ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 6, 2014

நாம் விடும் மூச்சலைகளால் மழை நீரைப் பெய்ய வைக்க முடியும் - ஞானகுரு

விஞ்ஞான அறிவினால் இன்று விஷத்துகள்கள் பூமிக்கு வெளியிலும் ஈர்ப்பு வட்டத்திற்கு மேலேயும், பூமிக்குள்ளும் அதிகமாகப் பரவி இருக்கின்றது.

அவ்வாறு விஷத்தன்மையான நிலைகள் இருப்பதனால், நீராகக் குவித்து மழையாகப் பெய்யும் தன்மைகள் குறைந்து கொண்டிருக்கின்றது.

இத்தருணத்தில், நாம் மகரிஷிகளின் அருள்சக்திகளைப் பெற்று நாம் விடும் மூச்சலைகள் சிறுகச் சிறுகச் சேர்ந்து மேகங்களில் படரத் தொடங்கும்.
,
அதே சமயத்தில் சனிக்கோளில் இருக்கக்கூடிய சக்தியின் நிலைகளை நாம் எண்ணி ஏங்குவதால்
சனிக் கோளிலிருந்து வரக்கூடிய உரையும் கட்டி,
அது மீண்டும் வெப்பத்திலே பட்டவுடன் ஆவியாக மாறி
மற்ற சத்துகளுடன் கூடி
அது நல்ல மழையாகப் பெய்யத் தொடங்கும்

இவ்வாறு சிறுகச் சிறுக நாம் எடுக்கும் ஆற்றலைக் கொண்டுதான் மழை பெய்யவைக்க முடியும். ஏனென்றால், மந்திர சக்தியைக் கூட்டி நாம் செய்யவில்லை.

நாம் எடுக்கும் மூச்சலைகள் நமக்குள் சென்று,
நாம் இடும் மூச்சலைகளின் உணர்வு ஒளிகள்
இவ்வாறு அது செயல்படுத்தப்பட்டு
நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு,
சனிக்கோளின் ஆற்றலை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கும்போது,
அதனின் ஆற்றலினுடைய நிலைகள்
பூமிக்குள் பரவச் செய்வதற்கு,
நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
அருள்ஞானிகளை எண்ணி நாம் ஏங்கிக்கொண்டிருக்கும்போது,
அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தியை நீங்கள் கவர்ந்து
மழைப் பெய்யக்கூடிய ஆற்றல் பெறவேண்டும் என்று எண்ணி
உணர்வின் ஆற்றல்களை ஒன்று சேர்த்துக் கலக்கப்படும்போதுதான்
வரும் அதே ஆவியின் நிலைகள்
உங்கள் உணர்வின் அலைகள்
மேகங்களாகக் கூட்டப்பட்டு
அது பெரும் மழையாகப் பொழியும்.