சாதாரணமாக உங்கள் புலனறிவு கொண்டு நேரடியாக சப்தரிஷி மண்டலங்களைப் பார்க்க
முடியாதென்றாலும், சூரியனுடைய கதிரியக்கங்கள் சந்திரனிலே படுகின்றது.
இதை நீங்கள் ஊடுருவி,
இந்த உணர்வின் தன்மையைக் குறுக்கீடு செய்து
உங்கள் உயிரின் தன்மைகொண்டு அந்த காந்த அலைகளைப் பரப்பி
பௌர்ணமி தியானத்தன்று அந்த மெய்ஞானிகள் கண்ட வழிகளிலே
சப்தரிஷிமண்டல அலைகளினுடைய தன்மையைப்
பெறச் செய்வதற்குத்தான் இதைச் செய்கின்றோம்.
ஏனென்றால் விஞ்ஞானிகள் எந்தெந்தப் பருவத்தின் நிலைகளில் அந்தந்த அணுக்களைப்
பரப்பச் செய்கின்றார்களோ, அதே போன்று மெய்ஞானிகள், நமது குருநாதர் காட்டிய
அருள்வழி கொண்டு நமக்குள் இந்தத் தெளிவைப் பார்க்கும்போது, காந்த அலைகள் தொடர்ந்து
வருகின்றது.
அந்த காந்த சக்தியின் தன்மையை நமக்குள் பெற்று, உணர்வின் அலைகள் கொண்டு
பௌர்ணமி நாளில் நாம் பார்க்கப்படும்போது, இதே உணர்வின் ஆற்றலின் தன்மைகள் ஊடுருவுகின்றது.
அப்பொழுது அந்த சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளியை
நீங்கள் பெறவேண்டும் என்ற ஆசையிலே உங்கள் உணர்ச்சிகளை தூண்டச்செய்து, அந்த
உணர்வலைகளை நீங்கள் பெறும் தகுதியை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.
உதாரணமாக ஒருவன் உங்களை அடிக்க வருகிறான் என்றால் அடிக்க வருகின்றான்..., ‘ஆ..,’ என்று சொல்கின்றோம்.
தாக்க வருகின்றான் என்றால் ‘ஆ..,’ என்று சொல்லும்போது உங்கள் உணர்வலைகள் எப்படித்
துடிக்கின்றதோ, இதே போலத்தான் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் ஆற்றலை நீங்கள் பெறக்கூடிய
அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்குத்தான் இந்த உபதேசம்.
வெறும் வாயிலே படித்து எடுத்துக் கொள்வோமென்றால் ஒன்றும்
முடியாது.
யானையைப் பண்ணுவேன் பூனையைப் பண்ணுவேன் என்றால் அந்த
நிமிடத்திற்குச் சரியாக இருக்கும். அதன்பின் ஒன்றும் இருக்காது. இதையெல்லாம்
உங்கள் உடலுக்குள் உணர்ச்சியின்
நிலையைத் தூண்டச் செய்து
இந்த உணர்வாலே நீங்கள் சுவாசித்து
இந்த உமிழ்நீரின்
சக்தியை உங்கள் உடலுக்குள் சேர்த்து
இந்த உணர்வின் தன்மையை உங்கள் உயிரிலே உராயச் செய்து
இந்த உணர்வின் ஆற்றலை
உங்களுக்குள் பெருக்கச் செய்தால் ஒழிய
இந்த உணர்வின் ஆற்றலைப் பெறுவது
என்பது
அவ்வளவு சாதாரணமானதல்ல.
சாதாரண மக்களாக இருந்தாலும்
குழந்தையாக இருந்தாலும், துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள்
உராயவிடும் பொழுது
உங்களுக்குள் அந்த சக்தி பெறுகின்றது.
ஒவ்வொரு சந்தர்ப்பமும்
நமக்குள் நாம் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவர்கள்.
மனிதனானபின், நாம் எதையும் நம்
உணர்வாலே எடுத்து சமப்படுத்தும் ஆற்றலின் தன்மையை நாம் எடுத்து உணர்ந்த அந்த
உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கப்படும் பொழுது
ஆற்றல்மிக்க சக்தியை நமக்குள் பெருக்க முடியும்.
உங்களை நீங்கள் நம்பவேண்டும்.