ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 20, 2014

ரிஷியின் தன்மை – சிருஷ்டிக்கும் தன்மை

வாரத்தில் ஒருநாள் கூட்டுக் குடும்ப தியானம் நீங்கள் அவசியம் இருந்து பழகவேண்டும்.

அதற்குப்பின் கணவன், மனைவியும் அவர்கள் எத்தகைய நிலைகள் இருந்தாலும், சரீரம் இரண்டாக இருந்தாலும் இந்த முறைப்படி தியானம் செய்ய வேண்டும்.

“ஓம் ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி ஏங்கி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் ஜீவாத்மா  ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று தியானித்து உடலுக்குள் செலுத்த வேண்டும்.

பின் கண்களைத் திறந்து,
கணவன் மனைவியை எண்ணி
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
என் மனைவி உடல் முழுவதும் படரவேண்டும்
அவர் பேச்சும் மூச்சும் உலக மக்கள் நலம் பெற உதவ வேண்டும்,
அவர் சொல்லில் இனிமையும், அவர் செயல் அனைத்தும் நலம் பெறவேண்டும் என்று எண்ணி அந்த உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

அதே போன்று மனைவியும் கணவனை எண்ணி தியானித்து, மகரிஷிகளின் உணர்வைக் கணவனுக்குப் பாய்ச்ச வேண்டும்.

ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது கண்டிப்பாக இவ்வாறு ஒருவருக்கொருவர் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பாய்ச்சிப் பழக வேண்டும். வெகு தூரத்தில் இருந்தாலும் இதை எண்ணி தியானிக்கலாம்.

காரணம் நண்பருக்குள் நாம் நல்லதைச் செய்யும்போது, எண்ணியவுடன் விக்கலாகின்றது. எனக்கு துரோகம் செய்தான் பாவி என்று பேசும்போது புரை ஓடுகின்றது.

இதைப்போல நம் குழந்தை மேலே பாசமாக இருந்து வளர்க்கப்படும் பொழுது, இங்கு ஒரு குழந்தை தவறி விழுந்து விட்டால் அதைப் பார்த்தவுடன் தன் குழந்தைக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்று எண்ணத்தைச் செலுத்தினால் போதும், நம் குழந்தையும் தவறி விழும்.

ஆக பாசத்தின் பிணைப்பின் இந்த உணர்வின் இயக்கங்கள் இவ்வாறு இயக்கும் தன்மைக்கு இந்த உணர்வின் அலைகளே காரணமாகின்றது.

இதைப்போல கணவன் மனைவியினுடைய நிலைகள் உயிர் வாழும் நிலைகள் கொண்டு இரு சரீரம் ஆனாலும்,
இந்த முறைப்படி தியானித்து
உணர்வலைகளைப் பதிவு செய்து கொண்டால்
உடலைவிட்டுச் சென்றபின்
இரு சரீரங்கள் ஒரு சரீரமாக இயங்கும்.
இதுதான் சிவசக்தியின் ஸ்வரூபம்,
ரிஷியின் தன்மை - சிருஷ்டிக்கும் தன்மை

கணவன், மனைவியும் சேர்ந்து எண்ணத்தால் கருவாகி ஒரு உணர்வின் சக்தியை ஒரு உருவை உருவாக்குவது போன்று, இரு சரீரமும் இந்த சரீரத்தைவிட்டுச் சென்றபின் ரிஷியின் தன்மையைப் பெறுகின்றனர்.

ஒரு சுழற்சியின் கூட்டின் அமைப்புக்குள் இன்று ஒரு குடும்பமாக இருந்து செயல்படுவது போன்று, ரிஷியின் தன்மை கொண்ட ஒளியின் சரீரம் பெறுவது திண்ணம்.

அத்தகைய தன்மையில் சென்றவர்கள் தான் விண் செல்ல முடியும். தனித்து எவரும் விண் செல்ல முடியாது.

எனவே கணவன் மனைவியும் தைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்தால், யார் முன் சென்றாலும் பின் இரண்டுமே இணையச் செய்கின்றது.

இந்த உணர்வின் தன்மை யாம் சொல்லும் வழிப்படி செயல்படுத்திக் கொண்டால்
மனிதனுடைய கடைசி நிலைகளை
நீங்கள் எல்லோரும் நிறைவுபடுத்த முடியும். எமது அருளாசிகள்.