குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு, சப்தரிஷி மண்டலங்களின் தன்மையும் அதிலிருந்து
வெளிப்படுத்திய நிலைகளும், எந்த ரிஷிகள்
உணர்த்தினாரோ அந்த ரிஷிகளின் ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டுதான் யாம் கடும் ஜெபத்தில்
இருந்து கொண்டிருக்கின்றோம்.
அந்த ஆற்றல்மிக்க தன்மையை நமக்குள் செலுத்தி, நம்மையும் காத்து நாம் இடக்கூடிய
மூச்சலைகளின் தன்மைகள் இந்த உலகத்தில் வரக்கூடிய விஞ்ஞான அறிவிலிருந்து நாம்
காக்கும் நிலையாக நாம் மாற்ற வேண்டும்.
நம்மால் முடியுமா.,? என்ற சந்தேகத்தில் இருக்க வேண்டாம்.
நாம் எந்த உணர்வின் தன்மையை நாம் எடுத்து நமக்குள் உணர்வைச் செலுத்துகின்றோமோ,
இந்த உணர்வின் ஈர்ப்பின் அலையே நமக்குள் செயல்படும்.
இன்று கம்ப்யூட்டர் நிலைகளை எடுத்துக் கொண்டாலும்
கடிகாரங்களில் எடுத்துக் கொண்டாலும்
நுண்ணிய அலையின் தன்மை கொண்டுதான்
ஒரு சீரான நிலைகளில் அதாவது எலக்ட்ரானிக் நிலைகளில்
அது தன்னுடைய உணர்வலைகளை செல்களில் பாய்ச்சியவுடன்
தன் உணர்வலைகளை சீராகச் செயல்படுத்துகின்றது.
அதைப்போன்று நம் எண்ணத்தில் சீராகச் செயல்படுத்திக்கொண்டால், நம் மனிதனுக்குள்
இருக்கக்கூடிய உணர்வின் ஆற்றல்மிக்க செயல்களை நாம் எதையும் நமக்குள் அறிந்துணரும்
செயல் வரும்.
ஆக நாம் இழிநிலையான உணர்வுகள் நம் புலனறிவின் நிலையும் நாம் எண்ணும் எண்ணமும்
நம் உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் நிலையைப் பிரிக்க முடியாததை நாம் பிரிக்கச் செய்கின்றோம்.
அதாவது, பாலுக்குள் அந்த புளிப்பின் சத்தின் தன்மைகள் தனக்குள் இயங்காத
நிலைகள் கொண்டு, பிரித்துப் போகாத வண்ணம் தனக்குள் ஐக்கியமாகி உறைந்தால்தான்
அதற்குள் இருக்கக்கூடிய வெண்ணெயை எடுக்கமுடியும்.
ஆனால், பால் சூடாக
இருக்கப்படும்போது பிரிக்கும் தன்மை வந்து விட்டால், பிரிப்பதற்குள் அந்த வெண்ணெயின் தன்மை
கலந்துவிட்டால் வெண்ணெயைப் பிரிக்க முடியாது.
இதை ஒவ்வொருவரும் கவனமாகக்
கவனிக்க வேண்டியது. யாம் எடுக்கும் இந்த உணர்வின் நிலைகள் உங்களுக்குள்
பெறுவதற்கு, யாம் கடும் ஜெபத்தால் இந்த உணர்வின் அலையைப் பதியச்செய்கின்றோம்.
எண்ணத்தை வேறு பக்கம்
கவனத்தைத் திருப்பிவிட்டு இந்த உணர்வின் உங்களுக்குள் அது தடைபடுத்தும்
நிலைகளுக்கு இல்லாதபடி, உங்கள்
புலனறிவிற்குள் மறைந்திருக்கக்கூடிய ஆற்றல்மிக்க நிலைகளை தட்டி எழுப்புகின்றோம்.
அதே சமயத்தில், உங்கள்
உணர்வின் எண்ணங்களை மெய்ஞானியின் உணர்வுடன் தெம்பு கொள்ளச் செய்து இந்த உணர்வின்
அலையை நீங்கள் பெருகச் செய்வதற்குத்தான் இதைச் செயல்படுத்துகின்றோம்.