குருநாதர் காட்டிய
அருள் வழியில்...
1.அந்த மகரிஷிகளின்
உணர்வின் உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டச் செய்கின்றோம்
2.அந்த உணர்வின்
ஏக்கத்தைப் பெருகச் செய்கின்றோம்
3.மகரிஷிகளின்
பால் உங்கள் நினைவாற்றலைப் பெருகச் செய்கின்றோம்
4.மெய் ஞானிகள்
கண்டுணர்ந்த உணர்வை உங்களுக்குள் ஆழப் பதிவு செய்கின்றோம்
ஆலயங்களில்
இந்தத் தெய்வம் உங்களுக்கு நல்லதைச் செய்யும் என்ற நிலையில் அர்ச்சனைகளும் அபிஷேகங்களும்
யாக வேள்விகளைச் செய்யச் செய்து உங்களை வசியப்படுத்துகின்றனர்.
கோவில்களிலே
வசியப்படுத்துவது போன்று... குருநாதர் என்னை வசியப்படுத்தியது போன்று...
1.அந்த மகரிஷிகள்
உணர்வுகளை நீங்கள் பெற வேண்டுமென்று
.உங்கள் உணர்வை
அதிலே வசியப்படுத்தச் செய்கின்றேன்.
இந்த வசியத்தைக்
கண்டுணர்ந்தபின்... உங்கள் எண்ணத்தால் அந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள்
“கைவல்யப்படுத்த முடியும்...”
இதனின் துணை
கொண்டு எண்ணத்தால் மகரிஷிகளின் உணர்வைப் பிறர்பால் பாய்ச்சி அவர்களுடைய தீமைகள் வராமல்
தடுத்தால் அது “ஏவல்...”
1.அந்தத் தீமைகள்
அகல வேண்டும் என்ற நினைவால்
2.உங்கள் உணர்வின்
தன்மை அங்கே தீமைகளை அகற்ற முடியும்...
3.உங்களை நீங்கள்
நம்புங்கள்.
ஆகவே... அருள்
ஞானிகள் காட்டிய பாதையில் நாம் செல்வோம். அருள் ஞானிகள் காட்டிய உணர்வில் அந்த முழுமை
அடைவோம்.
உயிரால்...
உணர்வால் நாம் அறிந்திடும் நிலையும்... இருளைப் போக்கிடும் உணர்வின் ஆறாவது அறிவின்
துணை கொண்டு அருள் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்வோம். இருளைப் போக்கி ஒளி காணும்
தன்மையாக உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்.
நாம் நுகரும்
உணர்வுகள் உயிரால் இயக்கப்பட்டு “உணர்வை இன்னது தான்...” என்று அறியும் ஆற்றலைக் கொடுத்த
அந்த நிலையில் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு... இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக நாம்
பெற முடியும்.
நம்மை ஆண்டு
கொண்டிருப்பது நம் உயிர் தான். நாம் எதை எண்ணிக் கொடுக்கின்றோமோ அதை வைத்துத் தான்
உயிர் நம்மை ஆட்சிப் புரிகின்றது.
ஆகவே நமது குருநாதர்
காட்டிய நிலைகள் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவு செய்து... நீங்கள் வசியமாக்கிக்
கொண்டு இந்த உணர்வின் தன்மை நீங்கள் அதை கவர்ந்துணர்ந்தால் அதை வைத்து மீண்டும் அந்த
மகரிஷிகளின் உணர்வை நீங்கள் கைவல்யப்படுத்த முடியும்.
உங்கள் மூச்சால்
பேச்சால் உங்களுக்குள் வரும் தீமைகளை ஏவல் செய்து மீட்டிட முடியும். பிறருக்குள் உங்கள்
சொல்லை அங்கே ஏவல்படுத்தித் தீமைகளை ஒழித்திட முடியும்.
நமக்குள் விளைந்த
இந்த உணர்வின் தன்மைகளைச் சூரியனின் காந்த சக்தி கவருமேயென்றால் விஞ்ஞான அறிவால் வந்த
தீமைகளையும் மந்திரத்தால் உருவான தீமைகளையும் அகற்றச் செய்ய முடியும்.
அந்த மெய் ஞான
உணர்வு கொண்டு நாம் அனைவரும் கூட்டமைப்பாக இந்த ஒளி அலைகளைப் பரப்பப்படும்போது தீமைகளை
விளைவிக்கும் நிலைகளைப் பிளக்கவும் முடியும்.
அந்த ஆற்றல்
பெற வேண்டும் என்றால் உங்கள் மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும். விண் செலுத்தி விட்டால்...
1.விண் சென்ற
அவர்கள் உணர்வை எளிதில் பெற்று
2.அவர்களின்
துணை கொண்டு அந்த அருள் ஞானியின் உணர்வை எளிதில் பெற முடியும்.
3.நம்மை அறியாது
வந்த தீமைகளைச் சுட்டு பொசுக்க முடியும்.
உண்மையான தியானம்
இது தான்...!
ஆகையினால் அந்த
மகரிஷிகளின் அருள் சக்தியை கவரும் நிலைக்கே உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அதை
வசியப்படுத்தச் செய்கின்றோம்.
அதாவது இந்த
உபதேசத்தை உற்றுக் கேட்ட உணர்வுகள் அந்த ஞானிகள் உணர்வின் தன்மை பதிவான பின்பு வசியம்...!
இந்த உணர்வின்
தன்மை கூடும் போது அந்த ஞானிகள் உணர்வைக் கைவல்யப்படுத்த முடியும். அதே சமயத்தில் நாம்
எல்லோரும் ஒன்றாக அதைச் சேர்க்கும்போது அது கைவல்யம். ஒவ்வொருவரும் தனக்குள் அந்த சக்தியைச்
சேர்த்திட முடியும்.
பின் இதனின்
உணர்வின் தன்மை கொண்டு
1.யாரைப் பார்த்தாலும்
“தீமைகள் அகன்றுவிடும்” என்று
2.உங்கள் சொல்லால்
இந்த உணர்வின் தன்மை ஏவல் படுத்தும்போது
3.அங்கே இருக்கக்கூடிய
தீமைகள் ஒடுங்கும்.
ஒரு தேரை பல
ஆயிரம் பேர் சேர்ந்து இழுத்து அதை எல்லை சேர்ப்பது போல நாம் அனைவரும் சேர்ந்து அந்த
உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து இயக்கினோம் என்றால்
1.நமக்கு முன்
படர்ந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை
2.அவரவர்கள்
எண்ணி ஏங்கி எடுக்கும் அந்தப் பங்கின் விகிதாச்சாரப்படி உங்கள் ஆன்மாவில் கலக்கும்.
3.இப்படி இந்த
உணர்வின் தன்மை உங்களுக்குள் வரும்போது தான் கைவல்யம் ஆகும்.
முதலில் வசியப்படுத்தும்
நிலைக்கு உங்களைத் தயார் செய்தது இந்த உபதேசம். பின் அதனின் உணர்வின் தன்மை ஏங்கப்படும்போது
கைவல்யம். உங்களுக்குள் அந்தச் சக்தியின் தன்மை பெருகும்.
பின் தீமைகளை
அகற்றும் உணர்வின் தன்மையாக கொண்டு நினைவால்... சொல்லால்... ஏவல் செய்ய முடியும் தீமைகளை
அகற்ற முடியும். உங்களை நம்புங்கள்...!