பல கோடிச் சரீரங்களில்
எடுத்துக் கொண்ட எண்ணத்தால் தான் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து மனிதனாக வந்திருக்கின்றோம்.
அதே வளர்ச்சிப் பாதையில்...
1.துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியை இப்பொழுது நமக்குள் எடுத்து
2.அந்தக் கணக்கைக் கூட்டினால்
நாம் பிறவியில்லா நிலை அடைவோம்.
3.இதை அனுபவத்தில் தெரிந்து
கொள்ளலாம்
4.நாம் எங்கே போகின்றோம்...?
என்பது முன்னாடியே தெரியும்.
5.சொல்ல முடியும்... நான்
இங்கு தான் போகின்றேன் என்று...!
உதாரணமாக கோபியைச் சேர்ந்த
ஒரு அன்பர் “நான் சப்தரிஷி மண்டலம் போகின்றேன்” என்று சொல்லிவிட்டே போகின்றார். அதையே
அவர் வீட்டில் காட்சியும் கொடுத்திருக்கின்றார்.
1..நான் சப்தரிஷி மண்டலம்
போகின்றேன்
2.என்னைப் பற்றி எண்ணி
அழுகாதீர்கள்...!
அவர் வீட்டில் அவர் மனைவிக்கு
இந்தத் தியானம் பற்றிய விவரம் தெரியாது... தியானத்திற்கும் வராதவர். ஆனால் இவர் தான்
தியானம் செய்வார். இருந்தாலும் இதை எல்லாம் அவர்களுக்கு உணர்த்தி விண் சென்றுள்ளார்.
ஏனென்றால் நாம் அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடல் உறுப்புகளில் இணைத்து ஒளியாக ஆக்கி
விட்டால் அடுத்து ஒளி உடல் பெறுகின்றோம் அவ்வளவுதான்...!
இது தான் விஜய தசமி...
உயிரைப் போல உணர்வுகள் ஒளியாகின்றது... கல்கி...!
1.இந்தப் பிரபஞ்சமே அழிந்தால்
கூட துருவ நட்சத்திரம் அழிவதில்லை
2.அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில்
வாழும் பழக்கத்திற்கு நாம் வந்துவிடவேண்டும்.
ஆகவே...
1.எது எப்படி இருந்தாலும்...
அந்தத் துருவ நட்சத்திரத்தின் நினைவிற்கு “நாம் வந்து கொண்டே இருக்க வேண்டும்...”
2.கஷ்டம் என்ற நினைவை உள்ளுக்கே
விடாதபடி நாம் தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இது ஒரு பழக்கத்திற்கு
வந்தாக வேண்டும்.
எதாவது ஒரு சிறு மாற்றம்
வந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
எண்ண வேண்டும்.
தொழிலிலே அல்லது வேலை செய்யும்
இடங்களிலோ ஏதாவது எதிர்பாராது குறைகள் வந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்தியை உடனே
எடுத்து வலு சேர்க்க வேண்டும்.
1.அது கொஞ்ச நேரத்தில்
சிந்தனை கிடைக்கும்.
2.என்ன செய்ய வேண்டும்...?
என்று அமைதியும் சாந்தமும் விவேகமும் அந்த இடத்தில் வளரும்.
இது மாதிரி அனுபவத்தில்
வந்தால் எதையுமே சீர்படுத்தும் வலிமை நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் பெற முடியும்.
1.கொஞ்ச நாள் அனுபவித்துப்
பாருங்கள்... உங்களால் பெற முடியும்.
2.கவலை என்பதை விட்டுவிடுங்கள்
3.சோர்வு என்பதை விட்டுவிடுங்கள்
4.வெறுப்பு என்பதை விட்டுவிடுங்கள்.
5.வேதனை என்ற நிலையை விட்டுவிடுங்கள்
இதே மாதிரிச் செய்யுங்கள்.
செய்த நிலையில் எனக்கு
நல்லதானது என்று மற்றவருக்குச் நீங்கள் சொல்லப்படும்போது அவர்களுக்கும் அந்த உற்சாகத்தை
ஊட்ட முடியும்.
அதே மாதிரி யாம் (ஞானகுரு)
இல்லை...! என்று எண்ண வேண்டியதில்லை. யாம் உபதேசித்த கருத்துக்களை... அந்த ஒலி நாடாக்களை
எடுத்துப் போட்டு விளக்கங்களைக் கொடுங்கள். சும்மா இருக்கும் நேரத்தில் இதன் வழி செயல்படுத்தி
மற்றவரையும் கேட்கச் செய்யுங்கள்.
1.இப்படிப்பட்ட அருள் உணர்வுகளை
நுகர்வதும் அதை வெளிப்படுத்துவதும்
2.அறியாது வரும் இருளை
நீக்குவதுமே நம் வாழ்க்கை என்ற நிலைக்கு வந்துவிட வேண்டும்.
இன்றைய உலகில் எந்தப் பொருளைத்
தேடினாலும் அது எதுவுமே நமக்குச் சொந்தம் இல்லை.
1.நாம் சொந்தமாக்க வேண்டியது
அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைத்தான்...!
2.அதைச் சேர்த்து உயிருடன்
ஒன்றி என்றுமே ஒளியின் உடலாகப் பெற்று
3.துயரற்ற நிலையாக இன்னல்
இல்லாத நிலையை அடைவதுதான் கடைசி நிலை.
பல கோடி உடல்கள் பெற்றுத்
தீமைகளிலிருந்து நீக்கிடும் சக்தியாக இந்த உயிர் தான் மனித உடலை உருவாக்கியது. இந்த
மனித வாழ்க்கையில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக்கிக் கொண்டால் அழியா ஒளி உடல் பெறுகின்றோம்.