ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 9, 2024

எத்தனையோ எட்டாக் காலத்தில் அகஸ்தியன் வெளியிட்ட உணர்வுகளை நீங்கள் எளிதாகப் பெற முடியும்

எத்தனையோ எட்டாக் காலத்தில் அகஸ்தியன் வெளியிட்ட உணர்வுகளை நீங்கள் எளிதாகப் பெற முடியும்


அன்று மெய்ஞானி தெளிவான நிலைகளில் சகலத்தையும் தெளிவாக எடுத்துரைத்தான். அவன் உடலிலே விளைந்த அந்த உணர்வுகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக மாற்றப்பட்டுள்ளது.
1.அதைத்தான் என் குரு வழி துணை கொண்டு நுகர்கின்றேன்
2.அந்த உணர்வின் இயக்கத்தை என் உணர்வால் அறிகின்றேன்
3.உணர்வின் இயக்கத்தை எனக்குள் இயக்குவதைக் காணுகின்றேன்.
4.அந்த உணர்வினைச் செவி வழி உங்கள் உணர்வுகளை உந்தப்படும் பொழுது கண் வழி உங்களை நுகரச் செய்கின்றேன்.
 
பேரண்டத்தின் உண்மையை உணர்ந்து இயற்கை எப்படி விளைந்தது என்ற நிலைகளை
1.உயிரால் நீங்கள் எண்ணி எடுக்கும் பொழுது இந்த உணர்வின் அணுவின் தன்மையாக விளைந்து அதை நுகரப்படும் பொழுது
2.அருள் ஞானத்தின் நிலைகள் நீங்கள் பெற வேண்டும் பெறுவீர்கள் பெற முடியும் என்பதனைத் தான்
3.எமது குருநாதர் எனக்கு ஊட்டிய அந்த உணர்வின் தன்மையை இன்று உங்களுக்குள்ளும் விளையச் செய்கின்றேன்.
 
அகண்ட அண்டத்தில் பெருகி வருவதை ஒருக்கிணைந்த உணர்வின் தன்மையை நாம் பெற்றோமென்றால் மனிதன் என்ற நிலைகள் முழுமை அடைந்துஇனிப் பிறவியில்லா நிலை அடைய இது பேருதவியாக இருக்கும்.
 
உங்களிலே இது விளைந்து அதை நான் கண்டு மகிழ்ந்தால் எனக்குள் பேரின்பம் வளர்கின்றது. நீங்களும் இந்த உணர்வின் தன்மையைப் பிறர் செய்யும்படி இந்த உணர்வுகளை ட்டி அங்கே இது விளைந்து அதை நீங்கள் கண்டு பெருமைப்பட்டால் நன்றாக இருக்கும்
 
ஆகவே உயிர் எப்படி ஒளியானதோ தைப் போல
1.27 நட்சத்திரங்களின் உணர்வை ஒளியாக மாற்றிய
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தான் நீங்கள் பெற வேண்டும்.
 
அந்த உணர்வுகளை அகஸ்தியன் அறிந்த அறிவையும் குருநாதர் கண்ட உணர்வும் எம்மைப் பெறச் செய்த இந்த உணர்வுகள் அறிந்த உணர்வுகள் எமக்குள் பெற்றதை உணர்வலைகளாக மாற்றப்படும் பொழுது ஒலி எழுப்பும் பொழுது உங்கள் செவிகளில் இந்த உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது.
 
1.உயிருடன் இந்த உணர்வுகள் பட்டபின் உங்கள் கண்ணிலே பதிவாக்குகின்றது
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ எத்தனையோ எட்டாக் காலத்தில் அகஸ்தியன் வெளியிட்ட உணர்வலைகள் இங்கே இருப்பதை இழுக்கின்றது.
3.அவன் வளர்ந்து இருளை அகற்றி ஒளி என்ற உணர்வு பெற்ற அவனின் ஆற்றலை நீங்கள் எளிதாகப் பெற்று
4.விஞ்ஞான அறிவில் வரும் இருளை மாய்த்து ஒளி என்ற உணர்வு நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான்
5.இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன் வளர்த்துக் கொள்ளுங்கள்.

சத்திய ஜெபம் பெற்று விட்டால் எந்தத் தீய சக்தியையும் நற்சக்தி ஆக்கிடலாம்

சத்திய ஜெபம் பெற்று விட்டால் எந்தத் தீய சக்தியையும் நற்சக்தி ஆக்கிடலாம்


எல்லாம் அப்பரம்பொருளின் ஐக்கியம்தான் என்ற எண்ண நிலை செயல்பட்டுஅவ் வழித்தொடரில் வாழ்ந்திடும் பக்குவத்தை மனித ஆத்மாக்கள் பெற்று அதன் வழித்தொடரினைச் செயல்படுத்திட
1.நல்லுபதேசங்களை ஏற்றிடல் வேண்டும்.
2.அந்நல்லுபதேசத்தையே நற்செயலாக்கிடல் வேண்டும்
3.வயது வரம்பு இதற்கு வேண்டியதில்லை.
 
பக்தியினால் மட்டும்தான் உபதேசிக்க முடிந்திடும் என்ற காலநிலை மாறிவிட்டது.
 
தீயோரைக் காண்பதுவும் தீதே
தீயோர் சொல் கேட்பதும் தீதே
தீயோருடன் இணங்கி இருப்பதுவும் தீதே என்றெல்லாம்
முந்தைய காலத்தில் செய்யுள்படுத்தி உபதேசித்தனர்.
 
விஷமாய் தீய சக்தி படர்ந்துள்ள நிலையில் நற்சக்தியை சத்தியத்தை நிலை நாட்டுபவர் கோடியில் ஒருவர் கூட இவ்வுலகினில் மிஞ்சவில்லை…
 
இவ்வுலகமே இப்பொருளாசை என்ற பேய்க்கு அடிமைப்பட்டு விட்டது.
 
ஆலயங்களுக்குச் சென்றாலும் இப்பொருள் உள்ளவனுக்குத்தான் முதலிடம். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று எப்பொருளை வைத்து இவ்வாக்கியத்தை அமைத்தார்களோ அதுவே நிலைத்துப் பொருளுக்கே (பணம்) அடிமைப்பட்டு விட்டது இவ்வுலகம்.
 
பொருள் வைத்துத்தான் எச்சக்தியும் செயல் கொள்கின்றது இன்று இப்பூமியில்.
 
பல மடாலயங்கள் அமைத்து அங்கு செயல் புரியும் மடாதிபதிகளே இப்பொருள் உதவி புரிபவரின் நிலைக்கொப்பத்தான் அவர்களை நடத்திடும் நடைமுறை உள்ளது.
 
காரணம்அவர்களின் சத்தியத்தை நிலைநிறுத்தப் பொருள் வேண்டுமாம்…!
 
பஜனைகள் பாடிட ஆண்டவனின் அடிமை நாமம் பூண்டு ஒவ்வொரு திரு ஸ்தலங்களுக்கும் சென்று அவ்வாண்டவனை எண்ணித் துதி பாடப் பொருள் உதவி அளித்துத் தான் அவ்வாண்டவனுக்கும் துதி பாடுகின்றான் அப்பாடகன்…
 
அவனுக்கு இட்டிருப்பது ஆண்டவனின் நாமம் ஆண்டவனின் அடிமையாம் அவன். ஆனால் அவன் ஆண்டவனிடம் அவனைத் துதித்துப் பாடக் கூலி பெற்றுக் கொள்கின்றான். ஆண்டவனை மனமுருக அன்புருக பக்திப் பாடலை இவன் பாடுகின்றானாம்.
 
பக்தியே விலை பேசிப் பாடுகின்றனர். அவனைத் துதிபாட இப்பக்கமேள மனித ஆன்மாக்கள் வேறு.
1.ஆண்டவனின் துதி பாடப் பொருள் வாங்குபவன் பக்தியினால்
2.ஆண்டவனின் அருள் எப்படிக் கிட்டும்…?
 
தான் பிழைக்க வேண்டாமா…? தன் சுற்றத்தாரை எப்படிக் காப்பாற்றுவது...? என்று வாதங்கள் புரிவார்கள். சோம்பேறி வாழ்க்கையாகப் பிறரின் உழைப்பில் இருந்து கிடைக்கப் பெறும் ஊதியத்தை ஏற்று இப்பஜனை பாடித் திரிபவனின் ஆன்மாவெல்லாம் எந்த நிலை பெறும்…?
 
எங்கு உள்ளான் அந்த ஆண்டவன்…?
 
பொருள் வாங்கி இசைத்திடும் இசைப்பவனின் இசையும் அப்பொருளுக்காகத்தான் அடிமைப்பட்டதேயன்றி ஆண்டவனுக்கு அடிமைப்படவில்லை.
 
1.தன்னுள்ளே உள்ள ஆண்டவனை அன்பாக்கி
2.தன்னை ஒத்த அனைத்து உயிர் ஆண்டவ ஆத்மாக்களிடம் அன்பு கொண்டு
3.தன்னையே அவ்விசையின் இசையாகப் பக்தி கமழச் செய்து
4.தன்னைச் சார்ந்தோரையும் இப்பக்தி இசையில் வழிநடத்திடல் வேண்டும்.
 
ஒவ்வொரு நிலைக்கும் உம்மால் மாறு கொண்ட வாதம் உள்ளதே…! சாதாரண நடைமுறை கொண்ட மனித ஆத்மாவினால் இச்சக்தி நிலை எல்லாம் பெற முடியுமா…? என்று எண்ணுவீர்.
 
ஒவ்வொரு ஆத்மாவும்
1.அச்சத்தியம் என்ற நேர்கோட்டைச் செயல்படுத்தினால் எத்தீய சக்தியும் நம்மை அண்டாது.
2.தீயது என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் தீயவர் நல்லவர் என்ற பாகுபாடு எண்ணம் கொள்ளாமல்
3.நம் சத்தியக் கோடு நேராக இருந்து விட்டால் எச் சஞ்சலத்திற்கும் இடமில்லை.
4.தீயோரையும் காணலாம். தீயோர் சொல்லும் கேட்கலாம் தீயோருடனும் வாழலாம்
5.தீயது என்று ஒதுங்கி ஏனப்பா செல்ல வேண்டும்…?
6.நம் சத்தியத்தின் நேர்வழியினால் நாமும் இவ்வுலகினில் உதித்த உயிரணுதான்.
7.தீயோன் என்று ஒதுக்கப்பட்டவனும் நம்மை ஒத்த உயிரணுதான்.
8.நம்மால் தீயவனையும் நல் உணர்வு படுத்திடலாம் என்ற ஜெப நிலை கொள்ள வேண்டும்.
 
ஒதுங்கி வாழ்வதல்ல வாழ்க்கை.
 
பல காலங்களுக்கு முன்னே போகரினால் ஸ்தாபிதம் செய்து வைத்த திரு முருகன் சிலையை நவபாஷாணத்தைக் கொண்டு செய்விக்கப் பெற்றது.
 
விஷத்தையே ஆண்டவனின் உருவமாக்கி அபிஷேக ஆராதனை செய்து இம்மனிதர்களை உண்ணச் செய்தான் அப்போகநாதன்
 
இது எதை உணர்த்துகின்றது…?
 
விஷமென்று ஒதுங்கிச் செல்வதினால் நம்மையும் விஷமாக்கிக் கொள்கின்றோம்பயந்த நிலையில்.
 
1.ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அச்சத்திய ஜெபம் ஓங்கல் வேண்டும்
2.சத்திய ஜெபம் பெற்று விட்டால் எந்தத் தீய சக்தியையும் நற்சக்தி ஆக்கிடலாம்.
3.நம் உடலில் பல கோடி அணுக்களையும் நம் நிலைக்குக் கட்டுப்படுத்தலாம்.
4.இந்நிலை பெற்றவனின் ஜெபத்தினால் அனைத்துச் சித்து நிலைகளையும் கண்டிடலாம்
5.சித்தனுடனே கலந்திடலாம் சிவபதம் எய்திடலாம்.
 
மனித எண்ணங்களின் தடுமாற்றத்தினால் இவ்வுலகமே இம்மனிதனால் தான் விஷம் கொண்டுள்ளது. சஞ்சலம் கொள்ளா அமைதி வாழ்க்கை வாழ்பவனுக்கு அவனின் ஆரோக்கியம் நிலையும் பாதிப்பதில்லை. அதன் வழித் தொடரில் எச்சிக்கலும் ஏற்படுவதில்லை.
 
மனச் சஞ்சலத்துடனும் கோபத்துடனும் உள்ளவன் புசிக்கும் உணவு அவனுக்குச் செரிப்பதில்லை.
 
உணவே விஷமாக ஆவியான அமில நிலை கொண்டு இவ் உடலுக்கு வாய்வு என்ற நிலை ஏற்படுத்தி அங்கங்கு உடல் உறுப்புகளில் தங்கி விடுகின்றது.
 
சீராய் இவை வெளியேறா விட்டால் ஆங்காங்கு தங்கி உள்ள இக்காற்றின் அமிலமே அங்கு உறைந்து மேலும் உண்ணும் உணவைச் செரிக்க விடாமல் இத்தங்கிய வாய்வு அமிலங்கள் உறைந்து கோழையாகக் கட்டி நிலை பெற்று சளி பிடித்து தும்மல் எய்தி இருமல் ஆகி இக்கோழை வெளி வரும் வரை இந்த உடல் மண்டலமே அவஸ்தையுற்று அதன் தொடர்ச்சியில் பல நிலைகள் ஏற்படுகின்றது.
 
ஆங்காங்கு தங்கிடும் அவ்வமிலத்தினால் சில உறுப்புகளும் கெடும் நிலை எய்துகின்றது. இதன் தொடர்ச்சியில் பல வியாதிகள் மனிதனுக்கு வருகின்றன.
 
நாமே சம்பாதித்துக் கொள்வது தான் இவ்வியாதியே அன்றி உண்ணும் உணவில் இருந்து மட்டுமல்ல மற்ற நிலையில் இருந்து மட்டுமல்ல நம்மைத் தொற்றிக் கொள்வது என்பதல்ல இந்த வியாதி.
 
வியாதியில் அடிபட்டவனின் சுவாசக் காற்றினிலே இந்நிலை கொண்ட அணுவைத்தான் வெளியிடுகின்றான். இவனைச் சார்ந்தவரின் நிலையையும் இவனின் வட்டத்தில் ஈர்த்துக் கொள்கின்றான்.
 
இவ்வெண்ணத்தின் நிலையை மாற்றுவதால் ஏற்படும் நிலையிலிருந்து நம் ஆத்மா தப்பும் நிலை பெற வேண்டும்…”

November 8, 2024

எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கத் தவமிருக்கின்றேன்

எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கத் தவமிருக்கின்றேன்


கஸ்தியன் தாய் கருவிலே நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று அவன் வாழ்க்கையில் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெற்றான்.
1.அணுவின் இயக்கத்தை அறிந்தான் அகஸ்தியன் என்று புகழ் பெற்றான். `
2.அணுவின் இயக்கத்தை அறிந்தான் விண்ணின் ஆற்றலை உணர்ந்தான் நுகர்ந்தான்… துருவன் ஆனான்.
 
அகஸ்தியன் திருமணமாகும் பொழுது இரு மனமும் ஒன்றாகித் துருவ மகரிஷி ஆகின்றான். தான் பெற்ற சக்திகள் அனைத்தும் தன் மனைவிக்குச் சொல்லிக் கணவனும் மனைவியும் இருவரும் ஒன்றாக இணைந்து பூமியின் துருவப் பகுதியை நுகர்ந்து அதன் உணர்வைத் தனக்குள் உருவாக்கி துருவ மகரிஷி ஆகின்றார்கள்.
 
அவர்கள் இருவருமே ஒன்றி வாழ்ந்து உடலை விட்டுச் சென்ற பின் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து இரு உயிர் ஒன்றாகி நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்றிடும் பேரருள் பேரொளி பெற்றுத் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெறுவோம்.
2.அதை ஏங்கித் தியானிக்கும் பொழுது நம் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் அருள் சக்தியாக உருவாகும்.
 
கஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி துருவத்தின் எல்லையில் குடி கொண்டு நஞ்சினை வென்றிடும் அருள் சக்தியாக வான் வீதியில் பரவச் செய்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ த்தியில் எண்ணி உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி ங்கித் தியானியுங்கள்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
1.உங்கள் உடலுக்குள் பேரருளை உருவாக்குங்கள் பேரொளியாக உங்கள் உணர்வினை மாற்றுங்கள்.
2.தியானத்தில் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் ளியான அணுக்களாக உருவாகும்.
 
கஸ்தியமா மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெற்று உங்கள் இல்லற வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருளை நீக்கி நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலை அடைந்து தெளிந்த மனதுடன் மகிழ்ந்திடும் உணர்வுடன் வாழ்ந்து பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று
1.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து
2.பிறவி இல்லா நிலை அடையும் அருள் சக்தி பெற்று
3.பிறவியில்லா நிலை அடையும் அருள் வாழ்க்கை வாழ்ந்து
4.பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையில் வாழ்ந்து
5.என்றும் ஏகாந்த நிலை என்ற அருள் சக்தி உங்களில் பெற்று என்றும் ஏகாந்த வாழ்க்கையாக வாழ்ந்து
6.ஏகாதசி என்ற பத்தாவது நிலையான நிலையில் முழுமையாகிப் பேரருளுடன் வாழ்ந்து
7.அருள் சக்தி பெற்றிட அருள் வாழ்க்கை வாழ்ந்திட மகரிஷிகளின் அருள் சக்தி உங்களில் பேரருளாக உருவாகி
8.பேரின்பம் பெறச் செய்யும் அருள் சக்தி பெற்றிட எமது குரு அருள் உங்களுக்குள் பதிவாகும்.
 
எமது தியானமே அதுவாகி அதையெல்லாம் நீங்கள் பெற தவம் இருக்கின்றேன்த்தின் பலனை நீங்கள் அனைவரும் பெறுவீர்கள்.
 
பேரின்ப நிலைகளை நீங்கள் பெற்று அனைவருக்கும் பேரின்பம் பெறச் செய்யும் உணர்வுகள் உங்களில் விளைந்து உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை நன்மை பெறச் செய்யவும் உங்கள் பேச்சும் மூச்சும் உங்கள் குடும்பத்தில் அனைவரையும் மகிழ்ந்து வாழ்ந்திச் செய்யும்.
 
உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கி என்றும் பேரொளி என்ற நிலைகள் அடைந்து பேரின்ப நிலை பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வுகள் உங்களில் விளைந்து இருளை அகற்றி மெய்ப்பொருள் கண்டு விஞ்ஞான உலகில் வரும் நஞ்சினை வென்று அருள் உணர்வுகள் உங்களில் விளைந்து நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்து
1.பிறவியில்லா நிலை என்ற முழுமை அடைந்து முழுமை அடையும் அருள் சக்தி பெற்று
2.எல்லா மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குள் உறுதுணையாக இருந்து
3.மகரிஷியின் அருள் வட்டத்தில் நீங்கள் வாழ்ந்திட தவமிருக்கின்றேன் தியானிக்கின்றேன் (ஞானகுரு).

யாருக்கு யாரும் மூத்தவருமல்ல… இளையவருமல்ல…!

யாருக்கு யாரும் மூத்தவருமல்ல… இளையவருமல்ல…!


ஒவ்வோர் உயிரணுவையும் தனதாக எண்ணி
1.அவ்வுயிர் ஆத்மாக்கள் படும் வியாதியின் சங்கடத்தை இவ்இறை பக்தி கொண்ட இறை ஆத்மாக்களினால் ஏற்கப் பொறுக்காமல்
2.அவ்வாத்மா வேறல்ல தனது ஆத்மா வேறல்ல என்ற நிலைப்படுத்தி
3.ஒவ்வொரு சிறு உயிரணுவும் அதன் துடிப்பில் வேதனை உறுவதை தன் உயிராத்மாவுடன் கலக்கவிட்டு
4.தானே அவ்வேதனைக்கு உடையவனாகி அதை அகற்றிடல் வேண்டும்.
5.மற்ற உயிரணுக்கள் எல்லாமே இன்புறல் வேண்டும் என்று
6.இறை ஆத்மாவின் அன்பு கொண்ட பக்தி ஜெபம் பெற்றவர்கள் அவ்விறைவனாகவே செயல்படுகின்றனர்.
 
ஆனால்… அது செய்த பாவத்திற்கு அது அனுபவிக்கின்றது. நாம் ஏன் வேதனையுறல் வேண்டும்…? என்று சுயநலமிக்க ஆத்மாக்களினால் நற்செயலையே செய்துநல்லொழுக்கமே கொண்டு வாழ்ந்து வழி வந்தாலும் மற்ற ஜீவ அணுக்களையும் தனதாக ஏற்காமல் செயல்படுபவன் சுயநலமிக்கவன் ஆகின்றான்.
 
எல்லா உயிரணுக்களுமே ஒன்றுதான் என்ற எண்ணம் கொண்ட உயிர் ஆத்மாக்கள்தான் ஞான ஒளி ஆகின்றார்களே அன்றி சுயநலமிக்க ஆத்மாக்களினால் பக்தி நிலை பெறுவது கடினம்.
 
சிறு எறும்பு நம்மை வந்து கடிக்கின்றது. அக்கடி நிலை பொறுக்காமல் அதை நசுக்கி எறிகின்றோம். அவ் எறும்பின் ஜீவன் பிரிந்து விடுகின்றது. அதன் உருவம் நசுக்கப்படுகின்றது என்று எண்ணுகின்றோம்.
 
அதன் ஜீவன் எங்கு செல்கின்றது…?
 
1.அதை நசுக்குபவரின் எண்ணத்திலேயே அவ்எறும்பு சேமித்த எண்ணத்தையும் அமிலத்தையும் அதை நசுக்குபவனே ஏற்றிக் கொள்கின்றான்.
2.பல உயிர்களை உணவாக்கி உண்ணுகின்றோம்
3.அதனால் அவைகளுக்கு இம் மனிதர்களின் கையினால் பாவ விமோசனம் கிடைத்து
4.நம் உடலிலேயே அவற்றின் சக்தியையெல்லாம் ஏற்றிக் கொள்கின்றோம் என்பதனை அறியாமல்
5.நம் நாவின் சுவைக்காக நம்மை அறியாமல் நாம் பலி படுகின்றோம்.
 
எல்லா உயிரணுக்களுக்குமே எண்ணம் உண்டு. இவ்வெண்ணத்தில் சேமித்த அமிலத்தின் நன்மை தீமை கொண்ட குண நிலையும் உண்டு. ஓர் உயிர் ஜெந்துவை அழித்து உண்ணும் நாம் அஜ்ஜெந்துவின் நிலையையும் நம்முள் ஏற்றிக் கொள்கின்றோம் என்பதனை உணரல் வேண்டும்.
 
முந்தைய பாடங்களில் உணர்த்தியுள்ளேன் மனிதர்களில் இருந்து தான் மிருக ஜெந்துவும் பறவைகளும் ஊர்வனவும் வருகின்றன என்று. மிருகங்கள் மற்றப் பறவைகளிலிருந்து மனித இனம் வருவதில்லையா…? என்று எண்ணிடலாம்.
 
இம்மனிதர்களால் மற்ற ஜெந்துக்களைப் புசிக்கும் நிலையில் அதன் சப்த அலையும் உயிரணுவும் அதன் உடலைப் புசித்தவனின் உடலுக்குள் ஏறிக் கொள்கின்றது.
 
அறிவு வளர்ச்சி நிலை கொண்ட மனித ஆத்மாவில் ஏறிக்கொள்ளும் மிருக ஜெந்திற்கு
1.அம்மனிதக் கூட்டில் இருந்து அம்மனித ஆத்மா பிரிந்த பிறகு
2.மனிதனின் உடலில் ஏறிய இஜ்ஜீவனுக்கும் மனித உருவாய்ப் பிறந்திடும் பக்குவ நிலை பெற்றுப் பிறப்பிற்கு வருகின்றது.
3.அஜ்ஜெந்திற்கு இம் மனிதனால் விமோசனம் கிடைக்கின்றது.
4.இம் மனிதனுக்குத்தான் மற்ற ஜீவனை உண்ட நிலையினால் அதன் குண நிலையின் வழித்தொடர் பெறுகின்றான்.
 
இந்நிலையை உணர்ந்து நாம் எல்லா ஜீவ ஆத்மாக்களிடமும் உயிரணுக்களிடமும்
1.அவை வேறல்ல நாம் வேறல்ல என்ற நிலையில் நம்மையே அவையாக்கி அவையே நாமாகி
2.அன்பெனும் நிலைதனை கனிவாகப் படர விடல் வேண்டும்.
 
இன்று அவை கொசுவாகவும் குருவியாகவும் ஆடாகவும் இருந்திடலாம். அவையும் நம்மைப் போல் ஜீவன் கொண்டவை தான். எல்லா உயிரணுக்களையும் நமதாக எண்ணிக் கனிவு நிலையில் வழி நடந்திடுங்கள்…
 
இவ்வுலகிற்கும் எண்ணமுண்டு ஜீவ காந்த அமில சக்தியுண்டு. இவ்வுலகினில் வாழும் அனைத்திற்குமே மனிதன் முதல் எறும்பு வரை உள்ள அனைத்து ஜீவராசிகளுக்குமே எண்ணமும் உண்டு அதற்குகந்த காந்த அமில சக்தியும் உண்டு.
1.யாருக்கு யாரும் மூத்தவருமல்ல இளையவருமல்ல.
2.எல்லாம் அப்பரம்பொருளின் ஐக்கியம் கொண்ட ஆத்மாக்கள் தான்.

November 7, 2024

தீமைகளை எரிபொருளாக மாற்றி ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்

தீமைகளை எரிபொருளாக மாற்றி ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்


சந்தர்ப்பத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வு தான் இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது.
1.மனிதனான பின் தீமை என்று உணர்ந்த பின் அதை நீக்க
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் உருவாக்கினால்து வலுப்பெற
3.தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வராது “அதை எரிபொருளாக மாற்றியமைத்துவிடும்.
 
இன்று விறகை எரித்த பின் அது கருகி விடுகின்றது. எண்ணெய் ஊற்றி நெருப்பினை வைத்த பின் ஒளியைத் தருகின்றது, எண்ணெய் தீர்ந்தால் இதுவும் தீர்ந்து விடுகின்றது.
 
இதைப் போலத் தான்
1.ம் உடலில் உள்ள உணர்வுகளை எரிபொருளாக மாற்றி
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சக்தி பெறக்கூடிய தகுதி பெற்றது இந்த ஆறாவது அறிவு.
 
இப்படி ஒளியாக மாற்றும் தன்மை பெற்ற
1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை உங்களை நுகரச் செய்வதற்கும்
2.அதைக் கவரச் செய்வதற்கும் இந்த உண்மையின் உணர்வைப் பதிவாக்குகின்றேன்.
 
உங்களை ஒருவர் திட்டி விட்டார் என்றால் அதைப் பதிவாக்கி விட்டால் “என்னை இப்படித் திட்டினானே…” என்று எண்ணினால் அப்போது உங்களுக்குக் கோபம் வருகின்றது.
 
அந்த கோபமான நிலைகள் வரப்படும் பொழுதுபெண்கள் சமையல் செய்து கொண்டிருந்தால் மிளகாயை ஜாஸ்தி போட்டு அதைச் சாப்பிட விடாமல் செய்து விடுவார்கள்.
 
ஆண்கள் இதே மாதிரி திட்டியவனின் நினைவு வந்தால் அங்கே கணக்கு சீராக எழுத மாட்டார்கள். ஒரு இயந்திரத்தை இயக்கினாலும் அதைச் சீராக இயக்குவதற்கு மாறாக ந்த உணர்வின் தன்மை தவறு செய்யும் நிலைக்கு இயக்கி விடுவார்கள்.‌ இதைப் போல “பதிவான அந்த உணர்வுகள் அங்கே அதை இயக்கி விடுகின்றது.
 
நீங்கள் தியானத்தில் இருக்கும் பொழுது நமது குரு அருளை உங்களுக்குள் பதியச் செய்து
1.துருவ நட்சத்திரத்தின் இயக்கத்தின் சக்தியை அது துருவ நட்சத்திரமாக எப்படி ஆனது…? என்ற உண்மையினை உணர்ந்து
2.அதை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.
 
ஒரு கோபிப்போன் உணர்வை உற்று நோக்கினால் அது ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி விடுகின்றது. மீண்டும் அந்தக் கோபிப்போனை நினைக்கும் பொழுது அது நமக்குள் ரத்தக் கொதிப்பாக மாறுகின்றது… உடலிலே கடும் நோயாக மாறுகின்றது.
 
இதைப் போல இவை அனைத்தையும் நீக்கியவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆனது. அந்த உணர்வினை நுகர்ந்தால் தீமை என்ற நிலைகளை மாற்றி அமைக்கும் சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

“ஈஸ்வர நாமத்தை” ஜெபித்திட்டால் மட்டும் நம் ஜெபம் சக்தி பெறுவதில்லை

“ஈஸ்வர நாமத்தை” ஜெபித்திட்டால் மட்டும் நம் ஜெபம் சக்தி பெறுவதில்லை


இந்தப் போதனையின் வாயிலாக உலக மக்களுக்கு உணர்த்திடும் நிலையினால்
1.ஒவ்வோர் உயிராத்மாவும் விஷமாய்க் கலந்துள்ள காற்றின் சக்தியிலிருந்து உன்னத நிலை பெறல் வேண்டும்
2.நம் உயிர் ஆத்மாவிற்கு வேண்டிய அழியாச் சொத்தைச் சேமித்திடல் வேண்டும்.
 
நம் உயிராத்மாவை உன்னதப் பொக்கிஷமாக்கி அவ்வொளியுடனே ஒளியாய்க் கலந்திடல் வேண்டும். ஒவ்வோர் உயிர் ஆத்மாவும் இன்று வாழும் நிலையில் விஷத்தன்மை வாய்ந்த காற்று அலையில் சிக்குண்டு இப்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள இம்மனித உடல் வாழ்க்கையை, ஏக்கத்தினாலும், பேராசை வெறியினாலும், சலிப்பினாலும் ஆத்மா பிரிந்து சென்று, அவ்வெண்ண அலையுடனே, ஈன ஜெந்துவாய் அதன் ஈர்ப்பலையில் சிக்கி அதன் வட்டத்திற்குள் நம் உயிராத்மா சென்று வாழும் பிடியிலிருந்து மீண்டு செயல் கொள்ளல் வேண்டும் என்றால் நம் வாழ்க்கையைப் புனிதமாக்கி ஜெபம் கொண்டிடல் வேண்டும்.
 
1.ஈஸ்வர நாமத்தை ஜெபித்திட்டால் மட்டும் நம் ஜெபம் சக்தி பெறுவதில்லை
2.நம் வாழ்க்கையில் ஏற்படும் இன்னலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.
 
பக்தி என்ற நிலையில் நம் எண்ணத்தில் அப்பரந்தாமணையே எண்ணிப் பல நாள் பூஜித்து வணங்கி நாம் முக்தி எய்திட அப்பரந்தாமனிடம் நம்மைச் சேர்ப்பிக்கும் பக்தி ஜெபத்தில் ஈடுபட்டு வழி வந்திடும் நிலையில்
1.நம் வாழ்க்கையில் ஏற்படும் நம்மைச் சார்ந்தவரின் நிலையினாலும் மற்றவர்களின் நிலையினாலும்
2.நம் பூஜையில் குறுக்கிடும் நிலையோ அல்லது அவர்களினால் நம் ஜெபம் தடைபடுகின்றதே என்ற ஏக்கத்தினாலும்
3.நம் எண்ணத்தைச் செலுத்தினாலும் நம் ஜெபம் நமக்குக் கை கூடாது.
 
ஒவ்வோர் ஆத்மாவிற்கும் ஒவ்வொரு சக்தி நிலை உண்டு. அச்சக்தி நிலையை வெளிப்படுத்திடப் பக்குவ நிலை வேண்டும்.
 
உதாரணமாய் நம் இல்லத்தில் நாம் சமைக்கும் பதார்த்தத்தில் எப்பதார்த்தத்தை மையப்படுத்திச் சமைக்கின்றோமோ அதன் நிலையில் உப்போ புளிப்போ காரமோ எச்சுவை அதிகப்படுகின்றதோ அந்நாமம்தானே அப்பாதார்த்தம் பெறுகிறது. நீர் செய்த பதார்த்த நாமம் மாறி ஒரே உப்பு என்று நாமம் பெறுகிறது.
 
இப்பக்குவ நிலை மாறு கொண்டால் நம் உயிர் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் சொத்து நம் எண்ண நிலை மாறு கொண்ட ஏக்கத்தில் நம் உயிராத்மா பிரிந்து விஷமாய்க் கலந்துள்ள இக்காற்றினில் நம் ஆத்மா தத்தளிக்க நாமே நம் ஆத்ம சக்தியைச் சிதற விடுகின்றோம்.
 
நாம் செய்யாத ஒரு செயலுக்கு மற்றவரினால் கடும் சொல்லோ எதிர்ப்பு நிலையோ ஏற்படும் தருவாயில் நாம் சத்தியவானாய் உள்ளோம், நம்மை ஏன் வீண் இகழ்ச்சி செய்கின்றனர்…? ஆண்டவா அவனைப் பார்த்துக்கொள். அவனைச் சும்மா விடலாகாது.
 
நம் சத்தியத்தை அவன் மீறி நம்மை துவேஷகக்கிறான் என்ற எண்ண நிலையில் நம் எண்ணத்தைச் செலுத்தி அவ்வாண்டவனை வணங்கி, அவன் செய்த பாவத்திற்கு நாம் எண்ணும் நிலையிலேயே “நம்மையே நாம் தண்டனைப்படுத்திக் கொள்கின்றோம்…
 
இவ்வுணர்வின் நிலையினால் நம் உடல் நிலையும் பாதித்து அதன் வழித்தொடரில் பல இன்னல்களை நாம் அடைகின்றோம்.
 
நம்மை ஏமாற்றி வஞ்சனைப்படுத்தி வாழ்கின்றாரே அந்நிலையைப் பார்த்து நாம் எப்படிச் சும்மா இருத்தல் முடியும் என்று எண்ணத்தில் சலிப்பு தோன்றலாம்.
 
நம்மை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு ஏமாற்றுபவர்கள் எல்லாம்
1.நம்மை ஏமாற்றவில்லை.
2.அவர்களையே அவர்கள் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
 
ஒருவரின் மேல் குரோதத்தை வளர்ப்பவனும் பொறாமை கொண்டு ஏக்கப் பெருமூச்சு விடுபவனும்
1.நம்மைப் பார்த்து பொறாமை கொள்ளவில்லைஏக்கப் பெருமூச்சு விடவில்லை.
2.அவனையே தான் அவன் பொறாமைப் படுத்துகின்றான், ஏக்கப்படுத்திக் கொள்கின்றான்.
 
அத்தகைய நிலையை நாம் உணர்ந்து கொண்டு… நம் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி
1.ஓம் ஈஸ்வரா! எனக்கு நல்ல மனத்தைத் தா
2.அவனுக்கும் நல்லுணர்வு கொண்ட நற்சக்தியை வளரவிட்டு நல்லவனாய் ஆக்கிடுங்கள் என்ற ஜெபத்தைத்தான் நாம் பெற வேண்டும்.
 
அவர்கள் செய்யும் வினை அல்ல அது. அவர்களை ஆட்டி வைக்கும் துர் சக்திதான் அதுவேயன்றி ஆண்டவனின் அருளில் உதித்த அனைத்து உயிராத்மாவுமே ஒன்றுதானப்பா….”
 
இக்காற்றினில் தான் அனைத்துமே கலந்துள்ளன. தீயவனாய் எவனும் பிறந்திடவில்லை. அவரவர்களின் வாழும் சூழ்நிலையினால் ஏற்படும் இத்தீய சக்தியின் பிடியிலிருந்து மீள முடியவில்லை.
 
இன்று வந்த நிலையல்ல இது. பல காலமாய் இம்மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியில் குரோத வெறி உணர்வினால் அரசர்கள் ஆண்ட காலத்தில், பேராசையில் அவர்கள் நாடு பிடிக்கப் போர் என்ற நிலையில் பல ஆத்மாக்களை இக்குரோத எண்ணத்தில் போர்க்களத்தில் உயிர் நீத்த ஆத்மாக்களின் நிலையின் வழித் தொடரினால் வந்த வினைதானேயன்றி இன்று வாழும் நம் மனித ஆத்மாக்களினால் வந்த நிலையல்ல இந்நிலை…
 
இதிலிருந்து மீளுவதற்குத் தான்
1.நம் ஆத்மாவை எப்படிச் செயல்படுத்திடல் வேண்டும்…? என்பதனை உணர்ந்து
2.நம் எண்ணத்தைக் கொண்டு நம் உயிராத்துமா அடையப் போகும் நிலைதனை உணர்ந்து
3.சத்தியத்தின் சக்திவானாய் சக்தி பெற்றிடல் வேண்டும்.
 
தீயவர்கள் என்று ஒதுங்கி வாழ்ந்திடல் ஆகாது. நாம் எடுக்கும் நல்லுணர்வின் ஜெபத்தினால் நம் எண்ணத்தின் சுவாசத்தைப் பல மைல்களுக்கு அப்பால் இருந்திட்டாலும் அன்பான சுவாசத்தை அவர் எண்ணமுடன் நம் எண்ணம் கலக்கச் செய்துஅவரையே நம் எண்ணத்தினால் புனிதம் அடையச் செய்திடலாம்…
 
நம் எண்ண சக்திக்கு உகந்த நிலைதனை நாம் உணர்ந்திடல் வேண்டும்.
 
பல மகான்களும் சப்தரிஷிகளும் இவ்வெண்ண சக்தியில் உயர்வு பெற்று மகான்கள் ஆனார்களேயன்றி, கடும் ஜெபத்தினாலோ விரதத்தினாலோ யாக குண்டங்கள் வளர்த்து பூஜித்ததினாலோ அம்மகான் நிலை பெறவில்லை.
 
எண்ணத்தில் உயர்ந்த ஞான சக்தி பெற்றவன் தான் ஞானியாகவும் சித்தன் ஆகவும் ரிஷியாகவும் ஆனானே அன்றி பக்தியைக் கொண்டு ஆண்டவனை வணங்கி பூஜித்து நற்சக்தியைப் பெறவில்லை.
 
1.அவரவர்களுக்குள் உள்ள ஆத்மாண்டவனே இவ்வெண்ணத்தினால் பூஜித்து புனிதப்படுத்தி பக்குவநிலை பெற வேண்டுமே அன்றி
2.பஜனை பாடிக் கோவிந்தனை அழைத்து எவ்வாண்டவனின் ஜெபத்தையும் பெற முடிந்திடாது.
3.ஒவ்வோர் ஊர்களுக்கும் சென்று மக்களுக்கெல்லாம் நல்லுணர்வு பெற அக்கோவிந்த ஜெபம் பாடினால் மட்டும் நல்லுணர்வு பெற முடிந்திடாது.
4.எண்ணத்தைத் தூய்மை கொண்டு வணங்கிடுபவன் தானே ஆண்டவன் ஆகலாமேயன்றி
5.அவ்வாண்டவனின் சக்தியைப் பெற எப் பூஜையும் பஜனையும் வழி நடந்திடாது.

November 5, 2024

பேரருள் பேரொளி

பேரருள் பேரொளி


மனித வாழ்க்கையில் வெறுப்பு வேதனை என்று வரப்படும் பொழுது மனிதனையே சீர்குலையச் செய்யும் உணர்வுகளாக அது வளர்ந்து விடுகின்றது இதிலிருந்து நம்மைப் பாதுகாத்தல் வேண்டும்.
 
ஆனால் அதிகமாக வளர்த்து விட்டால் உடலைப் விட்டு பிரிந்து சென்ற பின் இன்னொரு உடலுக்குள் சென்றாலும் அங்கேயும் இந்த விஷத்தை உருவாக்கி அந்த உடலை விட்டுச் சென்ற பின் மனிதனல்லாத உடலைத் தான் உயிர் உருவாக்கி விடும் தப்பவே முடியாது.
1,இந்த உடலில் வேதனைகளை வளர்த்து விட்டோம் என்றால்
2.இந்த உடலுக்குப் பின் மீண்டும் நரக வேதனைப்படும் உடலைத்தான் நாம் பார்க்க முடியும்.
 
உயிரான ஈசன் எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக உருவாக்கி இருக்கின்றான். அத்தகைய நிலையில் பிறவியில்லா நிலையைத்தான் நாம் அடைதல் வேண்டும்.
 
1.ஆனால் மனிதன் தீயிலே குதித்தால் உயிர் வேகுகின்றதா…? இல்லை.
2.இதே மாதிரி இந்தப் பிரபஞ்சத்தில் எந்த விஷத்தின் தன்மையோ அது நம்மை ஆட்சி புரியாதபடி தடுத்தல் வேண்டும்.
 
விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பம் ஆகின்றது. ஆனால் வெப்பம் அதிகமான பின் விஷத்தைப் பிரித்து விடுகிறது.
 
புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் விஷத்தைத் தான் ஆதாரமாக வைத்து உடலை வளர்த்து வந்தது. பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சித் தன் உடலை வளர்க்கின்றது. மாட்டு இனங்களோ விஷத்தின் வலிமை கொண்டு தான் இயக்கத்தின் சக்தியாகி அதைக் கொண்டு தான் தன் உணவைக் கரைக்கின்றது.
 
இப்படி மனிதனாக வளர்ந்த நிலையில் பல விஷத்தன்மைகளை மாற்றி மாற்றி மாற்றி மாற்றி இந்த உடல் பெற்ற பின் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை உடல் மலமாக மாற்றிவிடுகிறது.
1.நஞ்சினை நீக்கிடும் அருள் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் தோற்றுவிக்கின்றது
2.இந்த எண்ணத்தை நாம் சீராக்கவில்லை என்றால் மீண்டும் விஷத் தன்மைகள் கூடிவிடும்.
3.கூடிவிட்டால் எத்தகைய விஷத்தின் தன்மை கூடுகின்றதோ அதற்குத் தக்க மனிதனல்லாத உடலை உருவாக்கி விடும்.
 
மீண்டும் பிறவிக் கடனுக்கே வருகின்றோம்
 
இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும் என்பதற்குத்தான் பரமபதத்தை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.
 
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் அருள் சக்தியைக் கூட்ட முடியும். வைகுண்ட ஏகாதசி என்று நம்மை நாம் எப்படிப் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்…? என்று காட்டுகின்றார்கள்.
 
1.உலகில் உள்ள அனைவருக்கும் பேரொளி கிடைக்க வேண்டும் பேரருள் கிடைக்க வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்
3.உலகில் உள்ள அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும்
4.என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும்
5.நான் பார்க்கும் குடும்பம் அனைத்திலும் அந்த அருள் சக்தி படர வேண்டும்
6.எல்லோரும் பேரொளி ஆக வேண்டும் என்று உணர்வினை எடுத்தால் பகைமைகளை நாம் மாற்றியமைக்கின்றோம்.
 
இவைகள் எல்லாம் நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது ஆகவே இந்த உடலுக்குப் பின் முழுமையடைதல் வேண்டும்.
 
மரத்தில் பூ பூத்துக் காய் காய்த்துக் கனியாகின்றது. கனியாகி விட்டால் மூடி மறைத்து (விதையை) விடுகின்றது. திறந்து விட்டால் வித்து தன் இனத்தை உருவாக்குகின்றது.
 
ஆக எப்படிக் கனியாகின்றதோ இதைப் போன்று
1.நமது உயிரின் தன்மையை இந்த உடலுக்குப் பின் வாழ்க்கையில் வந்த இருள் சூழும் தீமையான உணர்வுகளை மாற்றி விட்டு
2.”பேரொளி என்ற உணர்வாகும் பௌர்ணமி போன்று
3.தீமைகளை நீக்கி உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பேரொளி என்ற நிலை உருவாகி
4.பேரருள் என்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் நமது சாஸ்திரங்கள் காட்டியுள்ளது.
 
அந்த நிலையை ஒவ்வொருவரும் நாம் பெறுதல் வேண்டும்

நம் சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கின்றோம்…? என்று பார்க்கத்தான் “படைத்தவன் நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளான்”

நம் சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கின்றோம்…? என்று பார்க்கத்தான் “படைத்தவன் நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளான்”


சூரியனிலிருந்து கிடைக்கப்பெறும் காந்த அமில சக்தியினால் மட்டும் நம் உலகிற்கு ஒளி பாய்வதில்லை. நம் உலகமும் அதன் ர்ப்பின் நிலைதனைப் பெறுதல் வேண்டும்.
 
அக்காந்த அலைகளை நம் பூமி ஈர்த்து அதன் வட்டத்திற்குள் சுழல விட்டு அச்சுழற்சியில் இருந்து சூரியனின் ஒளி அமிலத்தை மென்மேலும் ஈர்த்துச் செயல் கொள்ளாவிட்டால் நம் உலகிற்குச் சக்தி ஏது…?
 
சூரியனின் படைப்பில் சக்தியை அளித்தாலும் நம் பூமி ஈர்த்துச் செயல் கொள்ளாவிடில் நம் பூமிக்கு ஜீவன் இல்லை. அதைப்போல் ஒவ்வொரு உயிராத்மாவும் ஆண்டவன் படைப்பில் அதனதன் சுழற்சியில் ஏற்படுத்திக் கொண்ட அமில சக்தியின் வட்டத்தின் வளர்ச்சியில் வாழ்க்கை நிலை அமைகின்றது.
 
பல பிறப்புகளை ஏற்கும் நம் உயிராத்மா
1.ஒவ்வொரு பிறப்பிலும் சேமிக்கும் அமில சக்தியில் நற் சக்தியும் தீய சக்தியும் கலந்தே வழி வருகின்றோம்.
2.ஒவ்வொரு பிறப்பிலும் இந்நிலையின் ஒரு பிறப்பில் சேமித்த நற்பயனும் தீய பயனும் மற்றொரு பிறப்பில் ஏற்றத்தாழ்வு கொள்கின்றது.
 
இதன் நிலையில் தொடர்பு கொண்டு நாம் செய்திடும் நிலையல்ல இது.
 
நாம் வளர்ந்த எண்ண நிலை நம்முள் கலந்துள்ள தொடர்நிலை என்ற வழியிலேயே வழி பெற்றால் நாமெல்லாம் இன்று மனித ஆத்மாக்களாய் வாழ்ந்திடும் இப்பொக்கிஷமான வாழ்க்கைதனை ஈன நிலைக்கு நாமே அடகு வைக்கின்றோம்.
1.அடகு என்றவுடன் திரும்பவும் பெறும் நிலைக்கல்லவா செப்புகின்றார் என்று உணருவீர்…?
2.ஆம்…! இன்று இக்கலியில் நம் உயிராத்மா கொண்ட இப்பொக்கிஷ வாழ்க்கையை அடகு வைத்துவிட்டால்
3.நாம் அதனைப் பெறும் காலம் பல நூறு கோடி ஆண்டுகள் ஆகலாம்.
 
பல காலமாய்ச் சேமித்து உயிர் ஆத்மாவாய் மனித உடல் கொண்ட எண்ண வளர்ச்சியில் அறிவுப் பொக்கிஷ வாழ்க்கைதனைப் பெற்ற நம் ஆத்மாவின் நிலைதனை உணர்ந்து வாழ்க்கைதனில் ஏற்படும் சஞ்சலங்களுக்கு அடிபடாமல் நம்முடன் (நம் எண்ணமுடன்) மோதிடும் பல நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் சமநிலைப்படுத்தும் பக்குவ நிலை பெறல் வேண்டும்.
 
இம்மனித ஆத்மாக்களினால் மட்டும்தான் ஜீவசக்தியை ஒளி பெறும் சக்தி ஆக்கிடல் முடிந்திடும். மனித ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று அஜ் ஜோதியுடன் ஐக்கியமாகிஅஜ் ஜோதியின் வட்டத்தை வளரவிட்டே மண்டலமாய் ஜீவன் கொண்டு வளர்ச்சி பெற்று வளர்ச்சியின் உயிரணு தோன்றி அதன் வளர்ச்சியிலேயே அமில நிலை பல பெற்று மண்டலமாய் உருளும் சக்தியும், உயிராத்மாவாய் வாழும் நிலையும் அதன் தொடர்நிலை அனைத்துமே இம் மனித ஆத்மாக்களுக்குத் தான் உண்டு…
 
மண்டலமாய் சுழல்வதும் இவ்வாத்மாக்களேகொசுவாய் கழிவின் சுவாசத்தை ஈர்த்து வாழ்வதும் இம்மனித உயிராத்மாவே…! இவ்வெண்ண சக்தியில் நிலைகொண்டு அமைவதுவே அனைத்துமே.
 
1.நாம் பிறப்பெடுத்து வாழ்வதெல்லாம் நம்மை அவன் அனுப்பி வைத்து
2.நம் சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கின்றோம்…? என்று பார்க்கத்தான்…! என்ற எண்ணமும் வேண்டும்.
 
அன்றைய நாளில் மனித ஆத்மாக்களைப் பக்தியின் நிலையில் தான் உயர்வு படுத்திட முடியும் என்ற தத்துவத்தை உணர்த்தி ஆலயத்தை அமைத்தார்களே அன்றி ஆலயத்திற்குச் சென்றால் தான் அவன் அருள் கிட்டும் என்ற நிலையல்ல.
 
எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரவர்களுக்குகந்த அமில சக்தியையே ஒளி சக்தியாக்கி வழி பெறல் வேண்டும்.
 
1.ஆசையும் அன்பும் அளவுடனே இருந்திடட்டும்.
2.அதி ஆசைக்கும் அதி அன்பிற்கும் வழிப்பட்டால்தான் பேராசைக்குப் பிடிபடும் நிலையில் சலிப்பும் சஞ்சலமும் வெறுப்பும் கொண்டே
3.இதன் வழித் தொடரினால் ஏற்படும் கோபங்களும் அதிலிருந்து ஏற்படும் வைராக்கியத்தின் உறுதியும்
4.எச் சிரமப்பட்டாலும் அடைந்தே தீருவேன் என்ற வெறியின் உந்தலினால் நம்மையே நாம் சிதறவிட்டு வாழ்கின்றோம்.
 
அன்பும் ஆசையும் இல்லாவிட்டால் உலகமே இல்லை. நற்சக்தியின் பொக்கிஷ சக்தியே இவைதான். இவற்றிற்கே அடிமைப்பட்டுப் பேராசை நிலையில் செல்லும் எவையுமே அவ்வன்பிற்கும் ஆசைக்கும் எதிர்சக்திதான்.

November 1, 2024

நம்மைப் பலவீனப்படுத்தும் உணர்வுகளைத் “துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு அடக்க வேண்டும்”

நம்மைப் பலவீனப்படுத்தும் உணர்வுகளைத் “துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு அடக்க வேண்டும்”

 

நாம் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி அகண்ட அண்டம் அனைத்தையும் அறிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற்ற மனித உடல் பெற்ற பின்… “இந்த உடலின் பற்று கொண்டு நாம் சந்தர்ப்பத்தில் என்ன செய்கின்றோம்…?”

ஒருவர் தன்னை மதிக்கவில்லை என்று வந்து விட்டால் அவர் வீட்டுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்…? என்ற எண்ணம் வருகிறது.

நாம் வீட்டுக்குச் செல்வோம்… அவர் வேறு ஒரு கவனத்தில் இருப்பார். காரியத்தை முடித்துவிட்டு அவர் திரும்பிப் பார்க்கும் பொழுது சங்கடமாக இருந்திருக்கும்.

சங்கடத்தில் திரும்பிப் பார்த்த பொழுது அங்கே வந்த நம்மை “வாருங்கள்” என்று கூப்பிடாமல் விட்டுவிட்டால் போதும்.

நான் வீடு தேடி வந்திருக்கின்றேன்… என்னை அவன் கொஞ்சமாக மதித்தானா…? என்ற வெறுப்பு உணர்வுகளைஸ் சுவாசிக்க நேர்கின்றது. தன்னை மதிக்கவில்லை என்று எண்ணும் பொழுது அந்த வேதனை வந்து விடுகின்றது.

எந்த மனிதன்… சந்தர்ப்பத்தால் இதை அறிய முடியவில்லை வாருங்கள் என்று அழைக்க முடியவில்லையோ
1.அவன் மீது இருக்கக்கூடிய நல்ல குணத்தையும் நல்ல பண்புகளையும் அறிய முடியாதபடி
2.நமக்குள்ளே நாம் அதை மறைத்து விடுகின்றது.
3.நண்பனாகப் பழகிய அந்த நண்பனின் நிலையும் அவருடன் அன்புடன் பழகிய உணர்வுகளும்
4.நம்மை அறியாமலே சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது… நல்ல மனமும் குறைந்து கொண்டே வருகின்றது

இப்படி நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களில் கடந்து தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் விடுபட வேண்டும் என்ற உணர்வை எடுத்து எடுத்து… அகண்ட அண்டத்தையும் அறிந்து கொண்டு செயல்படும் திறன் பெற்ற இந்த மனித உடலிற்குள் இருக்கும் “ஆறாவது அறிவை” அதனின் ஆற்றலை நாளுக்கு நாள் தேய்பிறையாக மாற்றி மனித உடலை இழக்கும் சந்தர்ப்பத்தைத் தான் அதிகமாக நமக்குள் சேர்க்கின்றோம்.

ஆகவே எத்தகைய சிரமங்கள் வந்தாலும்
1.அதைப் போன்ற சந்தர்ப்பங்களிலிருந்து விடுபட
2.மன உறுதி கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
3.இந்த உணர்வினை உடலுக்குள் அதிகமாகச் சேர்த்தால்
4.நம்மைப் பல வகைகளிலும் பலவீனப்படுத்தும் அந்த உணர்வுகளை… அந்த விஷத்தை
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அடக்கி விடுகின்றது.

இதை நாம் செய்து பழகுதல் வேண்டும்.

வாழ்க்கைக்கு “இசையமுதம் பெரும் சொத்தப்பா”

வாழ்க்கைக்கு “இசையமுதம் பெரும் சொத்தப்பா”

 

இன்று நம்மில் பல மகான்கள் தோன்றி வாழ்ந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் அவர் அவர்களின் அறிவு சக்தியை உலகிற்காக உணர்த்தினார்கள். பல துறைகளில் மாமேதைகள் வழி பெற்று வந்தார்கள்… இன்றும் வருகின்றார்கள்.

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா என்ற விழாவினை அவரின் ஞாபகமாக இன்று நடத்துகின்றனர். அவரின் நிலை என்ன..?

1.இசைக்காகவே பிறந்தார்… இசையுடனே கலந்தார்.
2.அவர் உடலில் செயல் கொண்டவர் அவரின் இசை பக்தியில் அவரையே இசையாக்கி இன்புறும் பக்குவப்படுத்தி
3.அவ்விசையுடனே அவரின் ஆத்மாவைச் செயல்பட வைத்தார் “அவர் உடலில் செயல்படுத்திய ஒரு சப்தரிஷி”

அத் தியாகராஜரின் உயிரான்மாவே இசையுடன் கலந்து அவ்விசைஞானம் பொழிந்திடும் இசை உள்ளங்களில் தன் இசை ஒளியைக் காண்கின்றார்.

பல மகான்கள் இசையைப் பக்தியாக்கி அப்பக்தியையே ஆண்டவனுக்கு அர்ப்பணித்து அந்த இசையுடனே ஒன்றிவிடுகின்றார்கள். இசைஞானம் பெற்று உள்ளத்தையே அமுதிசைப்படுத்தி ஆண்டவனை வணங்குவதாக எண்ணி வணங்குகிறார்கள்.

இசைஞானம் பெற்று இசையுடன் ஒன்றிய ஆத்மாக்களின் நிலையில் எல்லாம் அவர்கள் இசைக்கும் இசையே
1.அவர்களின் உயிர் ஆத்மாவையே இசை அமுதின் அமில சக்தியை அவ்ஆத்மாவுடன் ஒன்றச் செய்து
2.அவ்வுயிராத்மாவிற்குப் பேரானந்த நிலையை ஏற்படுத்திக் கொள்கின்றார்.
3.இசைக்கும் இசை எல்லாம் ஈசனின் இசையாக்கித் தன் உயிராத்மாவையே ஈசனாக்கி
4.இன்பமுடன் அவ்வாத்மாவிற்கு நற்சக்தி கிடைக்கப் பெறுகின்றது.

வாழ்க்கைக்கு இவ்விசையமுதம் பெரும் சொத்தப்பா.

இசைக்கும் இசையிலேயே ஒவ்வொரு உடலிலும் உள்ள உயிரணுக்கள் அனைத்தையும் அவ்விசைக்கு அடிமைப்படுகின்றது. நம் உலகமே ஓம் என்ற இசையில் தான் உருளுகின்றது. இசைக்கு மயங்காத எவ்வுயிரணுவும் இல்லை.

வாழ்க்கையையே அமுதிசையாக்கி அப்பக்திச் சுரங்களைப் பாடி நற்பயனைப் பெறத்தான் காலம் காலமாக இவ்வுலகமே இசையின் வழியில் வருகின்றது. பக்தி மனம் பெற அவ் இசையமுதம் நம் உயிராத்மாவுக்கு மிகவும் அவசியமாகின்றது.

இந்நிலை உணர்ந்த பல மகான்கள் இசையுடனே கலந்து இன்றளவும் தன் செயல் கொள்கின்றார்கள்.

1.ஒவ்வொரு ஆத்மாவும் தன் எண்ணத்தில் ஏற்படுத்தி வழிநடத்தும் செயல் நிலைக்கு உகந்த ஞான சக்தியை அந்நிலையை வளரவிட்டால்
2.அவ்வளர்ச்சிக்குகந்த சக்தி நிலை கொண்டவரின் உதவியுடன் நம் சக்தியை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதற்குகந்த அமில சக்தியின் கூட்டு நிலை உயிர் பிறப்பிலேயே வழி பெற்று வருகின்றது. ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவரின் சாதனை செயல் கொள்கின்றது.

இதற்கெல்லாம் உயிரணுவிலேயே சேமித்த அமில சக்தியின் தொடர் நிலைப்படி தான் வளர்நிலை கொள்ள முடியும்.

ஒவ்வொருவரும் அவரவர்களின் நிலையில் தான் செயல் கொண்டு வருகின்றனர். ஆனால் இவ்வமில சக்தியையே உயிர் பிறப்பில் வளர்ச்சி கொண்டு இன்றளவும் ஒவ்வொரு ஆத்மாவும் வழிவந்த நிலையிலேயே ‘நம் ஜெப சக்தியினால் ஜெயம் கொண்டிட முடியும்…”