“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி” என்று
ஆரம்பத்திலே தென்னாட்டிலே தோன்றிய அகஸ்திய மாமகரிஷியின் இந்தப் பேருண்மையினுடைய நிலையை முதலில் வெளியிட்டது பின் வந்தவர்கள்தான்,
ஆக, அதற்கு ஒரு காவியமும் எழுதியிருப்பார்கள். சிவனுக்கும்
பார்வதிக்கும் கல்யாணம் ஆகும்போது, இந்த பூமியினுடைய கூட்டங்கள் எல்லாம் ஒரு
பக்கம் சேர்ந்துவிட்டால் அது நிலை கொள்ளாது எல்லாம் சாய்ந்துவிடும்.
ஆகவே, பூமியைச் சமப்படுத்துவதற்காக
ஈஸ்வரன் அகஸ்தியனை தென் கோடிக்கு அனுப்பினார்
என்று காவியத்தை எழுதியிருக்கிறார்கள்.
அதாவது, வடதுருவத்தில் விளையக்கூடிய இந்த சக்தியின்
தன்மை,
விண்ணிலே தோன்றிய வெப்பத்தின்
நிலைகள் கொண்டு
தென் கோடியில் தோன்றிய அந்த உணர்வின் சக்தி
ஆற்றல்கள்,
உணர்வினால் அறியப்பட்ட இந்தப் பேருண்மையினுடைய நிலைகளை இங்கே வெப்பத்தினால் தான் உருப்பெறும் தன்மையும் பெறுகின்றது.
அந்த வெப்பத்தினால் உருவாக்கிய உணர்வின்
தன்மை கொண்டு அவர் அறிந்துணர்ந்தபின் இந்த உணர்வின் ஆற்றலை
வட துருவம், தென் துருவம்
இப்பகுதிகளில்
அகஸ்தியர் தன் உணர்வலைகளைப் பரப்பச் செய்து
அதற்குபின் அங்கே உயிரணுக்கள் தோன்றியது.
ஏனென்றால், மனிதனுக்குள் தோன்றிய எண்ண உணர்வு தான்
உயிரணுக்கள் தோற்றுவிக்கக் காரணமாகின்றது.
இப்போது சூரியன் எவ்வாறு அது
கோளாகி சூரியனின் அணுக்கள் பிரபஞ்சத்தில் மற்றதை உருவாக்கச் செய்கின்றதோ,
அதைப்போன்று ஒரு மனிதன் உருப்பெற்றபின் அவனுக்குள் வளர்த்துக்கொண்ட எண்ண அலைகள்
கொண்டு பரப்பப்படும்போது இந்த உணர்வின் அணுக்களின் தன்மை கொண்டுதான் ஞானங்கள் கொண்ட
உயிரணுக்களின் தோற்றங்கள் பின் வருகின்றது.
அவ்வாறுதான் இங்கே
சமப்படுத்தும் இந்த பேருண்மையினுடைய நிலைகளையும், அன்று மெய்ஞானிகள் காட்டிய சில பேருண்மையின் தன்மைகளும்
காலத்தால் மறைக்கப்பட்டது.
ஆக தென் துருவம் வட துருவம் உறை பனிகளாக இருந்தாலும்
அங்கே உயிர் வாழ்வன உண்டு. ஆக,
வாழக்கூடிய அந்த உணர்வின் ஆற்றலை
இங்கே தோன்றிய அந்த மனிதன் தான் அங்கே சென்று
அவன் இட்ட அந்த மூச்சலைகள் கொண்டு
அந்த உயிரினங்கள் தொடர்ந்தது.
ஏனென்றால், வெப்பமில்லாத நிலைகளில் அங்கே உயிரணுக்கள்
தோற்றமில்லை. விண்ணிலே இருக்கக்கூடிய அந்த உணர்வின் ஆற்றலை வட துருவம் தனக்குள்
கவர்ந்து கொள்ளும்போது சூரிய வெப்பம் இல்லாததால் அது உறை பனியாக
மாறுகின்றது
பூமியின் வெப்பத்தினால்தான்,
அது உறைபனிகள் உருகி நீராக
மாறி, மற்ற வரும் பாகத்தில் ஏற்படும் வெப்பத்தால்
நீராவியாக மாறி, ஆவிக்குள் இருக்கக்கூடிய உணர்வின் அலைகள் மோதும்போது, அந்த
மோதலில் ஏற்படுவதுதான் காற்றலைகள்.
இதைப்போன்று அலைகள் ஒன்றுடன்
ஒன்று மோதி எதிர்மறையான உணர்வின் அலைகள் அது காற்றாக மாறி, அங்கே அணுவின் தன்மைகள் மாற்றமாகி
இந்த பூமியின் செயலாக்கத்தின்
தன்மையை
ஆற்றலாக மாற்றி வந்தது என்ற
உண்மையை
அன்று அகஸ்திய மாமகரிஷி
வெளிப்படுத்தினார்.
அகஸ்தியர் வெளிப்படுத்திய
அந்த ஆற்றலின் சக்தியைத்தான் இன்று நமக்கு உபதேசித்த
மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவருடைய அருள்சக்தி
நமக்கு இந்த பேருண்மைககளை அனைத்தையும் உணரச் செய்தது.
அப்படி அவர் உணர்ந்த ஆற்றலின் தன்மையை அவர்
காட்டிய அருள் வழிப்படியே நாம் அனைவரும் பெறவேண்டும் என்ற
இந்த நோக்குடன் அவருடன் யாம் தொடர்பு கொள்கின்றோம்.
அவருடன் தொடர்பு கொண்டு அவர் எடுத்துக்கொண்ட
உணர்வின் ஆற்றல்களை இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் செவி
வழிகொண்டு தட்டி எழுப்பி, உணர்வுகளைத்
தூண்டச்செய்து, மகரிஷிகளின் அருளாற்றலை உங்கள் சுவாசத்தில் ஈர்க்கச் செய்கின்றோம்.
மெய்ஞானிகளின்
அருளாற்றல்களை நீங்கள் சுவாசிக்கும்போது,
அந்தச் சத்தின் நிலைகள் உங்களுக்குள் உமிழ் நீராகச் சுரந்து
ஞான வித்தாக விளையும் சந்தர்ப்பத்தை
யாம் ஏற்படுத்துகின்றோம்.