ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 16, 2022

உடல் அழுகினாலும்... பிறவியில்லா நிலை அடைவது தான் நமது குறிக்கோளாக இருத்தல் வேண்டும்

நாம் எப்படித் தான் இந்தத் தியானத்தில் வலிமை பெற்றாலும் நம் உடலிலுள்ள தீமையின் நிலைகள் அது அழுகும். அது அழுகிய பின் தான் இந்த உயிரே வெளியே செல்லும்.

ஒரு பழம் கனிந்தது என்றால் உட்கொண்டால் சுவையாக இருக்கின்றது. சுவையின் தன்மையாக இருந்தாலும் கடைசியில் அது தன்னிச்சையாக அழுகத் தான் செய்யும்.
1.அழுகிய மணங்கள் காற்றிலே கலக்கப்படுகிறது
2.ஆனால் அதில் உள்ள வித்தின் சத்து அந்த உணர்வின் தன்மை தனக்குள் தெளிவாக்குகின்றது
3.கனிந்து அழுகி வெளியே செல்லவில்லை என்றால் “வித்து முழுமை பெறாது...”

அழுகிய உணர்வு காற்றிலே படர்கின்றது. அதன் உணர்வின் சத்தைச் சூரியன் கவர்ந்து கொள்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் அந்த வித்தை மீண்டும் நிலத்தில் ஊன்றப்படும் பொழுது அதே சத்தின் தன்மையைக் கவர்ந்து அதே கனியைப் போன்று உணர்வின் தன்மை உரத்தின் சத்தாக “மரங்களை விளையச் செய்கின்றது...”

இதைப் போன்று தான் நம் உயிரான உணர்வின் நிலைகள் கொண்டு இருளை நீக்கிடும் உணர்வின் சத்தை விளைய வைக்கப்படும் பொழுது மனிதனாக நாம் விளைகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வினைச் சேர்த்து ஒளியாக மாற்றி இந்த உடல் என்று அழுக்கை நீக்கி அழுக்கை நீக்கிடும் உணர்வின் தன்மை பெற்று என்றும் ஏகாந்த நிலை என்ற நிலையினை அடைய முடியும்.

இதுவே நம் குருநாதர் காட்டிய நிலைகள்.

கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் அது நம்முடன் வருவதில்லை. இந்த உடலும்... உடலின் அழகும் நம்முடன் வருவதில்லை. வாழ்ந்தோம்... மகிழ்ந்தோம்... வளர்ந்தோம்... என்று இருப்பினும் இந்த உடலில் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப இந்த உடல் அழுகத் தான் செய்கின்றது.

இந்தப் பிடிப்பின் தன்மை உடல் அழுகிய நிலைகள் ஆன பின்... அணுக்களின் இயக்கம் இல்லையென்றால் இந்த உயிர் வெளியே செல்கின்றது.

எதன் வழியில் இந்த இயக்கத்தைச் சேர்த்து இந்த உடல் அழுகுகின்றதோ அதற்குத்தக்க... கடைசி நிமிடத்தில் இந்த உயிர் வெளியே செல்லும் பொழுது அதன் வழி வெளியே செல்கின்றது உயிர்

1.ஆனால் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி அதனை வலுவாக்கப்படும் பொழுது
2.இந்த வலுத்தன்மை கொண்டு உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இது ஈர்க்கப்படுகின்றது.
4.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைக்கப்படுகின்றது... ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் பிறவி இல்லா நிலை அடையத் தான் இதைச் செயல்படுத்துகின்றோம்.