ஒரு வித்தினை
நிலத்தில் ஊன்றி விட்டால் அது செடியாகி அது வளர்ச்சி பெறும்போது அதனின் வித்துக்களை
அதிகமாக உருவாக்குகின்றது.
இதைப் போல நம்
உடலும் ஒரு நிலம் போன்றது தான். கோபமாகப் பேசும் மனிதன் உணர்வை நுகர்ந்து நாம் வித்தாக
நமக்குள் ஊன்றி விட்டால் அந்த உணர்வு நமக்குள் கோபத்தை உருவாக்கும் அணுக்களைப் பெருக்கி
விடுகின்றது.
கோபத்தின் உணர்வின்
அணுக்கள் நம் உடலிலே பெருகி விட்டால் நம் உடலுக்குள் இருக்கும் சாந்த குணமாக இயக்கும்
அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது.
உதாரணமாக பார்க்கலாம்...
ஒரு கோபக்காரர் நம் பக்கத்தில் இருந்தால் அவர் யாரை எடுத்தாலும் கோபமாகப் பேசிக் கொண்டிருப்பார்.
இரு நான் உன்னைப் பார்க்கின்றேன்.. என்ன செய்கின்றேன் பார்...! என்ற வகையில் உணர்ச்சிவசப்பட்டு
கோப உணர்வாக வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்.
இதைப் போன்று
நாம் நுகர்ந்த கோப உணர்வுகள் அது அணுக்களாக உடலுக்குள் வளரப்படும் பொழுது...
1.புலி எப்படி
மற்றொன்றை இரக்கமற்றுக் கொன்று புசிக்கின்றதோ
2.இதைப்போல
நம் உடலுக்குள் அந்த அசுர அணுக்கள்
3.தன் அருகில்
இருக்கும் நல்ல அணுக்களை இது கொன்று புசிக்கத் தொடங்கிவிடும்.
பின் நம் உடலை
உருவாக்கிய நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் இந்த நல்ல உடலுக்குள் இயக்கச் சக்தியாக
மாற்றும் “திரவகப் பொருட்கள்” கிடைக்காது போகும்
1.நம் உடலில்
உள்ள நரம்புகளில் ஒரு விதமான அமிலம் உண்டு
2.அந்த திரவகம்
நமக்குள் இல்லை என்றால் கைகளை மடக்குவதோ நீட்டுவதோ கடினம்.
3.அதே மாதிரி
மூட்டுகளிலும் இந்தத் திரவகம் இணைக்கப்பட்டுள்ளது
4.மடக்கவும்
நீட்டவும் அந்த வலுக் கொண்டு நம்மை இயக்க உதவுகின்றது.
இன்று நாம்
பார்க்கலாம்.. இயந்திரங்களுக்கும் வண்டிகளுக்கும் விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு வித திரவகப்
பொருளை (மசகு எண்ணை – LUBE OIL) கலக்குகின்றனர். அதன் மூலம் இயந்திரங்கள் தேய்வில்லாதபடி
சில காலம் ஓடுகின்றது.
பெரிய பெரிய
இன்ஜின்களிலும் இதே போல் திரவகத்தைக் கலக்கின்றனர். அதற்குள் இருக்கும் பேரிங்குகளோ
பிஸ்டனோ இந்தத் திரவகத்தை கலக்கப்படும்போது தேயும் தன்மையும் குறைகின்றது... ஒரே சீராக
இயங்குகின்றது.
இதைப் போலத்தான்...
நம் உடலில் உயர்ந்த அணுக்களால் உருவாக்கப்பட்ட அதனுடைய மலம் திரவகமாக மாற்றப்பட்டு
எல்லா உறுப்புகளுக்குள்ளும் அது இணைந்த நிலையில் சீராக இயங்க உதவுகின்றது.
நம் உடல் உறுப்பு
நுரையீரல் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த நுரையீரலில்
நுண்ணிய அலைகளாக இயக்கி...
2,அதை இயக்கச்
செய்யும் அந்த நரம்புகளுக்கும் வாயு நரம்புகளுக்கும்
3.நாம் சுவாசிக்கும்
அந்த வாயுவினுடைய (காற்று) தன்மைகள் சென்றபின் அது விரிவடைகின்றது.
4.மீண்டும்
சுருங்கச் செய்வதற்கு அதிலுள்ள திரவக அணுக்கள் அதைச் சுருங்கி இழுக்கும்.... மீண்டும்
அந்தக் காற்று புகும்போது விரிவாகும்.
ஒரு காற்றினை
அழுத்தப்படும்போது அதனால் விரிவாவதும் பின் காற்றினைக் குறைக்கப்படும்போது அதனுடைய
நிலைகள் குறைக்கின்றதோ இதைப் போல் தான் நம் சுவாசப்பைகள் இயக்குகின்றது.
இவ்வாறு தொடர்ந்து
இந்த நுரையீரலை இயக்கச் செய்யும் நிலைகளில்... மற்ற அனைத்திற்கும் இந்த உணர்வின் தன்மையை
ஒருக்கிணைந்து இயக்கச் செய்யும் ஈரல் மையங்களுக்கு அனுப்பும் செயல்களில்
1.இந்த ஆசிட்
பவர் (திரவகம்) குறைந்து விட்டால்
2.அது இழுத்து
விரிவடையச் செய்யும் காற்றின் நிலைகள் விரிவடைந்து விட்டால் “அதிகமாக விரிவடைந்துவிடும்...”
3.அதே போல்
சுருங்கச் செய்யும் சக்தியும் நரம்பு மண்டலங்களில் அந்தத் திரவகப் பொருள் இல்லையென்றால்
4.நுரையீரலைச்
சுருங்கச் செய்யும் சக்தியும் குறைந்துவிடுகின்றது.
இப்படி அந்தச்
சுருங்கச் செய்யும் சக்தி குறைவடையப் போகும்போது நமது நினைவாற்றலையும் குறைக்கச் செய்யும்.
அதாவது...
1.இந்தத் திரவகம்
நம் சிறு மூளை பாகம் வரை சென்று
2.அதனுடன் ஒன்றுடன்
ஒன்று இயக்கப்படும் பொழுது
3.அதனுடைய அழுத்தக்
குறைவு ஆகிவிட்டால் அந்த உறுப்புகளை இயங்க விடாமல் தடைப்படுத்துகின்றது
4.மிகவும் நுண்ணிய
நிலைகளாக ஆக்கி விடுகின்றது (சிறுத்து விடுகின்றது)
இத்தகையை நிலைகள்
நமக்குள் ஏற்பட்டு விட்டால் நமக்குள் தீய அணுக்கள் உள்ளே புகாது அவைகளைத் தடைப்படுத்தும்
அந்த சக்தி இழக்கப்படுகின்றது.
நாம் எடுக்கும்
கோப உணர்வின் அமிலங்கள் இத்தனை வேலைகளுக்கும் காரணமாகின்றது. இதை எல்லாம் தெரிந்து
கொண்ட நிலையில் தீமையான உணர்வின் அமிலங்கள் நமக்குள் உருவாகாதபடி நம் குருநாதர் காட்டிய
அருள் வழியில் தடைப்படுத்திப் பழக வேண்டும்.