ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 11, 2015

புருவ மத்தியின் வழியாகத் துருவ நட்சத்திரத்தை இழுத்தால் பொறிகள் கிளம்பி வெளிச்சமாகும்...!

அகஸ்தியன் துருவனாகி, துருவ நட்சத்திரமாகி, துருவ நட்சத்திரமாக இருக்கும் அதிலிருந்து வெளிப்படும் பேரருளையும் பேரொளியையும் சூரியனின் காந்தப்புலனறிவுகள் கவர்ந்து இன்று நமது பிரபஞ்சத்தில் பரவச் செய்து கொண்டிருக்கிறது

பிரபஞ்சத்தில் பரவும் அந்த்த் துருவ நட்சத்தித்தின் பேரருள் பேரொளியை நமது பூமி துருவத்தின் வழி கவர்ந்து பூமியின் ஈர்ப்புக்குள் கொண்டுவருகின்றது.

நம்முடைய நினைவு அனைத்தையும் "ஓம் ஈஸ்வரா குருதேவா" என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள்.

அன்னை தந்தை அருளால் "துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா" என்று
கண்ணின் நினைவை உங்கள் புருவ மத்தியில் வைத்து
உங்கள் நினைவு அனைத்தையும்
துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்துங்கள்.

அதன் உணர்வைப் பதிவாக்கப்படும் பொழுது அதன் வழி உங்களுக்குள் கவர்ந்து உங்கள் உடலுக்குள் சேர்க்க இது உதவும்.

"துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா" என்று புருவ மத்தியில் எண்ணப்படும் பொழுது இந்த புருவ மத்தியிலிருந்து கவர்ந்து உயிரிலே பட்டுத்தான் உணர்வுகள் செல்ல வேண்டும்.

அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் புருவ மத்தியில் எண்ணும்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் சேர்த்துக் கொண்ட
வேதனை, வெறுப்பு, சங்கடம், சலிப்பு என்ற நிலைகள்
உடலுக்குள் உட்புகாதபடி தடைப்படுத்துகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உங்கள் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி உங்கள் நினைவாற்றல் அனைத்தையுமே துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளைப் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

இப்பொழுது உயிரின் காந்தத்தால் உணர்வின் தன்மை அங்கே புருவ மத்தியில் ஈர்க்கப்படும் பொழுது
உங்கள் உணர்வுகள் அனைத்தும்
பொறிகள் கிளம்புவது போன்று அது வரிசையாக வந்து
அது தொடர்ந்து உங்கள் ஆன்மாவாக (உடலைச் சுற்றி)
புற நிலைகளில் இது பரவும்.
இதை நீங்கள் உணரலாம்.

"துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா" இங்கே புருவ மத்தியில் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் மோதப்படும் பொழுது ஒளிப் பிளம்புகளாக மாறும்;

உங்கள் உடலில் புற நிலைகளில் இது பரவும்;
உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருளை அகற்றும்;
உங்கள் உடலைச் சுற்றி இருக்கக்கூடிய ஆன்மாவைத் தூய்மையாகும்.

"துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா" என்று கண்ணின் நினைவினை உங்கள் புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின்பால் தொடர்புகொண்டு அதன் உணர்வைப் பெற வேண்டும் என்று மீண்டும் ஏங்கி தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் உயிரிலே அந்த உணர்வுகள் கவரப்படுகின்றது. உங்கள் உடலின் வெளிப்புறம் அனைத்தும் ஒரு ஒளிமயமான நிலைகள் தென்படுவதை உங்களால் உணர முடியும். உங்கள் உடலைச் சுற்றி ஒரு ஒளிமயம் ஏற்படும்.

ஏனென்றால் உங்கள் உடலிலே சேர்த்துக் கொண்ட தீமையின் உணர்வுகளில் துருவ நட்சத்திரத்தின் தன்மை மோதும் பொழுது,
அந்த இருள்கள் நீங்கி
உங்கள் உடலைச் சுற்றியுள்ள ஆன்மாவில் ஒளியின் தன்மை தெரியும்.

சூரியன் எப்படி தன் பாதரசத்தால் போதும் பொழுது இந்த பிரபஞ்சமே ஒளிமயமாகின்றதோ இதைப்போல உங்கள் உடலான பிரபஞ்சத்தில் புறத்தில் தீமைகளை நீக்கும் அருள் சக்தியாக ஒளி அலைகள் உங்கள் உடலிலே தெரியும்.