ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 17, 2020

பத்து வருடம் அமர்ந்து கேட்க வேண்டிய உபதேசத்தைப் பத்து நாளில் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்


ஒவ்வொரு அணுவிலும் ஆண் பெண் என்ற நிலைகள் இருந்தாலும்
1.உயிருக்குள் ஏற்படும் “வெப்பம் - விஷ்ணு” என்றும்
2.அதில் ஈர்க்கும் “காந்தம் வருவதை லட்சுமி” என்றும்
3.காரணப் பெயர் வைத்துக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

உதாரணமாக... கார்த்திகை நட்சத்திரம் ஆண்பால் கொண்டது. அதன் உணர்வின் சக்தி மற்றொன்றோடு மோதும் போது “வெப்பத்தின் தணல்” கூடுகின்றது. அந்த வெப்பத்தை உருவாக்கும் உணர்வின் சக்தியாக உருவாகிறது.

அந்த வெப்பத்தின் தன்மை கூடும்போதுதான் “ஈர்க்கும் சக்தி...” என்ற காந்தமே உருவாகின்றது. ஆகவே இதை லட்சுமி என்றும் காரணப் பெயர் வைத்துச் சுருக்கமாகக் கூறுகின்றார்கள் ஞானிகள்.

சந்தர்ப்பத்தில்... கார்த்திகை நட்சத்திரம் பெண்பால் என்ற ரேவதி நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் இணைத்து அதனுடன் இணைந்து வாழச் செய்யும் உணர்வுகளாக “ஒரு உயிரணுவாக” உருப் பெறுகின்றது.

ரேவதி நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து என்று ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன். “இதில் எத்தனையோ இருக்கிறது,..!” அதில் உள்ள உள் பிரிவுகளைச் சொல்ல வேண்டுமென்றால் நமக்கு ஆயுளே பத்தாது.

ஒரு அணுவின் தன்மை பல சத்துகளை எப்படிச் சேர்த்தது...? என்ற விளக்க உரை கொடுக்க வேண்டும் என்றால்
1.ஒரு உயிரணு உண்டாவதற்குரிய (தோற்றம்) மூலம்
2.அது எதன் எதன் வழிகளில் சேர்ந்தது...? என்று
3.ஆதிசக்தியிலிருந்து... விஷத்திலிருந்து பிரித்துக் கொண்டு வர வேண்டும்.
4.அதற்குப் பின் கோளாக ஆனதையும்... அதற்குப் பின் நட்சத்திரமாக ஆனதையும் அதற்குப் பின் சூரியனாக ஆனதையும்
5.மற்ற கலவைகள் எப்படி ஆனது...? என்ற நிலையில்
6.அந்த உயிரணு தோன்றுவதற்கு உரிய மூலத்தை உங்களுக்குள் ஒப்படைக்க வேண்டுமென்றால்
7.குறைந்தது பத்து வருடம் நீங்கள் உட்கார்ந்திருக்க வேண்டும்... இதைக் கேட்பதற்கு...!

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) இப்படித்தான் சொன்னார். பத்து வருடத்தில் வளர வேண்டிய வளர்ச்சியைப் பத்து நாளில் உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றேன்...! என்றார்.

இயற்கையின் உண்மைகள் உபதேச வாயிலாகப் உனக்குள் பதிவானதை பத்து வருடத்திற்குள் நீ எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும்...? என்றும் சொன்னார் குருநாதர்.

அதே போல் தான் இப்போது உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன். பத்து வருடத்திற்குள் நிச்சயம் உங்களுக்குள் நீங்கள் இதை வளர்த்துக் கொள்ள முடியும்.

அதாவது...
1.பத்து வருடத்திற்கு அமர்ந்து கேட்கக் கூடியதை இந்த உபதேச வாயிலாகக் கேட்டு
2.அதைப் பதிவாக்கி நீங்கள் எடுத்தீர்கள் என்றால்
3.பத்து வருடத்தில் நீங்கள் நிச்சயம் வளர்ச்சி பெற முடியும்

இப்படி உங்கள் உடலில் உள்ள... ஒவ்வொரு உணர்வின் இயக்கமும் ஒவ்வொரு உணர்வின் தன்மையும்
1.அது எவ்வாறு...? என்று உணர்ந்து உணர்ந்து விட்டாலே
2.நீங்கள் அந்த மெய் ஒளியின் உண்மையைப் பெறுகின்றீர்கள்.

இப்படித்தான் குருநாதர் எனக்கு உபதேசித்தார். அதைத்தான் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன்.

இதை  நினைவு கொண்டு எவர் எடுக்கின்றனரோ “அவரே...” தன் வாழ்க்கையில் இனிப் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.