பருத்தி என்றால்
அதிலிருந்து பஞ்சை எடுத்து ஆடைகளை நெய்வதும் பருப்பைப் பதப்படுத்தி உண்ணவும் அதனதன்
வளர்ச்சிக்கொப்ப... “இன்னதை இன்னதிற்குப் பயன்படுத்தலாம்...” என்பது மனித ஞானம் அறிந்த
உண்மை.
மேலும்... இன்று
மனிதன் இயற்கையில் வளரும் தாவரங்களுக்குச் செயற்கையில் உரமிட்டு இயற்கைத் தன்மையின்
வளர்ச்சியை மாறுபடச் செய்து அதை வளரச் செய்யக்கூடிய பக்குவத்தை வளர்ப்பவனும் இதே மனிதன்
தான்.
ஆனால் அதே மனிதன்
தான்...
1.தன் உயிராத்மாவின்
ஜீவித வாழ்க்கையை
2.தன் உணர்வின்
எண்ணத்தைக் கொண்டு
3.தன்னைத் தானே
தான் உணர்ந்து உயர் நிலை பெறுவோம் என்ற வழியறியாது
4.தன் வாழ்க்கையில்
நடப்பவை யாவும் ஊழ்வினை - “விதி” என்ற
5.வினைப் பயனை
விதைத்துக் கொள்கின்றான் தன் எண்ணத்தில்.
இயற்கையையும்
செயற்கையாக்கி விஞ்ஞானத்தில் பல உண்மைகளை மனிதச் செயல்தான் வளர்த்தது. அதே மனிதன் ஜீவாத்மாவின்
உண்மையின் உண்மையை உணர்ந்து தன்னைத்தான் ஆள வேண்டும்.
அறம்... பொருள்...
இன்பம்...
1.அறம் - நல்லொழுக்கத்தைச்
சத்தியம் என்ற நேர் கோட்டில் உணரவும்
2.பொருள் -
அறத்தைச் செயலாக்கி சத்தியத்தை வளர்த்து
3.இன்பம் -
என்ற பிறவா ஒளி நிலை ஆனந்த உணர்வை இவ்வாத்மா அடைவதற்காக
4.முந்தைய பல
ஆண்டுகளாக ஞானிகள் மகரிஷிகள் உயர் தத்துவத்தை உணர்த்தியுள்ளனர்.
இக்கலியிலும்
புறநானூறு அகநானூறு திருக்குறள் நல்லொழுக்கம் ஆத்திச்சூடி போன்ற பல நூல்களில் வந்துள்ள
தத்துவங்கள் யாவும்... மனித உணர்வின் எண்ணம் நல்லொழுக்கம் பெற்று... அகத்தின் பொருளறிந்து...
“அகிலத்தின் பொருளாகும் உண்மையைத் தான் வழிகாட்டின...”
ஆகவே நம் உயிராத்மாவின்
உயர் நிலை பெற ஊழ் வினை என்ற வினைப்பயனை எண்ணத்தில் எண்ணாமல்... எண்ணத்தில் நற்குணத்தை
ஒவ்வொருவரும் பெற்று... விதியை மதி கொண்டு... ஞானம் கொண்டு செயல்பட வேண்டும்.
1.முதலில்...
தன் சரீர உணர்வில் வெளிப்படக்கூடிய இச்சைகளை
2.தன் எண்ணத்தின்
சிந்தனை கொண்டு
3.இச்சரீர ஏக்கத்தின்
இச்சைகளை அடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
சரீர ஏக்கத்தின்
இச்சை என்பது விருப்பு வெறுப்பு பசி தூக்கம் கோபம் ஆசை இன்பம் துன்பம் காமம் இவை யாவையுமே
தன்னில்தான் தன் உணர்வில் தோன்றக்கூடிய உந்தல்கள் தான்.
அதன் இச்சையின்
செயலுக்கு நம் உணர்வின் எண்ணம் செல்லும் பொழுது உடல் உபாதையினால் உணர்வின் எண்ணம் பாதிக்கப்பட்டுத்
தன்னைத் தானே வலுவிழக்கச் செய்து வினைப் பயன் என்ற முத்திரையை... “தானே குத்திக் கொள்ளும்
நிலைதான்...”
உடல் உபாதையையும்...
உடல் உணர்வுகளினால் எண்ணத்தின் வலுவைக் கொண்டு... இச்சரீரத்தின் எச்செயலையும் தன்னுள்
உள்ள “இறை உயிரைக் கொண்டு” நல்லதாக மாற்றிட முடியும்.
இச்சரீரம் எத்தனை
கோடி ஆண்டுத் தொடரில் புழுவாய் பூச்சியாய் மனிதனாய் பல உணர்வுகளில் பல உருவில் உருப்பெற்று
உயிர் ஜீவனில் இன்றுள்ள நிலைக்கு வினைப்பயனின் வித்தாய் வளர்ந்து வந்துள்ளது.
எவ்விதை ஊன்றப்
பெற்றதோ... அச்செடியாக அது வளர்ந்தாலும்...
1.அதை மாற்றி
அமைக்கக்கூடிய மெய் ஞானம் என்ற மதி கொண்டு
2.மனித எண்ணத்தின்
உயர் ஞானத்தால்
3.அறம் பொருள்
இன்பம் என்ற இனிய நிலையை ஒவ்வொருவரும் பெற முடியும்.
அதைப் பெறக்கூடிய
பக்குவத்தைத்தான் இங்கே தொடர்ந்து போதனையாக வழங்குகின்றோம்.
இச்சரீரம் உறங்கும்
பொழுது “உறக்கம்” என்றும்... செயல்படும் பொழுது “விழிப்பு” என்றும் சொல்கின்றோம். ஆனால்..
1.ஆத்மாவின்
செயலில் இச்சரீரத்தை இயக்கக்கூடிய தன்மை பெற்றல்
2.உண்மைத் தன்மை
விழிப்பு நிலை பெறுகின்றது.
வாழ்க்கை நடைமுறையில்
இச்சரீர உணர்வுக்கொப்ப எண்ணுபவை யாவும் ஆத்மாவில் பதிவு பெறுகின்றது. அதே தொடரின் வாசனைதான்
உணர்வு பெற்று இஜ்ஜீவித இயக்கத்தில் காந்த மின் அலையான இச்சரீர இயக்க ஓட்ட ஆத்மாவில்
பதிவாகி விடுகின்றது.
எப்பதிவை எண்ணத்தின்
உணர்வு கொண்டு நாம் பேசி மகிழ்ந்து வாழ்கின்றோமோ அவ்வலையைத்தான் ஆத்மா பெறுகின்றது.
அவ்வலையைத்தான்
நம் உணர்வின் எண்ணமும் பெற்று நம்மையறியாமல் பேசவும் செயல்படுத்தவும் செய்கின்றது.
நம்மைச் செயலாக்கும் நிலையும் அதுவேதான். ஆக.. அந்நிலை இச்சரீர ஆத்மாவை இப்பூமியின்
பிடிப்பில் உறங்க வைத்த நிலை.
இப்பூமியின்
பிடிப்பிலிருந்து விழிக்கும் நிலை என்பது...
1.தன்னைத்தானே
தான் உணர்ந்து...
2.இச்சரீர உணர்வின்
வாசனையை... இவ்வாத்மாவில் பதிய வைத்து வளர்த்துக் கொண்ட நிலையை...
3.உயர்ஞானத்தைக்
கொண்டு தன்னை இயக்கும் ஆத்மாவின் உண்மையை உணர்ந்து
4.ஆத்மாவிற்கு
நல் ஒலிகளை... நற்குணமுடன் கொண்ட உயர் தன்மையை...
5.அறம் பொருள்
இன்பம் என்று பெரியவர்கள் நமக்குக் காட்டிய உயர் குணத்தின் சத்தியத்தை வளர்க்க
6.மாறிப்போகக்
கூடிய இச்சரீரத்தில் உயர் குண சத்தியத்தைக் கொண்டு
7.இஜ்ஜீவ உயிராத்மா
- உயர் காந்த மின் சக்தியினால்
8.இச்சரீரத்தில்
வாழக்கூடிய வாழ்நாளில் – விழிப்பு நிலை நாம் முதலில் பெற வேண்டும்.