ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 17, 2014

நாம் அனைவரும் சப்தரிஷிகளாக ஆகவேண்டும்

பாலுக்குள் ஒரு விஷம் பட்டுவிட்டால் உடனே வேலை செய்யும். பாலுக்குள் சீனியைப் போட்டால் அது இனிக்கும்.

பாலுக்குள் இருக்கக்கூடிய சக்தி
நம் உடலுக்குள் சத்தாவதற்கு 48 நாட்கள் ஆகும்.

ஆனால், பாலுக்குள் விஷம் பட்டுவிட்டால்
ஒரு நிமிடத்திலே அது நம்மை மயங்கச் செய்யும்.

இதைப் போல நாம் மகிழ்ச்சியின் தன்மை கொண்டு பிறருக்கு எத்தனையோ நிலைகளில் நாம் உதவி செய்கின்றோம்.

அப்படி உதவி செய்தாலும், அவர்கள் படும் வேதனையை நாம் சுவாசிக்கும்போது அந்த உணர்வின் தன்மை நமக்குள் நச்சுத்தன்மையா
நமக்குள்ளும் வேதனை கலந்து
நம்மையும் வேதனைப் படச்செய்துவிடும்.

ஆக அந்த வேதனையை நமக்குள் வளர்த்துவிட முடியுமே தவிர அந்த விஷத்திலிருந்து தப்புவது மிகக்கடினம். தப்ப வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்?

இன்று விண்ணிலே தோன்றக்கூடிய விஷத்தின் ஆற்றல் மிக்க தன்மைகள் பலவும் பரவி வந்தாலும் சூரியன் தனக்குள் அந்த விஷத்தின் தன்மையை மாற்றிவிட்டு ஒளியின் தன்மையாக உலகத்தைச் சிருஷ்டிக்கச் செய்கின்றது.

அதாவது கோள்களின் நிலைகளில் உயர்ந்தது சூரியன்.
உயிரனங்களிலே உயர்ந்தவன் மனிதன்.
எதையும் மாற்றியமைக்கும் ஆற்றல்மிக்க சக்தி பெற்றவன் மனிதன்.

ஆகவே, தீயதின் தன்மை நமக்குள் அணுகாத வண்ணம் செயல்படுத்தும் ஆற்றல்மிக்க சக்தியைப் பெருக்கிக் கொள்ளவேண்டும். அவ்வாறு பெருக்கும் ஆற்றலைப் பெருக்கியவர்கள்தான் “சப்தரிஷிகள்”.

சூரியன் ஆறு கலர்களை ஏழாவது ஒளியாக மாற்றுகின்றது, அதைப்போல மனிதன் இன்று ஆறு குணங்களின், ஆறு மணங்களின் நிலை கொண்டுதான் ஆறாவது அறிவின் செயலில்தான் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

தாவது, அந்த ஒளியாக மாற்றும் அந்த உணர்வின் தன்மையை நாம் செம்மையாகச் செய்துவிட்டால் அதுதான் “சப்தரிஷி”.

ஆகவே, நாம் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவர்கள். எது வந்தாலும் அந்த உணர்வைத் தனக்குள் ஒளியாகும் மாற்றும் நிலையை, அந்த ஏழாவது ஆற்றலான ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள் தான் “சப்தரிஷிகள்”.

அவ்வாறு உணர்வினுடைய நிலைகளை ஒளியாக மாற்றி விண் சென்றவர்கள்தான், அவர்கள் உடலில் விளையவைத்த இந்த ஆற்றல்மிக்க இந்த உணர்வின் எண்ண ஒளிகள் இந்த பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. அதை நாம் பருக வேண்டும்.

மனிதனுடைய நிலைகளில் கடைசி ஏழாவது நிலையாக
ஒளியின் சரீரமாக மாற்றக்கூடிய ஆற்றலை
எல்லோரும் பெருக்கிக் கொள்ள வேண்டும்.