ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 5, 2014

மழையே பெய்வதில்லை...! பெய்தால் ஊரையே நாசம் செய்கிறது ஏன்...?

இன்று ஒவ்வொரு மனிதனும் வெறுப்பும், ஆத்திரமும் ஒருவரை ஒருவர் அழிக்கும் உணர்வின் எண்ணங்கள் அதிகமான நிலைகளில் வெளிப்படுத்துவதால் இந்த உணர்வலைகள் மேகங்களைக் கலைக்கச் செய்கின்றது.

சில சந்தர்ப்பங்களில் யுத்தங்கள் நடக்கப்படும்போது, யுத்த பீதிகள் அதிகமாக பரவப்படும்போதும் மேகங்கள் கலைந்துவிடும். மழைகள் குறையும்.

அதேபோன்று நாட்டிலே ஒவ்வொரு நிமிடமும் விஷத்தன்மையான ஆற்றல் பரவிக் கொண்டுள்ளது.

இன்றைக்கு அணுகுண்டின் விஷ அணுக்களாலும்,
அணுக் கதிரியக்கங்களின் இயக்கத்தினாலேயும்,
விண்ணிலே இருக்கக்கூடிய நமக்கு பாதுகாப்பாக இருக்கும்
விஷ ஆற்றலைத் தடுத்து நிறுத்தும்
ஓசோன் திரையைப் பிளக்கச் செய்துவிட்டனர்.

அவ்வாறு ஓசோன் திரை கிழிந்ததால் விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல்மிக்க சக்திகளும், விஷத்தன்மைகளும் பூமிக்குள் ஊடுருவி பூமியில் படர்ந்து மேகங்களாக கூடும் அந்த தன்மையையும் இழக்கச் செய்துவிடுகின்றது.

அடுத்து, விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு நாட்டின்மீது ஒரு நாடு, இனம் புரியாத அளவில் மழையின் நீர் சத்தைக் கலக்கக்கூடிய அளவில் விஷத்துகள்களைக் கலப்பதினாலேயும் மேகங்களுடைய தன்மையும் இழக்கப்படுகின்றது.

இவ்வாறு அடிக்கடி நடக்கும் இந்த சந்தர்ப்பங்களிலிருந்து மக்களின் எண்ண மனோபாவங்களும், தான் இருக்கக்கூடிய இன்னல்கள் அதிகமாக வளர வளர, வெறுப்பான உணர்வலைகள் அதிகமாகச் சேர்கின்றது.

மனிதர்களான நாம் வெறுப்பு வந்தால் எவ்வளவு தரம், எப்படி உந்தித் தள்ளுகின்றோமோ, அதேபோன்று இங்கே இருக்கக்கூடிய அந்த வெறுப்பான மூச்சலைகள், நீர் சக்தியின் தன்மையும் அது உருப்பெறும் தன்மையும் “உந்தித் தள்ளி விடுகின்றது”.

இப்படி மனிதனுக்குள் இருக்கக்கூடிய ஆற்றலும் கலந்து இன்று மழை நீரின் நிலைகள் குறையும் தன்மை ஆகிவிட்டது.

அதே சமயம் இந்த வேட்கையின் நிலையில் மேகங்கள் பல பாகங்களில் ஒதுங்கி நிற்கப்படும்போது அந்த ஒதுங்கி நிற்கும் இடங்களில் மேகங்கள் குவிந்தவுடன், பெரும் மழையாகப் பெய்து அங்கேயும் சீரழித்துவிடுகின்றது.

ஏனென்றால், இந்த விஷ அணுக்கதிரியக்கங்களுடைய தன்மைகள் மேகங்களில் பட்டவுடன் மேகங்களைக் கலைத்துச் செல்லும்போது,
ஒரு பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் வெறுப்பும், சோகமும்
இப்படி வேதனையான எண்ணங்களைக் குவிக்கப்படும்போது,
இங்கிருக்கக்கூடிய மேகங்களும் பரவலாகப் பரந்து,
மற்ற இடங்களில் ஒன்று சேர்த்துக் குவிக்கின்றதோ,
குவிக்கக்கூடிய இடங்களில் மழை அளவுக்கு அதிகமாகக் கொட்டி
அங்கிருக்ககூடிய நகரத்தையும் அழித்துவிடுகின்றது.

ஆக, மேகங்கள் ஒதுங்கி நின்று ஒன்று சேர்ந்து அது எடை தாங்காதபடி கொட்டி விடுவதனால் அங்கே அது
உபயோகமற்ற நிலைகளில் மழை பெய்து அழிவு ஏற்படுகின்றது.
அதே சமயம், இங்கு மழை இல்லாது நீரில்லாதபடி தவிக்கின்றார்கள்.

இப்படித்தான், உலக மாற்றங்களுடைய நிலைகள் வந்து கொண்டிருக்கின்றது.

இன்னும், சிறிது காலம் போனால் நீர் சத்தினுடைய நிலைகள் குடிப்பதற்குக்கூட நீர் அற்று போகக்கூடிய காலங்கள் வெகு விரைவில் இருக்கின்றது.