நாம் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் கூட ஒரு சிலர் நம்மிடம் பகைமை கொண்டு பேசுவார்கள். நல்லதைச் செய்தாலும் கூட இந்த மாதிரி வரும்.
காரணம் என்ன என்றால்...
1.கெடுதல் செய்த உணர்வு கொண்ட ஆவி அவர் உடலிலே இருந்தால்
2.நீங்கள் நல்லது செய்வதைப் பார்த்தாலே அவருக்குப் பிடிக்காது.
3.எதிரி என்ற நிலைகளில் உங்களைக் கண்டாலே இல்லாததை எல்லாம் சொல்லும்.
ஒரு உடலுக்குள் இந்த மாதிரி ஆவி இருந்தாலே நாம் தியானம் செய்கிறோம் என்று சொன்னாலே போதும். நம்மைப் பார்த்ததும்...
1.என்னை ஏதோ செய்கின்றான்... இதைச் செய்கின்றான்.. அதைச் செய்கின்றான்...! என்று சொல்ல ஆரம்பிக்கும்
2.நாம் ஒன்றுமே செய்யவில்லையே... இப்படிச் சொல்கிறதே...! என்று நினைப்பீர்கள்.
அந்த உணர்வை நுகர்ந்தாலே “நான் ஒன்றுமே சொல்லவில்லை இந்த மாதிரித் தவறாகச் சொல்கிறான்... பாவிப்பயல்...!” என்ற இந்த அலைகளில் சிக்கிவிடுவோம்.
அந்த மாதிரி நேரத்தில் எல்லாம்...
1.உடனே மகரிஷியின் அருள் உணர்வை நமக்குள் எடுத்து வலுவாக்கிக் கொண்டு
2.அவருக்குள் இருக்கும் அந்த ஆவி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவருக்குள் இருந்து நன்மை செய்யும் செயல்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
இதிலே நமக்கு அந்தத் துணிவு அவசியம் வேண்டும். அதனால் தான் நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்று சொல்வது. அந்த இடத்திலே துணிவு இருந்தால் தான் அதைச் செய்ய முடியும்.
1.நமது குருநாதர் கொடுத்த நிலைகளை ஒவ்வொன்றையும் நீங்கள் வரிசைப்படுத்திப் பாருங்கள்
2.நன்மை செய்ய வேண்டும் நமக்குள் அது வளர வேண்டும் என்றால் அதற்குத் துணிவு வேண்டும்.
உடலில் ஆவி உள்ளவருக்கு அவர் கஷ்டப்படுகிறார் உதவி செய்ய வேண்டும் என்று நாம் சொன்னால் போதும்...!
ஐய்யய்யோ பாவிப் பயல்...! எனக்கு ஏதோ செய்கின்றான்... விஷம் வைக்கின்றான்... மருந்து வைக்கின்றான்...! என்று சொல்லும்... பார்க்கலாம் இதை எல்லாம்...!
அவர்கள் உடலில் இருக்கும் அந்த ஜீவான்மா (ஆவி) மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அந்த உடலிலிருந்து நன்மை செய்யும் நிலைக்கு வர வேண்டும் என்று நாம் எண்ணி எடுக்க வேண்டும்.
ஏனென்றால் இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் நல்லது செய்கின்றோம் என்றாலும் கூட அடுத்த வீட்டுக்காரர் நம்மைப் பற்றி இல்லாததை எல்லாம் சும்மா சொல்லிக் கொண்டே இருப்பார். காரணம் அவர் உடலில் ஒரு ஆன்மா இருக்கும்.
ஆக... ஆன்மா இல்லாதவர்களே இல்லை.
ஆனால் நம்மைக் கண்டவுடனே அதற்கு வெறுப்பாக இருக்கும்... உடலில் எரிச்சல் ஆகும்...! அப்படி நம்மை எரிச்சலுடன் பார்க்கும்போது நம் ஆன்மாவில் முன்னாடி அது அதிகமாகப் பெருகிவிடும். இது பெருகி விட்டால் அதைத்தான் நாம் சுவாசிப்போம். அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்கும்.
ஆனாலும் உயிரிலே பட்டபின் இந்த உணர்வை வெளிப்படுத்துவது நம் உயிரே தான். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் வந்தாலும்
1.உடனே இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.இங்கே புருவ மத்திக்கு நினைவைக் கொண்டு வர வேண்டும்.
3.இப்படிப் பல முறை கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி உணர்வின் சக்தியை தனக்குள் எடுக்க வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதே சமயத்தில் எந்த உடலில் எப்படிப்பட்ட ஆன்மா இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அந்த நன்மை செய்யும் சக்தியாக வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
இதைச் செய்தால் அவர்கள் உணர்வு நம்மை எதிர்மறையான உணர்வுடன் இயக்காது. அதே சமயத்தில் அவர்களுக்குள்ளும் இந்த அருள் உணர்வுகள் சென்று ஊடுருவி இயக்கும். விலகிச் சென்றாலும் சென்று விடுவார்கள். நமக்குத் தொல்லை தர மாட்டார்கள்.
1.துணிவுடன் செய்து நமக்குள் இருக்கும் நல்ல குணத்தைக் காக்க வேண்டும்.
2.அவர்களுக்குள்ளும் இந்த அருள் உணர்வை நாம் பாய்ச்சும் போது
3.அங்கேயும் உண்மையை உணர்த்தும் சக்தியாக அவர்களை இயக்கும்.