அன்று ஆண்ட அரசர்கள் யாக வேள்விகளைக் கூட்டி பல பொருள்களை இட்டு இந்த
உணர்வின் தன்மையை ஒரு உடலுக்குள் சேர்த்து, மனிதனின் ஆசையை அங்கு கூட்டச் செய்கின்றனர்.
அந்த ஆசையின் மறைவிலே பல பொருள்களை இட்டு, நீ இறைவனைக் காண்பாய் என்று இப்படி சில மந்திர ஒலிகளையும் காட்டி
அந்த உணர்வை ஏற்றுக் கொள்ளும்படி செய்து
அந்த உடலில் உள்ள உணர்வைக் கரையச் செய்து,
தனக்குள் கரையும் சக்தியாக உணர்வைக் கூட்டி
அந்த மனிதன் இறந்தபின் அந்த ஆன்மாவைக் கைவல்யப்படுத்தி
சில வினைகளைச் செய்தார்கள் அன்றைய அரசர்கள்.
இது காளி, இது சாமுண்டீஸ்வரி என்ற நிலையில் இது கருப்பணச்சாமி,
இது முனுசாமி என்ற கொடூர உணர்வின் தன்மைகளைப் பெற வைத்தாலும் இவர்கள்
அத்தகைய நிலைகள் கொண்டு தீமையை விளைவிக்கும் உணர்வாகத்தான் மனித உடலில் இருந்து
பிரித்துச் செயல்படும் தன்மை வந்துவிடுகிறது.
இன்று யாகங்கள் வளர்க்கப்படும்போது இந்த தெய்வம் செய்யும் என்ற ஆசையின்
நிலைகளில் நாம் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் அதிலே நாம் சிக்கிக் கொள்கின்றோம்.
ஏனென்றால், இந்த உணர்வுகள் ஆரம்பத்தில் அரசர்களால்
செய்யப்பட்ட இந்த கரையான் மந்திரம். அது எவ்வாறு உருவானதோ
விளைந்த இந்த வித்து அந்த வழியில் வந்துவிடும்.
அந்த யாக வேள்விகளில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்கள்
அங்கே ஜெபிக்கும் உணர்வுகளைப் பதிவு செய்தபின் அடுத்து அந்த உடலைவிட்டுப் பிரிந்தால், மந்திரவாதிகள் அந்த ஆன்மாக்களை எப்படி அழைத்துச்
செல்கின்றனர் என்பதை நமது குருநாதர் காட்டுகின்றார்.
இதைப்போலத் தீமைகள்
நம்மையறியாமல் எத்தனையோ வருகின்றது.
இதைத்தான் ஒரு அரசன் தனக்குக் குலதெய்வமாக வைத்து
இத்தகைய சட்டங்களை வகுத்து
குணத்தின் சட்டமாக வகுத்து,
அது மதமாக வகுக்கப்பட்டு
அவன் இட்ட நிலைகளில் அந்த குடிமக்கள் கேட்டறிந்தால்
அவர்கள் இறந்தபின் இதே மந்திரத்தால்
அந்த ஆன்மாக்களைத் தன் சக்தியாக எடுத்துக் கொள்கின்றான்.
அப்பொழுது, அந்த உணர்வின் தன்மைகளைக் கவர்ந்தவர்கள் எத்தனை ஆயிரம் பேர் அதில் இருந்தனரோ அந்த உணர்வின்
அலைகளை இவன் கவர்ந்திடும் நிலையும், ஞானமாக அறிந்திடும் நிலை
வருகின்றது.
பின், இந்த அரசன் பல மனித உடலில் விளைவித்த
இந்த உணர்வுகளைத் தனக்குள் அதிகரித்து இந்த உடலைவிட்டுச் சென்றபின் இன்னொரு
உடலுக்குள் இருந்து ஆட்சிபுரியும் நிலையில் செயல்படத் தொடங்குகின்றான்.
அதாவது, பிறவியில்லாது சாகாக்கலையாக மனித உடலுக்குள் தாவி தாவிச் சென்று தன் சுகத்தை அந்த உடல்களிலே அனுபவித்துக் கொள்ளலாம் என்ற நிலையில் தான் அன்று
அரசர்கள் செய்தார்கள்
அரசர்கள் செய்த நிலைகள் தான்
இன்று நாடி சாஸ்திரங்களாக
இருக்கின்றது.
இந்த நாடி சாஸ்திரத்திலே அவன் எந்தெந்த நட்சத்திரத்தின் நிலைகளை அவன் அமைத்து
வந்தானோ அதன் அடிப்படையில் இவன் இறந்தபின் சாஸ்திரத்தை நீ எடுத்து தொடுவாய்
என்றால் அதிலே உனக்கு மகா சக்தி கிடைக்கும், உலகை
அறியும் நிலைகள் வரும் என்று காட்டப்பட்டிருக்கும்.
அதன்படி அவர்கள் இதைப் படித்தார்கள் என்றால் எந்த அரசன் தன் குடிமக்களை மந்திர
ஒலியில் சிக்க வைத்திருந்தானோ அந்த குடிமக்கள் இறந்தபின் அந்த உணர்வின் தன்மை
தனக்குள் வலுவாக்கிக் கொண்டபின்,
அடுத்த உடல் தாவுவதற்காக
அவன் எழுதி வைத்ததுதான் நாடி
சாஸ்திரம்.
அந்த நாடி சாஸ்திர பிரகாரம் நாடி வாசிப்பவர்கள் மீண்டும்
அந்த உடலுக்குள் வரவேண்டும் என்றால் இன்னென்ன முறைப்படி நீ செய்தாய் என்றால் அதிலே
இத்தனை ஒலிகளை நீ எழுப்பப்படும்போது அதிலே நீ மிகப்பெரும் சக்தியைப் பெறுவாய்
என்று அதிலே குறிப்பிட்டிருக்கும்.
முதல் நாடியிலே அதை வாசிக்கப்படும்போது உடலை விட்டுப் பிரிந்த அந்த அரசனின் ஆன்மா, இந்த நாடியை வாசித்தபின் இவர்கள் உடலிலே வந்துவிடும்.
அவர் அரச காலங்களிலே எதை எல்லாம் செய்தார்களோ அந்த முன்பிறவி, பின்பிறவி என்று இன்று நாடிகளிலே
சொல்வார்கள். ஒவ்வொரு பிறவியிலேயும் அந்த மனிதன் எடுத்துக்கொண்ட உணர்வலைகளை அது
படித்து இவருக்குள் சொல்லும்.
இருந்தாலும் அந்த உணர்வைத் தனக்குள் எதை எதை எல்லாம்
சேர்க்கவேண்டுமோ இந்த உடலில் இருந்து, இந்த உடலுக்குள் இருக்கும்
மற்ற குணங்களை இவன் அரசாட்சி செய்து இந்த உடலையே தன் கைவல்யப்படுத்திக்
கொள்கின்றான்.
ஆனால், இந்த உடலிலே தான் எடுத்துக்கொண்ட நிலைகள் அந்த
உடலின் உணர்வுடன் கலந்து வரப்படும்போது முதல் அரசனாக இருந்து ஆட்சிபுரியும் நிலைகள்
கொண்டு ஒவ்வொரு புறத்திலும் தன் உடலிலும் சுகபோகங்கள் அனுபவித்து வந்தாலும் மற்றவர்களுக்குச்
சில நிலைகளைச் சொல்லும்.
அதாவது, நாடி சாஸ்திரத்தின்படி நீ இன்ன இடத்திலே பிறந்தாய்,
இன்ன இடத்தில் இருந்தாய், அதிலே இன்ன கல்லை நீ பார். அதிலே நீ உற்றுப்பார்த்தால் உன்னுடைய
முன்பிறவி தெரியும், உன் வீடு தெரியும் என்றெல்லாம் அந்த நாடியிலே சொல்லியிருக்கும்.
அதன்படி சென்று பார்த்தோம் என்றால் அதெல்லாம் நிஜமாகவே
இருக்கும். ஆனால், இந்தப் பிறவியைக் கடந்தபின் அடுத்து நாம் என்ன ஆவோம் என்று சொல்லாது.
பின், நீ இந்த ஆலயத்திற்கு போய் அதை நீ வழி மொழிந்து இந்த
யாகத்தைச் செய்தால் அதன் வழிகளில் உன்னுடைய தீமைகள் அகலும் என்று சொல்வார்கள்.
ஆகவே அந்தத் தீமைகளும் அது கடத்திச் சென்றவுடன் போகும்போது
இடைமறித்து இன்னின்னார் உன்னைச் சந்தித்ததனால் இது தடைப்பட்டுவிட்டது என்று சொல்லும்.
இந்த நாடி சாஸ்திரம் பார்க்கும்போது. இந்த வாழ்க்கையில்
நடந்ததை எல்லாம் தெளிவாகச் சொல்லும். இப்படியே போகப் போக அடுத்தடுத்து குறைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு நாடி பார்ப்பதற்கு
நாம் காசு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
ஆகவே அதிலே எடுத்துக்கொண்ட உணர்வின் சுவாச நிலை அந்த அரசன்
பற்றிக் கொண்டாலும் இந்த உணர்வின் தன்மை குறைந்து குறைந்து யானை தேய்ந்து கட்டெறும்பு
ஆன மாதிரி ஆகும்.
இந்த நாடியை இன்னொரு இடத்திலே இத்தனை காலம் வரும்போது
இன்ன இடத்திற்குப் போனால் இன்னார் வருவான். அவன் கல்வியறிவு இல்லாதவனாகக்கூட இருப்பான்.
அந்த நாடியை இங்கே கொடுத்து விட்டால் அதனின் உணர்வு கொண்டு உனக்கு நற்காலம் வரும் என்பர்.
ஆனால் இந்த நாடி ஏடுகளை இப்பொழுது ஒருவன் கையிலே கிடைத்துவிட்டால்
அதிலே சில மந்திர ஒலி எல்லாம் காட்டி இருக்கும். இதை எல்லாம் வைத்து இவர்கள் வயிற்றுப்
பிழைப்பாகக் காண்கின்றார்கள்.
அவன் சொன்ன முறைப்படி இல்லாதபடி இவன் கையிலே சிக்கி, நீ
இருடா.., நான் பார்க்கிறேன் என்பர். எல்லா மக்களையும் இவன் ஏமாற்றுகின்றான். ஆனால்
அதே சமயத்தில் இவன் கையிலே சிக்கிய இந்த நாடி நீ இரு, நான் பார்க்கிறேன் என்று ஒரு
குடும்பச் சொத்தாக வைத்து நாடி சாஸ்திரம் என்று ஓட்டிக்கொண்டுள்ளனர்.
அப்படி நாடி சாஸ்திரங்கள்
பார்க்கும் அந்தக் குடும்பமும் சின்னா பின்னமாகிக் கொண்டே தான் இருக்கும்.
இன்று உடலினுடைய நிலைகள் இருக்கும். அவன் எடுத்துக் கொண்ட
ஆசையின் அலைகள் கொண்டு இந்த ஆன்மா மிகவும் சிரமப்படும்.
அதைக் கேட்டுணர்ந்து
நம் வாழ்க்கைக்கு எடுத்தாலும்
நமக்குள் அந்த
தீமையேதான் விளையும்,
தீமையேதான் நமக்குக்
கிடைக்கும் என்ற நிலையை அங்கே தெளிவாக உணர்த்துகின்றார் நமது குருநாதர்
ஈஸ்வராய குருதேவர்.