியத்தன்மை
உருவாகிறது.
இதைப் போலதான் தனது வளர்ச்சியின் தன்மையில் தனக்குள் பெற்ற
இந்த உணர்வுகளை வியாழன் அது தனக்குள் உருவாக்கி அதனுடைய அமிலங்கள் எதனுடன்
கலக்கின்றதோ கதிரியக்கப் பொறிகளாக
எதையும் இயக்கும் சக்தியாக,
இணைக்கும் சக்தியாக உருபெறுகின்றது.
ஆகவேதான் இந்தப்
பிரபஞ்சத்திற்கு வியாழன் கோள் குரு என்ற நிலைகளை
காரணப் பெயரை சூட்டுகின்றார்கள்.
அடுத்து, சனிக்கோள் தனக்குள்
வரப்படும்போது இது ஆவியின் தன்மையாக மாற்றுகின்றது. ஆரம்பத்தில் ஆவியின் தன்மை
மேகமாக மாறி மேகத்தின் தன்மை கொண்டு அணுக்கள் மோதப்படும் போது நீராக மாறியது.
இதைப்போல மலைப்
பகுதிகளில் மேலே இருந்து வரும் உணர்வுகளை பனிப்பாறைகளாக மாற்றுவது போன்று சனிக்கோள்
தன் சுழற்சியின் தன்மையில் அது எடுக்கும் தன்மை கொண்டு அனைத்தையும் நீராக உருமாற்றும்
தன்மை பெறுகின்றது.
சனி கவரும் உணர்வுகள்
துகள்களில் நீரின் தன்மை பாறைகளாக மாற்றி அதன் சுழற்சியின் வேகத்தில் சிறுகச்
சிறுக கவர அந்த உணர்வின் தன்மை பிரபஞ்சத்தில் கலக்கச் செய்கிறது.
சனிக்கோளின் துகள்கள்
அதிகமாகப் பரவி வரும்போது அந்தப் பாதையில் எந்தக் கோள் அதைக் கவருகிறதோ அதற்குத்
தக்கவாறு நீராக மாற்றும் தன்மை நமது பூமிக்கு உண்டு.
அப்பொழுது பனிப்பாறைகளாக
துருவப் பகுதியில் உறைந்தாலும் இதனின் தன்மையை நீராக மற்றும் தன்மை உண்டு,
வியாழனில் இதே
நிலைகள் உண்டு. பனிப்பாறைகள் உருகப்பட்டு இதனின் நிலைகள் மூடப்பட்டு அதற்குள்
உருவாகும் உணர்வுகள் சூரியனைப் போன்று பனிப்பாறைகளை வியாழன் கோள் தனக்குள் அடக்கியது
உண்டு.
சூரியனுக்கு அடுத்ததாக வியாழன் இதை இணைக்கப்படும்போது இதில்
உள்ள நீர் சத்துகள் இரண்டாக திரவப் பொருளாக மாற்றுகின்றது.
செவ்வாய் என்பது தனக்குள் கவர்ந்து கொண்ட நிலைகளை ஒலியாகும் நிலையாக, அதை நாதகாரகன்
என்று சொல்வார்கள். இதனுடன் இணைந்தபின் அப்பொருளின் தன்மை எதுவோ அதன் ஒலிகளை
எழுப்பும் திறன் கொடுக்கப்பட்டது
ஜீவன் நிலைகளைப் பெற்றது செவ்வாய்க் கோளின் நிலைகள்
என்று கோள்களின் இயக்கத்தை அன்று
அகஸ்தியனால் கண்டுணர்ந்தப்பட்டது,
புதன் என்பது சூரியன் அருகில் இருப்பதனால் அது சூரியன் கவரும் நிலைகளை இடைமறித்து பல
கோள்களும் பல நிலைகள் தனக்குள் எடுப்பதை உலோகத்தன்மையாக அது மாற்றுகின்றது.
ஒரு அடுப்பை வைத்து அதில் ஒரு பக்கம் நெருப்பை வைத்தால் அதிலே
பல பொருள்களைப் போடும் போது அதனின் தன்மை கலக்கும் நிலைகள் மாற்றமாகி
வெளிப்படுகின்றது.
இதைப் போல சூரியன் ஈர்ப்பு வட்டத்தில் உராயும் தன்மை
வரும்போது புதனுக்குள் அந்த வெப்பத்தின் தணல் அதிகரித்து பின்புறமாகவும் தான் நுகரும் தன்மை இதற்குள் சிக்கியபின் தன்
உணர்வின் தன்மை மாற்றி அது ஆவியாக மாற்றி வெளிப்படுத்துகிறது.
அதை சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப காந்தம் கவர்ந்து
நகர்ந்து ஓடும் iநிலைகள் வருகின்றன. ஆக மற்றதுடன் இது நுகர்ந்து வெளி வீசும் போது
மற்ற கோள்களின் சுழற்சியின் தன்மை தன் அருகிலே கவர்ந்து இதனின் தன்மை
மாற்றமடைகின்றது.
இதுதான் நம் பிரபஞ்சத்தின் இயக்கம். இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை
இன்று நீங்களும் நேரடியாகப் பார்க்கலாம்
அருள்ஞானி அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த இந்த உண்மையின்
உணர்வுகளை அவனுக்குள் பெருக்கப்பட்டு அலைகளாகப் படர்ந்துள்ளது.
அதை எவர் நுகர்ந்தாரோ விண்ணுலக ஆற்றலை
அவர்களும் அறியும் தன்மை பெறுகின்றார்கள்.
அதைப்போல நமது குருநாதர் அதனை அவருக்குள் பெற்றார். இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை நுகர்ந்தார். பிரபஞ்சத்தின் இயக்கத்தின் ஆற்றலைத் தனக்குள் பெற்றார்.
தனக்குள் பெற்றதை எம்மையும் அழைத்துச் சென்றார். சந்தர்ப்பவசத்தால் அவரைச் சந்திக்கும் சூழ்நிலைகள் ஏற்படுகின்றது, அதன் உணர்வின் தன்மைகொண்டு தான் பெற்ற உணர்வுகளை ஒவ்வொன்றும் எமக்குள் பதியச் செய்கின்றார்.
பதிந்த உணர்வுகள நினைவு கொண்டு அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தைத் தூண்டுகின்றார். அதன் வழி கொண்டு உணர்வுகளை விண்ணிலே யாம் செலுத்தப்படும்போது அவர் கண்ட உண்மைகளை நானும் பார்க்க முடிகின்றது.
விளைந்த அந்த உணர்வுகளை நீங்களும் பெறவேண்டும் என்ற உணர்வின் இச்சை கொண்டு இந்த உபதேசத்தின் வாயிலாக
உங்களுக்குள் செவிவழி உணர்ச்சிகளைத் தூண்டி,
உணர்வினை உங்கள் கண் பார்வையில்
நுகரும் ஈர்ப்பாகக் கொண்டுவந்து,
அதை உங்கள் உயிருடன் ஒன்றி உணர்வின் அலைகளைப் பரப்பி
உங்கள் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றுகின்றோம்.
நமது குருநாதர் எவ்வாறு எம்மைக் காணும்படி செய்தாரோ அதன் வழி கொண்டு நீங்களும் எளிதில் காண முடியும். பேரண்டத்தின் நிலையும் உணர முடியும்.
உங்களுக்குள் உருவான உணர்வின் தன்மையை உங்களில் நீங்கள் உணரவும் முடியும். மனிதனான் பின் தான் கார்த்திகேயா எல்லாவற்றையும் அறியும் ஆற்றல் பெற்றவன் மனிதன்
அதை உருவாக்கத் தெரிந்து கொண்டவன் மனிதன்.
அதுதான் பிரம்மாவைச் சிறைபிடித்தான் என்றார்கள் ஞானிகள்.