ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 18, 2014

நல்லதைச் செய்யும் எண்ணத்தில் உள்ளவர்களுக்குத் துன்பங்கள் ஏன் வருகின்றது...?

மனிதர்களிலே நாம் யாரும் தவறு செய்யவேண்டுமென்று எண்ணுவதில்லை. 

நல்லதைச் செய்யும் எண்ணத்தை யார் ஒருவர் வைத்திருக்கின்றாரோ, அவர்கள் பிறர் செய்யும் துன்பத்தைப் பாசத்துடன் பார்த்து,  இப்படி ஆகிவிட்டதே  என்று ஏங்கினால் போதும்,

அவருடைய துன்ப அலைகள் இவருக்குள் எல்லை கடந்து இவருக்குள் வியாதியாகி நல்லவர்களாக இருப்பவர்களும் புலம்ப ஆரம்பித்துவிடுவர்.

இதைக் காப்பதற்கு நமக்கு காப்பு வேண்டுமல்லவா?
தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள். யாரும் கெட்டவர்கள் அல்ல.

நல்லவர்களாக எண்ணி நாம் இருக்கும்போது, சந்தர்ப்பங்கள் அந்தப் பாசம் என்ற நிலைக்கு வரப்படும்போது, விஷம் என்ற தன்மை நமக்குள் ஊடுருவி
1.இந்தப் பாசம் அதற்குள்தான் துடிக்குமே தவிர
2.விஷத்திற்குள் அடிமைப்பட்டதுதான்.

இந்த விஷத்தை முறிக்கும் இந்த ஆற்றலின் நிலைகள் அந்தச் சந்தர்ப்ப நிகழ்ச்சியை நிகழ்த்துவது மெய்ஞானியின் அருள் ஒளிதான். 

அந்தச் சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்தி, மெய் ஒளியை நாம் பெற வேண்டுமென்றால் நாம் அவசியம் இந்தத் தியானம் செய்ய வேண்டும். அந்தச் சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தியானம் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று சதா நமக்குள் சுவாசித்துக் கொண்டே இருப்பது தான். 

என்னுடைய ஜெபமே...
1.நான் நல்லவனாக வேண்டும், 
2.நான் நல்லதைச் செய்ய வேண்டும், 
3.என்னை அறியாமல் தீமை வந்தால் அதைத் தடுத்து நல்ல வழி காட்ட வேண்டும் என்பது தான்...!