ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 23, 2020

தற்கொலை செய்யும் உணர்ச்சிகள் எப்படி மனிதனுக்குள் வருகின்றது...?


ஒரு சமயம் ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவி நீரிலே மூழ்கி இறந்துவிட்டது. இது இறந்தபின் அதனுடன் நட்பாகப் பழகிய இன்னொரு மாணவி அதை உற்றுப் பார்க்கின்றது. நம்முடன் நன்றாகப் பழகிய தோழி இறந்துவிட்டதே...! என்ற நிலைகளில் ஏங்குகிறது.

இறந்த மாணவியோ “படிப்பில் தான் தேறவில்லையே.. என்ற நிலைகள் ஏக்கம் கொண்டு அன்னை தந்தையர் ஏசுவார்கள்...! என்ற அச்சத்தால் கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

ஆனால் அதனுடன் பழகிய இந்த மாணவி பற்று கொண்டு எண்ணியபின் இறந்த மாணவியின் ஆன்மா இந்த உடலுக்குள் வந்து விடுகின்றது.

 ஏனென்றால் வீட்டில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் இந்த மாணவியிடம் இறந்த மாணவி ஏற்கனவே சொல்லியிருந்தது. “சரியாகப் படிக்கவில்லை என்ற நிலையில் தன் வீட்டில் தாய் தந்தை எப்படி எல்லாம் இம்சித்தார்கள்...! எப்படியெல்லாம் பேசினார்கள்...! என்றெல்லாம் அந்த மாணவி சொல்லியிருந்தது.

இதெல்லாம் அந்தச் சக மாணவியிடத்தில் பதிவாகி இருந்தது. பதிவான நிலைகள் கொண்டு ஏங்கிய பின் அந்த உணர்வின் தொடர்பு கொண்டு அந்த ஆன்மா இந்த உடலுக்குள் வருகின்றது.

ஆன்மா இந்த உடலுக்குள் வந்த பின் இந்த மாணவி வெளியிலே செல்லும் போதெல்லாம் “என்னைக் கிணற்றில் விழுகச் சொல்லுகின்றது... கிணற்றில் விழுகச் சொல்லுகின்றது...! என்ற அதே நிலைகள் அது எண்ணுகின்றது.

முதலில் ஒரு குழந்தை இதே மாதிரி எண்ணி இறந்தது. அந்த உணர்வுகள் இந்த உடலில் பதிவானது. பதிவான பின் இதைப் போல அது அவ்வாறு சொல்கின்றது.

இந்த உணர்வுகள் தனக்குள் பெருகி...
1.யாரோ என்னைத் தள்ளுகின்றார்கள்...
2.ஏதோ ஒரு பூதம் என்னை அப்படியே அமுக்குகின்றது என்று சொல்கிறது.

அது எப்படி விகாரக் கோரத்தில் இருந்ததோ அது எல்லாம் இந்த உடலுக்குள் தெரிகின்றது அந்தக் கற்பனை உணர்வுகள் இதற்குள் விளைந்து
1.முதலில் இறந்த மாணவி போன்று துர் மரணத்திற்குண்டான நிலை கொண்டு
2.மன உளைச்சலுக்கு ஆகின்றது... பின் இதுவும் அதே போல் ஆகிவிடுகின்றது.

இதிலே விளைந்த உணர்வுகள் எதை எதையெல்லாம் சொன்னதோ மற்றொரு குழந்தை மேல் சாடும்போது அது அதிலிருந்து வளர்ச்சியாகி வளர்ச்சியாகி வருகின்றது.

வெகு காலம் கழித்து என்னிடம் (ஞானகுரு) அந்தப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு வருகின்றார்கள்.

“திடீரென்று யாரோ வருகின்றார்கள்... என்னை உதைப்பதைப் போல் இருக்கின்றது... என்றும் யாரோ என்னைத் தள்ளுகின்றார்கள்... என்றும்  கிணற்றில் விழுந்துவிட வேண்டும் என்றும்... சொல்கிறது.

எனக்குப் பிறந்த குழந்தை... அவனும் கிணற்றுக்குள் விழுந்து விடுவானோ.. விழுந்து விடுவானோ..! என்ற எண்ணங்களையும் தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றது. இரவில் கனவுகளும் இதே போல் தான் வருகின்றது.

பூதங்கள்  வந்து என்னை நசுக்க வருகின்றதென்று அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

பின் இது எதன் வழிகளில் வந்தது...? என்பதைப் பார்க்கப்படும்போது
1.முதலில் ஒரு குழந்தை பாடத்தில் சரியாக இல்லை என்று கிணற்றில் விழுந்து இறந்தது
2.அதன் பின் இன்னொரு குழந்தை உடலில் இறந்தது
3.அதற்குப் பின் அதைச் சரி செய்ய இவர்கள் பல மந்திரங்கள் செய்து ஏவல் செய்திருக்கிறார்கள்.

ஆனால் ஒன்றும் முடியவில்லை.

கடைசியில் இத்தனையும் சேர்ந்து ஒரு பூத கணமாக மாறி இதற்கும் அதற்கும் அஞ்சும் உணர்வாகிப் போராட்ட நிலைகள் ஆகின்றது. முதல் ஆன்மாவை அடக்க இன்னொரு ஆவியின் நிலைகள் அதற்குள் விளைந்த செல்கள் இணைக்கப்படும்போது இது இரண்டுக்கும் போராட்டம்.

படிக்கவில்லை என்று தாங்காது அது இறந்தது. அதற்கடுத்து இது நுகர்ந்தது. மூன்றாவது ஆத்மா வரப்படும்போது “பூதம் வருகின்றது... என்னைக் கொல்லப் போகின்றது... என் கழுத்தை நசுக்குகின்றது... உள்ளுக்குள் தள்ளுகின்றது...” என்று இதனுடைய உணர்வுகள் இப்படி விளைந்து வருகின்றது.

பின் அவர்களைப் பார்த்து... குருநாதர் காட்டிய அருள் வழிகளைச் சொல்லி  இந்தெந்த நிலைகள் இருக்க வேண்டும் என்று அருள் உணர்வை வலுப்படுத்திய பின் ஒவ்வொன்றாக வடிகட்டிக் கொண்டு வந்தது.

ஆரம்ப நிலையிலிருந்து அது எப்படி ஆனதோ அதிலிருந்து பெருகி இதிலே எவ்வாறு விளைகின்றது என்ற நிலையை அறியும் தன்மையாக வந்தது.

இது எல்லாம் மனித வாழ்க்கையில் அறியாது ஏற்படக்கூடிய தீமைகள். பாசமாகப் பழகினாலும் பற்று கொண்ட நிலையில் இறந்தவரை எண்ணும் போது இந்த மாதிரி ஆன்மாக்கள் உடலுக்குள் வந்து விடுகின்றது.