ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 21, 2014

மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்திற்கு நம்முடைய தூதுவர்களாக அனுப்ப வேண்டும்

ஒரு பொருளுக்குள் நல்ல சத்து இருந்தாலும் நீருக்குப் பதில் சீமை எண்ணெயைப் (KEROSENE) போட்டு விட்டால் என்ன செய்யும்? அதன் மணத்தை ஊடுருவும்.

அதைப்போல நமக்குள்ளே நல்ல சத்து இருந்தாலும் மேலே வாசனை மாறுப்பட்ட நிலைகளில் முலாம் பூசிவிட்டால் அது செயல்படுத்துவது போன்று நம்மையறியாமலே நமக்குள் தடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இதைபோன்ற நிலைகளை நாம் மாற்றுவதற்கு அந்த மெய்ஞானியின் அருள் சக்தியைப் பெறுவதற்கு, நம் மூதாதையர்களை நாம் அவசியம் விண் செலுத்தியே ஆகவேண்டும்.

கூட்டு அமைப்புடன் இருக்கும் நாம்,
சப்தரிஷி மண்டலங்களுடன் நம் மூதாதையர்களை,
கடுமையான நிலைகளில் தியானமெடுத்து,
அவர்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும்.
அவர்கள் ஒளிசரீரம் பெற வேண்டும் என்ற உணர்வை,
உந்தி உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஆக இந்த உணர்வின் நிலைகள் கொண்டு, அவர்கள் அதை ஜீரணிக்கும் ஆற்றல் பெறுகின்றனர்.

யாம் எதற்குச் சொல்கின்றோமென்றால்
முதலில் நாம் அவர்களை சுலபமாகச் செலுத்த வேண்டும்.
நம்முடைய தூதுவர்களாக எடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை அவர்கள் சுவாசித்து அந்த உணர்வலைகளைப் பெருக்கியபின், நாம் சப்தரிஷி மண்டலங்களை எண்ணும்போது வலுவான நிலைகளிலே அந்த அலைகளை நாம் சுவாசிக்க முடியும்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் எடுக்க எடுக்க இந்த உணர்வின் தன்மைகள் நமக்குள் சிறுகச் சிறுக வளர்ந்து கொண்டே வரும்.

அப்பொழுது, நாம் நல்லதைச் சிந்திக்க முடியாத நிலைகள் தடைப்படுத்தும் இந்த புவியின் ஈர்ப்புக்குள் இருக்கும் விருப்பு, வெறுப்பு காரமான விஷத்தின் தன்மைகள் நமக்குள் வந்து நம்மைப் பாதிக்காது.