ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 24, 2022

உட்கார்ந்து தியானமிருப்பது என்பது “ஒரு பயிற்சி... பழக்கத்திற்குத் தான்…!”

பள்ளிக்குச் சென்று படித்து முடிக்கின்றோம். பிறகு சிக்கல்கள் வரும்பொழுது “மீண்டும்” பள்ளிக்குச் சென்று யாரும் படிப்பதில்லை.

படித்து விட்டு வந்துவிட்டோம். படித்து முடித்து வந்தபின் தப்பாகி விட்டால் “ஓடிப் போய்ப் பள்ளியில் உட்கார்ந்து” மீண்டும் படிப்பதில்லை.

பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்த பாடநிலையைப் பார்த்து அதன்படி செய்த நிலைகளில்... “இதில் என்ன குறை இருக்கின்றது...” என்று “திரும்பிப் பார்க்க வேண்டும்…” ஆகவே
1.தியானம் இருந்து பழகியபின்
2.பழையபடி ஓடி வந்து தியானமிருப்பதில்லை.

இங்கே பாட நிலையை உங்களுக்குள் உறுதிப்படுத்தியபின் அருள் உணர்வுகளின் “பதிவு... RECORD” உங்களுக்குள் இருக்கின்றது.

1.வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சிக்கலாகின்றதோ அந்த இடத்திலேயே… அப்போதே… இதனுடய சிந்தனை என்ன…?
2.சாமி என்ன உபதேசம் செய்தார்…?
3.“சாமி உபதேசம் செய்ததற்கும்... நமக்குள் இப்போது வருவதற்கும்,,. என்ன வித்தியாசம் இருக்கின்றது…?”
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
5.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால்...
6.உங்களுக்கு அப்பொழுதே “விடை” தெரியும்.
7.அந்த விடையை வைத்து மாற்றிக் கொள்ளும் சக்தி உங்களுக்கு வர வேண்டும்.

ஆனால் இப்பொழுது என்ன செய்கிறோம்…?

சாமியை நம்புகிறோம்... சாமியாரை நம்ப முடிகின்றது.. மந்திரக்காரரை எல்லாம் நம்ப முடிகின்றது. நாம் இப்படித்தான் தேடிப் போகின்றோம்.

நமக்குள் இந்தச் சக்தியை வளர்த்து இந்த வாழ்க்கையில் வந்த துன்பங்களை நீக்கி அந்தப் பேரருள் என்ற உணர்வை வளர்த்து இனிப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் என்ற அந்த நிலைக்கு வருதல் வேண்டும்.

அப்பொழுது இந்த வாழ்க்கையில் தீமை புகாது “தீமைகளை அடக்கிடும் வல்லமை” வருகின்றது.

ஆனால் இதை விட்டு விட்டு என்ன சொல்வார்கள்…?

தீமை வரப்படும் பொழுது...
1.எனக்குக் கஷ்டமாக இருக்கின்றதே...
2.இந்த வேலை செய்தால் அப்படி நடக்கின்றது... தொழில் செய்தால் நஷ்டமாகின்றது...
3.இந்த வண்டியை ஓட்டினால் கஷ்டமாக இருக்கின்றது...
4.”எதைச் செய்தாலும்…” எனக்கு ஒரே தொல்லையாக இருக்கின்றது என்பார்கள்.

இப்படிக் கஷ்டங்கள் ஆனபின் அப்புறம் அந்த உணர்வு கொண்டு பிள்ளைகளை எண்ணினால் அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகள் பதிவாகி விடுகின்றது. அவர்கள் தொழில் செய்தாலும் நஷ்டமாகின்றது.

இப்படியே...
1.என் குடும்பத்தில் தொடர்ந்து எல்லாமே நஷ்டமாகின்றது
2.என் குடும்பத்திற்கு “யாரோ... ஏதோ... என்னமோ... செய்து கொண்டிருக்கின்றார்கள்...”
3..யாரோ செய்துவிட்டார்கள்…! என்ற இந்த உணர்வு தான் வரும்.

அதற்குத் தகுந்த மாதிரி ஜோதிடம் பார்ப்பவர்களிடம் செல்வார்கள். அவன் என்ன செய்வான் தெரியுமா..,?

நாம் இந்த எண்ணத்துடன் செல்கிறோம் அல்லவா.., இதை மீண்டும் உறுதிப்படுத்திவிடுவான் (RE - RECORD). உங்களுக்குத் “தோஷத்தைச் செய்துள்ளார்கள்...” என்பான்.

சகஜ வாழ்க்கையில் ஏதாவது சிறு குறைகள் இருந்தால் அந்தக் குறையின் தன்மை வரும் பொழுது என்ன செய்வோம்…? “இன்னார் தான்... செய்திருப்பார்கள்” என்று உறுதிப்படுத்துவோம்.

அதே மாதிரி நாம் எண்ணும்பொழுது இந்த உணர்வு கலந்து அலைகளாகப் பாய்ச்சப்படும் பொழுது.., நீங்கள் அங்கே போனவுடன் (ஜோதிடம் பார்ப்பவன்) இன்னொரு ஆவியின் உணர்வு கொண்டு… அல்லது உணர்வின் வலிமை பெற்று... இதை அறியும் உணர்வு மோதப் பெற்றவுடன் அவன் என்ன சொல்வான்..?

1.உங்களுக்குப் பக்கத்தில் தான் இருக்கின்றார்கள்
2.ரொம்பவும் தெரிந்தவர்கள்தான்… என்று இலேசாக ஒரு வார்த்தையை விட்டுப் பார்ப்பான்
3.இவராக இருக்குமோ என்று நம்மிடம் இருந்து சொல்கள் வந்தவுடன்
4.”அவர்களே தான்” என்பான்...
5.கடைசியில் இவர்கள் தான் செய்தார்கள் என்று பகைமையை உண்டாக்கிவிடுவான்.

உங்களுடைய சந்தர்ப்பம்... சந்தேகமாக இருந்தாலும்... பின் “அவர்கள் தான் செய்திருப்பார்கள்…” என்று உறுதியாகிவிடும்.

இந்த மாதிரிச் செய்து விட்டார்கள் என்ற உணர்வு ஆனபின் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம்... “ஜிர்... ஜிர்...” என்று பகைமை உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

“பாவிப்பயல்...” ஒன்றும் தெரியாமல் இருந்து கொண்டு “எந்த வேலையைச் செய்திருக்கின்றான் பார்...” என்ற எண்ணங்கள் வரும்.

ஆனால் அவர்கள் நம்மைப் பார்க்கும் பொழுது “ஏன்… இப்படி முறைத்து முறைத்துப் பார்க்கின்றார்கள்...?” என்று அந்த உணர்வை அவர்கள் எடுத்துக் கொண்ட பின் அதற்குத் தக்க மாதிரி பதிலுக்கு அவர்களுக்குள்ளும் கலக்கமாகும்.

பின் ஒருவருக்கொருவர் என்ன ஆகும்…? அங்கேயும் வித்தியாசமாகி அவர்களும் முறைத்துக் கொள்வார்கள்.

அப்பொழுது என்ன முடிவுக்கு வருவார்கள்…?

1.“பார்த்தாயா.., ஜோதிடக்காரன் சொன்னது... “கரெக்ட்...”
2.அடுத்து வீட்டிற்குள் வம்பு வந்தது…! என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி... நாம் “பிறருடைய உணர்வுகளைத்தான்” வளர்த்துக் கொள்கின்றோமே தவிர நல்லதை எடுப்பதற்கு முடிகின்றதா...?

நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் உணர்வை வளர்த்துக் கொண்டால் இருள் சூழும் நிலைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளும் சக்தி “உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்…!”

இவ்வளவு பெரிய உடலை வளர்த்து வந்ததும்… உங்களுடைய வாழ்க்கைக்கு வழி காட்டி வந்ததும்… நீங்கள் நுகர்ந்த உணர்வு தான்... உங்கள் உயிர் தான் இதையெல்லாம் உருவாக்கியது.

எதெனெதன் நிலைகளில் எண்ணுகின்றோமோ அதன் வழியில் தான் உயிர் இயக்கிக் காட்டுகின்றது.

1.நாம் உயர்ந்த உணர்வை எடுத்தால்... அது கருவாகி
2.அதை வளர்த்து விட்டால்… “உயர்ந்த ஞானத்தையும் தீமைகள் புகாத நிலையும்”
3.உங்களுக்குள் வளர்க்க இது உதவும்.

அதற்குத் தான் எம்முடைய உபதேசமே... (ஞானகுரு).