ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 19, 2020

நேரடியாகவோ டி.வி.யிலோ ஒரு விபத்தைக் காண நேர்ந்தால் சிதைந்தவரின் அந்த உடலின் உணர்வுகள் நம் உடலை எப்படிச் சிதையச் செய்கிறது...?


நாம் மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இருந்தாலும் சந்தர்ப்பத்தில் ஒரு ஆக்சிடெண்ட்டை நாம் பார்க்க நேர்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதிலே அடிபட்டவர்கள் உடல் நசுங்கி இறந்து விடுகின்றார்கள்.

அடிபட்டு இறந்தவர்கள் வெளிப்படுத்திய உணர்வின் ஒலி ஒளிகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

டி.வி.யில் ஒரு மனிதனை இயந்திரத்தின் துணை கொண்டு படமாக்குகின்றனர். அதை ஒலிப்பேழைகளில் பதிவு செய்து மீண்டும் காந்தப் புலனறிவால் இயக்கப்பட்டு ஒலி/ஒளி பரப்புகின்றனர். அதை இன்னொரு இயந்திரத்தின் துணை கொண்டு நம் வீட்டில் அமர்ந்த இடத்திலிருந்து பார்க்கின்றோம்.
1.இதை வீடியோ என்று சொல்கிறோம்.
2.ஆனால் அதிலே படச் சுருள்களையோ உருவங்களையோ பார்க்க முடிவதில்லை.

ஏனென்றால் அது ஒலி... ஒளிப் பேழைகளை அதிலிருந்து அலைவரிசைகளாகத் தான் வெளிப்படுத்துகின்றது. காந்த புலனறிவால் கவரப்பட்டு எந்த மனிதனைப் படமாக்கி உருவாக்கப்பட்டதோ... அவன் எந்த நிலைகளில் இருந்தானோ அதனை அப்படியே நாம் டி.விக்களில் நாம் காணுகின்றோம்.

ஆகவே இதே காந்தப் புலனறிவால்தான் அது கவருகின்றது. அதன் உணர்வின் தன்மை ஒலி ஒளி என்ற நிலைகளில் அது பரப்புகின்றது... இது விஞ்ஞானம்...!

அதே போல் தான் ஒரு விபத்துக்குள்ளான மனிதனின் உடலிலிருந்து வேதனைப்பட்ட உணர்வுகள் அது வெளிப்படும்போது ஒலி ஒளி என்ற நிலைகள் அலைவரிசையில் வெளி வருகின்றது. அதைச் சூரியன் காந்த சக்தி கவருகின்றது.

1.எந்த மனிதனை நாம் உற்றுப் பார்த்தோமோ அதே ஒலி ஒளி என்ற நிலைகளில்
2.நமக்குள் அந்த உடலின் உருவத்தையும் அதில் எழும் சோக நாதத்தையும் நாம் பார்க்கின்றோம்.
3.அதை நமக்குள் உணர முடிகின்றது.

இதைத்தான்... நம் உயிரிலே இருக்கும் கவரும் சக்தியான காந்தப் புலனை லட்சுமி என்று ஞானிகள் சொன்னார்கள்.

ஒவ்வொன்றையும் தனக்குள் அந்த லட்சுமி கவர்ந்து... விஷ்ணுவாக (வெப்பம்) இருக்கும் தன் கணவனுடன் இணைந்து கவர்ந்த உணர்வின் சக்தியை அதே வேதனைப்படும் அணுவாக மாற்றுகின்றது பிரம்மமாக....! இதெல்லாம் நம் உயிருக்குள் நடக்கும் சம்பவங்கள்.
1.ஆக்சிடென்டைக் கண்ணுற்றுப் பார்த்தோம்
2.நம் உயிர் அதனை இப்படி ஜீவ அணுவாக மாற்றுகின்றது.

அந்த ஆக்சிடென்ட்டில் சிதைந்து போன உணர்வின் தன்மை உடலிலே உருப்பெறப்படும் போது அவன் எத்தகைய வேதனைப்பட்டானோ அதே உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் வரும் போது இரவிலே சிதைந்த உடல் எல்லாம் கனவாக உருவங்களாக வரும். ஆனால் நாம் இங்கே பார்த்த இந்தச் சிதைந்தவனின் உருவு வராது

இவ்வாறு உடல்கள் சிதைவதையும்... சிதைந்து கொண்டு இருக்கும் உணர்வுகள் அச்சுறுத்தும் உணர்வாக நம் ஆன்மாவில் இருந்து கொண்டு... நம்முடைய ஒவ்வொரு குணத்திலும் இந்தச் சிதைந்திடும் உணர்வுகள் பரவிப் பரவி... மனிதனாக உருப்பெற்ற தன்மைகளையே மறைக்கச் செய்யும்.

அதற்குப் பின் நமக்குள் எதனைக் கண்டாலும் அச்சுறும் தன்மையும் அஞ்சிடும் உணர்வாகவும் வலுவாக இயக்கத் தொடங்கும். நம்மை உருமாற்றத் தொடங்கும்.

சந்தர்ப்பத்தில் ஒரு மனிதன் ஆக்சிடென்டில் சிதைந்தான். ஆனால் நமக்குள் நுகர்ந்த உணர்வு உடலாக உருவான அந்த அணுவின் தன்மை அதனின் மலத்தை உமிழ்த்தும் பொழுது நமது உடல்கள் சிதைந்து விடுகின்றது.

அதே உணர்ச்சி நம் எலும்புகளில் பட்டுவிட்டால்...
1.அடிபட்டவனின் எலும்புகள் எப்படி நொறுங்கியதோ
2.அதிலிருந்து வந்த உணர்வின் தன்மையை நம் காந்தப் புலன் அறிவுகள் கவர்ந்து
3.இதனின் மலத்தொடர்கள் நம் உடலில் எலும்பை உருவாக்கும்
4.நல்ல அணுக்களின் மலங்களைக் குறைக்கச் செய்கின்றது... நம் எலும்புகள் பலவீனம் அடைகின்றது.

பின் எலும்பின் தன்மை சிதைந்து எதையாவது தொட்டவுடனே அல்லது ஏதாவது பட்டு இடித்து விட்டால் சடக்கென்று நொறுங்கிவிடும்... மாவு போல ஆகின்ரது. அங்கே எலும்புகள் நொறுங்கியது. நொறுங்கிய உணர்வின் தன்மை அலைகளாகச் சென்றது. அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் இத்தகைய நிலை ஆகின்றது.

அந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகளை அங்கே கவர்ந்தது நமது கண்கள் தான். இந்த உணர்வின் தன்மை “ஓ...” என்று ஜீவனாகின்றது. ஜீவ அணுவாக சிவமாகின்றது.

சிவத்திற்குள் அணுவின் தன்மை தனக்குள் அது தன் உணர்வை ஏங்கிப் பெற்று அதே உணர்வின் மலத்தை இடும்போது நம் உடலில் உள்ள எலும்பைத் தேய்மானாமாக்குகின்றது.

சில பேர் எனக்கு மூட்டு வலிக்கின்றது...! என்று சொல்வார்கள். நாம் கேட்டுக் கொண்டே இருப்போம். இந்த உணர்வின் தன்மை எதனுடன் தொடர்பு கொள்கின்றதோ இந்த உணர்வின் தன்மை ஓ...ம் நமச்சிவாய... என்று உடலாகின்றது.

சிதைந்த தன்மை வரும்போது அதே இடத்தில் உணர்வு சோர்ந்து வரும்போது சொன்னாலும் தான் அந்த பாகத்திற்குள் அதே அணு வளரும். இது எல்லாம் இயற்கையின் நிலைகள்.

அதாவது நாம் நுகரும் அந்த அணுக்கள் இங்கே வந்துவிட்டால் அந்தப் பாகத்தில் இருந்து சர்க்குலேசன் - ஓடி வரப்படும்போது நம் நினைவாற்றல் எதுவோ அந்தக் குறித்த இடம் வந்தவுடன் அந்த இடத்தில் தேங்கிவிடும்.

பின் அதனின் உணர்வின் தன்மை மலமாகும்போது எலும்பு தேய்வடையும். டாக்டரிடம் போனால் உங்கள் எலும்பு தேய்ந்து விட்டது என்பார்கள்.

இவர்கள் என்னால் நடக்க முடியவில்லை...! என்பார்கள். உடல் எடையின் தன்மை கூடும்பொழுது
1.முதலில் நேராக இருந்த கால்
2.தாங்காமல் நடந்து வந்தவுடன் இப்படிப் போகின்றது.

இவைகளையெல்லாம் அந்த இயற்கையின் நிலைகள் நமக்குள் எவ்வாறு மாற்றுகின்றது...? என்பதை நாம் பார்க்கலாம்.

இதைத்தான் கீதையிலே...
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று
2.கண்ணின் இயக்கத்தையும் உயிரின் இயக்கத்தையும் தெளிவுற உணர்த்தினார்கள் ஞானிகள்.