சூரியனை லட்சுமி நாரயணா என்று காரணப் பெயரைச்
சூட்டுகின்றார்கள்.
முதலிலே பல நிலைகள் அடைந்து சூரியனாகப்படும்
போது அந்த சூரியனின் தன்மை காந்தத்தால்
இழுத்து அது ஓர் உறைவிடமான பெரும் சக்தியாக மாற்றியது லட்சுமி.
காந்தம் – லட்சுமி காந்தத்தால் உலகையே
உருவாக்கும் ஆற்றல் பெற்றது என்று நாம் எல்லாம் தெளிவாக தெரிந்து கொள்வதற்கு லட்சுமி நாராயணா என்று
காரணப்பெயரை சுட்டிக் காட்டுகின்றார்கள்
அதே சமயம் அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள்
அது எவ்வாறு உருவாகிறது என்ற நிலையும் தெளிவாக்குகின்றார்கள். ஆக சூரியன் தன்
உணர்வின் சத்தை வெளிப்படுத்தும் போது வெப்பம் காந்தமாக மாறுகின்றது
அதன் தலைவாயில் வந்து மோதும் போது அதனின்று
வரும் விஷத்தை அது பிரித்திருந்தாலும் இந்த விஷத்தை தனக்குள் கவர்ந்து
வெளிப்படுகின்றது.
வெப்பம்
உருவாக்கும் சக்தியாகவும்,
காந்தம் அரவணைக்கும் சக்தியாகவும்,
விஷம் இயக்கும் சக்தியாக அது வெளிப்படுகின்றது.
அவ்வாறு வெளிவரும் போது எந்தப் பொருளை அது
தனக்குள் நுகர்கின்றதோ அதனின் மணத்தின் தன்மை கொண்டு அந்த அணுவின் இயக்கம்
இருக்கும்.
அதாவது அதன் வலுவின் தன்மை கொண்டு
அந்த அணு இயங்குவதைத்தான்
காயத்ரி என்று பெயர் வைக்கின்றார்கள்.
ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டான் நாராயணன். அதன்
மேல் பள்ளி கொண்டு உலகையே ரட்சிக்கிறார் என்று அது உருவமாக்கி அருவ நிலைகளை
நமக்குள் நுகர்ந்து தன்னை அறிய முடியும் என்ற பேருண்மைகளைக் காட்டுகின்றார்கள்
ஐந்து தலை நாகனைப் போட்டு அதன்மேல் பள்ளி
கொண்டான் நாராயணன் என்றும், லட்சுமி நாராயணா என்று அதைத்தான்
முதலிலே
கவர்ந்து கொண்ட சக்தி சீதேவி என்றும்
அடுத்து அந்த திடப்பொருள்
ஆகும்போது பூதேவி என்றும்
இருசக்தியின் துணைகொண்டு இயங்குகிறான்
என்றும் காட்டுகிறார்கள்.
அந்த காந்தத்தால் இழுத்து உறையச் செய்து ஒரு
உடலாக மாற்றப்படும்போது சீதேவி. அதே சமயத்தில் தான் உடலாக வளர்த்துக் கொள்ளும்
நிலைகள் பூதேவி.
இந்த உடலின் தன்மை அடைந்தபின் சுழற்சியின்
தன்மை அடைந்து தன்னை வளர்த்துக் கொள்ளும் இந்த சக்திகள் உருபெறுகின்றது என்ற
நிலையும் இது காவியத் தொகுப்புகளில் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது,
நாராயணன் ஒரு கடவுள் என்றும் அவன் எங்கோ
இருக்கிறான் என்று நினைக்கின்றோம். அதுவே சூரியன் என்ற நிலைகளைத் தெளிவாக்கி,
அதனின்று தோன்றிய உயிர் அணுக்களும் அதாவது வான இயல் தத்துவத்தை புவியியலின்
நிலைகளுக்குள் எப்படி மாறுகிறதென்ற நிலையையும் ஞானிகள் உணர்த்தினார்கள்.
இந்த மூலத்தை நாம் அறிந்து உணர்வை நுகர்ந்து
அந்தக் கருத்தின் உணர்வாக நாம் இயக்கத் தொடங்கினால் அதனின் உணர்வை நாம் பெற்று
நமக்குள்
சூரியன்
ஒளிச்சுடர் ஆனது போன்று,
மனிதன்
ஆறாவது அறிவில் தெளிவாக முடியும்
என்ற பேருண்மையைத்தான் அங்கே காட்டப்பட்டது.
ஆதியிலே கோளாகி நட்சத்திரமாகி அதன் உணர்வின்
தன்மை சூரியனாக எப்படி ஆனதோ இதைப்போல உருவான உணர்வுகள் உயிரணுவாகி உணர்வின் தன்மை
அணுக்களாக மாற்றி அந்த உணர்வின் அறிவாக இயக்கி உணர்வின் தன்மை தனக்குள் உடலாக்கி
உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிடல் வேண்டும்.
உயிர் ஒளியாகும் போது கல்கி என்றும் அதனின் தொடர்
வரிசையில்
உணர்வின் அணுக்களை தன் இனமாக
அழியா ஒளிச் சரீரமாக மாற்றுவதைக் கல்கி
என்றும் காரணப் பெயரைச் சுட்டிக் காட்டி
சாதாரண மக்களும் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கத்தைக் காட்டினார்கள்
ஞானிகள்.