ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 26, 2022

நாம் உயிருடன் ஒன்ற வேண்டும்.. உடலுடன் அல்ல...! என்று தான் இராமாயணம் காட்டுகிறது

கர்ப்பமாக இருக்கும் சீதாவை இராமன் காட்டிலே விட்டு விட்டுச் சென்று விடுகின்றான். அங்கே கர்ப்பிணியாகத் தவித்துக் கொண்டிருக்கும் சீதாவின் நிலையை உற்றுப் பார்த்து அருகிலே வான்மீகி இருக்கும் ஆசிரமத்திற்குச் அழைத்துச் செல்கின்றனர்.

வான்மீகி சீதாவின் உண்மை நிலையை உணர்ந்து கொள்கின்றார்.

சீதா என்ற மகிழ்ச்சி என்ற உணர்வின் தன்மை...
1.இராமனின் செயலும் - அந்த எண்ணத்திற்குத் தக்க இந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கிறது...? என்றும்
2.அரசாங்க நிலைகள் எப்படி ஆகின்றது...? என்றும்
3.மக்கள் எப்படி வாழுகின்றனர்...? என்றும் இந்தக் காவியத்தின் உண்மை நிலைகளைச் சொல்கின்றார்.

வான்மீகி சீதாவிற்கு ஓதிய வான இயலின் உணர்வுகள்... சீதா நுகர்ந்த அந்த மெய் உணர்வுகள்... இரத்தத்தில் கலந்து கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைக்கின்றது.

பத்து மாதம் ஆகிப் பிறந்த பின் வளர்ச்சியாகி லவ குசா என்ற நிலையில் இராம காவியத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.

தன் தாயின் செயலை...
1.சீதா மாசு பட்டதல்ல... மாசற்ற நிலை கொண்டது
2.எதனிலும் கலக்கவில்லை... உண்மையின் உணர்வுகளையே பெற்றது என்ற நிலையில்
3.இராமனின் நிலைகள் எதனெதன் உணர்ச்சியின் தன்மையோ அதனதன் உணர்வுகள் தான் செயல்படுகிறது என்று பாடலாகப் பாடுகின்றார்கள்.

இது எல்லாம் மனிதர்கள் புரிந்து கொள்வதற்குத் தான்.

ஆனால் வெறும் கதையாகத் தான் படித்துத் தெரிந்து கொள்கின்றோமே தவிர உண்மையின் உணர்வை நாம் அறிந்து கொள்ளும் நிலையே அற்றுப் போய்விட்டது.

காரணம்... “நமது உணர்வுக்கொப்ப” உற்றுப் பார்க்கப்படும் போது அதே உணர்வு வருகின்றது. அந்த உணர்வைத் தான் நாம் வளர்த்துக் கொள்கின்றோமே தவிர
1.ஞானத்தின் உணர்வைப் பெறும் தகுதி இல்லாது
2.காவியத் தொகுப்புகளை அவரவர்கள் இஷ்டத்திற்குச் செயல்படுத்தி விட்டார்கள்.

ஆனால் குருநாதர் இதை எல்லாம் எமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

வான்மீகி உணர்த்திய அந்த வழிப்படி லவ குசா இராமனைப் பற்றிப் பாடுகின்றனர். பாடலைக் கேட்கும் பொழுது இராமன் தன் மனைவி சீதா மாசு பட்டவள் அல்ல என்ற உண்மையை உணர்கின்றான்.

சீதா எவ்வளவு தொல்லை பட்டிருக்கும் என்ற உண்மையை உணர்ந்து மகிழ்ச்சி என்ற நிலைகளில் இனி அரவணைத்து
1.தான் செய்த குற்றத்தை மறந்து என்னுடன் இணைந்து மீண்டும் வாழலாம் என்ற நிலைக்கு இராமன் வருகின்றார்
2.ஆனால் மாசுபடும் உணர்வுடன் கலந்தால் அந்த உணர்வின் தன்மை எப்படி இருக்கும்...? என்ற நிலையைத் தான் இங்கே காட்டப்படுகின்றது.

விஷ்ணுவின் பக்தன் ஆஞ்சநேயர் என்றாலும் அதே உணர்வின் தன்மை தான் எண்ணிய உணர்வுகள் உயிருடன் ஒன்றுகின்றது. விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன் என்று கூறப்படுகின்றது.

எதை எல்லாம் நுகர்ந்தோமோ உயிரான விஷ்ணுவிடம் வரும் போது அது வரம் கொடுக்கும் நிலையாக அமைந்து விடுகின்றது. இந்த உணர்வின் தன்மை உடலில் சேர்க்கப்படும் பொழுது சீதா - மகிழ்ச்சியின் தன்மையை பிரம்மம் ஆகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி அந்த ஞானத்தின் தன்மை கொண்டு வருகின்றது.

இருந்தாலும் இந்தச் சீதா...
1.தன் உணர்வின் தன்மை என்றும் ஒளியின் மயமாக வேண்டும் என்றும்... அருளொளியாக வளர வேண்டும்
2.கணவன் மனம் தெளிந்திட வேண்டும் தெளிவான நிலைகள் வளர வேண்டும் என்ற
3.தெளியச் செய்யும் உணர்வின் தன்மையைத் தான் எண்ணத்தால் எண்ணி எடுக்கப்படும் பொழுது
4.எந்தச் சுவையின் தன்மையோ... விஷ்ணுவிடம் இணையும் நிலை தன்மை வரப்படும் பொழுது
5.நுகர்ந்த உணர்வின் தன்மை (சீதா) ஒளியாகி அதைத் தன்னுடன் அரவணைக்கும் தன்மை வருகின்றது.

இதைக் காட்டுவதற்குத் தான் தன் கணவன் (விஷ்ணு) என்ற நிலையில் மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு “நிலையான நிலைகள்” பெற்றதனால்
1.கடைசியில் இராமன் அரண்மனைக்குக் கூப்பிடும் பொழுது
2.இந்தப் பூமியில் விளைந்த உணர்வின் சத்து பூமியைப் பிளந்து
3.உடலில் பெற்ற சத்துக்கள் எல்லாம் பூமியுடனே ஐக்கியமாகின்றது.

ஆனாலும்... பூமியிலே வந்த மணத்தின் உணர்வுகள்... உணர்ச்சிகள்... வந்ததெல்லாம் சீதா எடுத்துக் கொண்டதனால் உணர்வின் தன்மை ஒளியாகி... உணர்வின் தன்மை அது இயக்கமானது போல
1.”சீதா - சீதாராமா என்ற சுவையின் உணர்வின் ஒளியாக விஷ்ணுவுடன் ஐக்கியமாகின்றது...
2.சொர்க்கம் அடைந்தது என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

இதனின் விரிவாக்கம் சொல்ல வேண்டும் என்றால் குறைந்த்து இரண்டு மாதம் ஆகும். உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்லி இந்த உண்மைகளை நீங்கள் உணரும்படி செய்கின்றோம்.

இந்த மனித வாழ்க்கையில் வரும் உண்மையின் இயக்கங்களை நீங்கள் அனுபவங்களாகத் தெரிந்து கொள்ளலாம். ஆகவே இராமாயணத்தில் அவ்வளவு பெரிய உண்மைகள் உண்டு.

காட்டிற்குள் அழைத்துச் சென்று... சீதா என்ற சுவையைப் பற்றிய உண்மை நிலைகளை “மனிதனான பின் இதையெல்லாம் தெரிந்து கொள்கிறோம்...” என்று குருநாதர் எனக்கு உணர்த்துகின்றார்