பசு மடியில்
சுரக்கும் பால்… தன் கன்று குடித்து அதன் பின் மீண்டும் பலரும் பருக அது பயன்படுகின்றது.
1.அந்தப் பசு
மடி சுரக்கும் பால் போல்
2.நாமெடுக்கும்
உயர் ஞானத்தின் தன்மை
3.பலருக்கும்
பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.
நாமெடுக்கும்
உயர் ஞானம் நம் உயிரானது... நம் உயிராத்மா கன்று போல் பருகி… பலரும் பருகக்கூடிய பலனாய்
ஞானியின் சக்தியாகச் செயல்படல் வேண்டும்.
ஒவ்வொருவருக்குமே...
தன் உணர்வில்... தன் எண்ணத்தால்... தன் ஆத்மாவில் பதியப்பட்டது தான் நியாயமாகவும் உண்மை
என்றும் புலப்படும். ஆகவே
1.தன் உண்மைக்கு
ஒத்த கருத்துக்கள் கொண்டு உறவாடுவதை தனக்கு உகந்ததாயும்
2.மாறுபட்ட
எண்ணங்கள் யாவையுமே எதிர்ப்பு உணர்வைத் தோற்றுவிக்கும் எதிர் நிலைகளைத்தான் உண்டுபண்ணும்.
இந்த உண்மைகளை
எல்லாம் அறியக்கூடிய உயர் தன்மைக்காகத்தான் அன்றைய மாமகரிஷிகள் மனிதனுக்குள் இறைத்
தன்மையை வளர்க்கும் நிலையை நெறிப்படுத்தினார்கள்.
மனிதனுக்கு
மேல்… மேல் நிலையாக தெய்வ குணங்களையும்… தெய்வச் சிலைகளையும்… ஆலயங்களையும்… நல்லொழுக்க
நடைமுறைக்குக் கொண்டு வந்து… உண்மையின் சித்தத்தை மனிதன் அறியச் சீரிய வழிகளையும் வழிப்படுத்திச்
சென்றனர்.
இதை உணர்ந்து…
1.நாம் ஒவ்வொருவருமே
தெய்வ குணங்களைப் பெற்று
2.தெய்வ சக்தியை
வளர்த்துத் தெய்வங்களாகும் தன்மை பெறல் வேண்டும்.