மனிதருக்குள் ஒருவருக்கு ஒருவர் பகைமையான
உணர்வுகள் அலைகளாகப் படர்ந்திருப்பதை நிறுத்த... அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து..
அந்தப் பகைமையை நீக்க அகஸ்தியனால் கொடுக்கப்பட்டதே விநாயகர் சதுர்த்தி.
1.எனக்குள் வந்த பகைமையை நான் நீக்குவதும்
2.யாரை நான் பகைமையான எண்ணினேனோ அவரும் இதே போல் பகைமை உணர்வை
மறுப்பதும் தான் விநாயகர் சதூர்த்தி.
இப்படி ஏகோபித்த நிலைகள் கொண்டு மக்கள்
அனைவரும் இந்த உலகம் முழுவதும் பகைமைகளை அகற்றிடும் சக்தியை எடுத்துத் தொழுவார்கள் என்றால் பகைமை உணர்வு இங்கே முழுமையாக
அழிக்கப்படுகின்றது.
பமையான உணர்வுகளை இங்கே ஈர்க்கும் சக்தி
இழக்கப்படும் பொழுது அதன் இருப்பிடத்தை மாற்றி நகன்று சென்று கடலின் ஈர்ப்பிற்குள்
சிக்கி அது மறைத்து விடும்.
அந்த அகஸ்தியன் காட்டிய இந்த நிலைகளைத்
தான் தத்துவ ஞானியர் விநாயகர் சதூர்த்தி என்று காட்டினார்கள்.
அன்றைய நாள் ஏகோபித்த நிலைகள் கொண்டு அனைவருடைய
எண்ணங்களும் பகைமை அகற்றிடும் நிலையாக தீமைகள் தமக்குள் புகாது தடுத்து நிறுத்தும்
மார்க்கம் தான் விநாயகர் சதூர்த்தி.
இதைப் பின்பற்றுவோர் நீங்கள் “சொற்பமாக
இருக்கின்றீர்கள்...” என்று எண்ண வேண்டாம்.
1.நீங்கள் எடுத்து வெளிவிடும் அந்த அருள்
ஞானிகளின் மூச்சலையால்
2.விஞ்ஞான அறிவைப் பொசுக்கிடும் திறமை
பெறுகின்றீர்கள்.
நான் (ஞானகுரு) சொல்வது எளிமையான நிலைகளில்
இருக்கின்றது என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் யாம் பதிவாக்கும் உணர்வுகள் உங்களுக்குள்
விளைந்து அந்த வலிமையான எண்ணங்கள் கொண்டு அதைச் செயல்படுத்த முடியும்.
மகரிஷிகள் தோன்றிய நம் நாட்டிலே..
1.தென்னாட்டுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக்கும்
இறைவா போற்றி...! என்பது போல
2.அந்த அகஸ்தியன் உணர்வலைகளை நமக்குள்
பெருக்கி
3.அவன் உணர்வின் துணை கொண்டு நம் நாட்டைக்
காக்கலாம்
4.உலக மக்களைக் காக்கும் சக்தியும் நமக்கு
உண்டு.
அத்தகைய ஆற்றலை நாம் பெற வேண்டும் என்றால்
உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம்முடைய மூதாதையர் குலதெய்வங்களின் உயிராத்மாக்களைச்
சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும்.
அங்கே இணைத்து உடல் பெறும் உணர்வினைக்
கருக்கி விட்டால் அதே உணர்வின் தன்மை நமக்குள் வரும் போது நஞ்சின் தன்மை கருக்கிடும்
வல்லமையை நாமும் பெற முடியும்.
அதன் மூலம் நாம் எடுத்துக் கொண்ட மூச்சின்
அலைகள் உலகம் எங்கும் பரவச் செய்யும் நிலைகள் வரும். இந்த உலகின் தீமைகளை அகற்றிடும்
சக்தியாக அது செயல்படும்.
மெய் ஞானியான... அன்று பித்தனைப் போல்
இருந்த மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய “அந்த உணர்வின் சக்தியை” எல்லோரும்
பெற முடியும்.
ஒரு திட்டுவோரின் உணர்வை நமக்குள் பதிவு
செய்து கொண்டால் அவரின் நினைவு வந்து நம்மை அடக்குவது போல அருள் மகரிஷிகளின் அருள்
சக்திகளை... தீமைகளை அகற்றிய அந்த உணர்வின் தன்மையை நீங்கள் நினைவு கொள்ளும்போது...
தீமையை அகற்றும் சக்தியாகப் பெறுகின்றீர்கள்.
ஆகவே மறவாதீர்கள்... ஏதோ பேசுகின்றேன்...!
என்ற நிலைகள் வேண்டாம். உங்களுடன் ஒன்றிப் பேசும் போது தான் அந்த ஞானிகளின் உணர்வின்
நிலைகள் உங்களுக்குள் ஒன்றி வரும்.
உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள்
சக்தி பெற்று மன பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மத பேதமின்றி ஒற்றுமையுடன்
வாழ வேண்டும் என்ற உணர்வை ஒவ்வொருவரும் பரவச் செய்யுங்கள். உலக மக்களை ஒன்று சேர்க்கும்
நிலையாக அது உங்களால் முடியும்.
அதே போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் மேகங்களில் படர வேண்டும் நல்ல மழை நீர் பொழிய வேண்டும் என்று அந்த அருள்
சக்திகளை மேகங்களில் கலக்கச் செய்தால் அந்த உணர்வின் தன்மை மழையாகப் பெய்யும்போது தாவர
இனங்களில் இனம் புரியாத விஞ்ஞான அறிவால் தூவப்பட்ட நஞ்சின் தன்மைகளும் மறையும்.
இதற்கு முன் நம்மில் விளைய வைத்த நஞ்சின்
தன்மையை ஒடுக்கவும் இது உதவும். நமது குருநாதர் காட்டிய அருள் வழி இது தான்...!